ஆற்காடு நவாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
}}
{{தமிழக இசுலாமிய ஆட்சியாளர்கள்}}
'''ஆற்காடு நவாப்புகள்''' (''Arcot Nawab'') என அழைக்கப்படுபவர்கள் 1690 முதல் 1801 வரை தென்னிந்திய கருநாடக பகுதிகளை ஆண்ட மன்னர்கள் ஆவர். இவர்கள் தலைநகரம் இன்றைய [[சென்னை]] அருகில் உள்ள [[ஆற்காடு]] ஆகும். தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இவர்கள் பொதுவாக '''கருநாடக நவாப்புகள்''' எனவும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆட்சியின் பொழுதுதான் ஆங்கிலேயேர்கள் மொகலாய ஆட்சியாளர்கள் உதவியுடன் இந்தியாவில் காலூன்ற ஆரம்பித்தனர்.
 
== வரலாறு ==
ஆற்காடு நவாப்புகள் கலிபா உமர் இப்னு அல் கத்தாப் அவர்களின் வழிவந்தவர்கள் ஆவர். இவர்கள் 1692 ஆம் ஆண்டு மொகலாய சக்கரவர்த்தி [[அவுரங்கசீப்]]பால் கன்னட தென்னிந்திய பகுதிகளில் வரிவசூல் செய்ய நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட முதல் நவாப் சுல்பிக்கார் அலி என்பவராவார். இவர் மராத்திய, விஜயநகரப் பேரரசுகளை முறியடித்தார். மேலும் தனது ஆட்சிப்பகுதியை [[கிருஷ்ணா ஆறு]] வரை பரப்பினார். பின்பு வந்த நவாப் தோஸ்த் அலி (1732–1740) என்பவர் தனது அரசை 1736 இல் [[மதுரை]] வரையில் விரிவுபடுத்தினார்.<ref>[http://www.princeofarcot.org/nawabs.html Carnatic Nawabs]</ref>
 
இதன் பிறகு 1749 ஆம் ஆண்டு முகம்மது அலி வாலாஜா என்பவர் ஆட்சிக்கு வந்தார். நவாப் அரசர்களில் மிகவும் முக்கியமான இவரது காலமே நவாப்களின் பொற்காலம் ஆகும். இவரது ஆட்சி மிகவும் அமைதியாகவும், சமய சகிப்புதன்மை உள்ளதாகவும் விளங்கியது. இவர் தனது நாட்டின் அனேகமான பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டதோடு, அங்கு இருந்த அனைத்து கோவில்கள், மசுதிகள் மற்றும் தேவாலயங்களுக்கு நன்கொடைகளையும் அளித்தார். இன்றைய [[திருச்சிராப்பள்ளி]] [[ஸ்ரீரங்கம்]] நகரில் உள்ள ஸ்ரீரங்கநாதர் ஆலயமும் அவற்றில் ஒன்றாகும். இவர் 1765 இல் முகலாயப் பேரரசிற்கு கப்பம் கட்டுவதை மறுத்து, நவாப் ஆட்சியை சுதந்திர அரசாக அறிவித்தார்.
வரிசை 62:
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
* [http://web.archive.org/web/20020608231445/http://www.uq.net.au/~zzhsoszy/ips/a/arcot.html Indian Princely States]
* [http://www.hindu.com/mag/2004/02/01/stories/2004020100120200.htm The House of Arcot]
"https://ta.wikipedia.org/wiki/ஆற்காடு_நவாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது