கார்பனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 6:
==அமைப்பும் பிணைப்பும்==
கார்பனேட்டு அயனியே மிகவும் எளிமையான [[ஒட்சோகார்பன் எதிரயனி]] ஆகும். இது மூன்று ஒட்சிசன் அணுக்களால் சூழப்பட்ட ஒரு கார்பன் அணுவைக் கொண்டது. இது ''D''<sub>3h</sub> மூலக்கூற்றுச் சமச்சீருடன் கூடிய முக்கோணத் தள அமைப்புள்ளது. இதன் மூலக்கூற்றுத் திணிவு 60.01 [[டால்ட்டன் (அலகு)|டால்ட்டன்கள்]]. எதிர்மறையான இரண்டு [[முறையான மின்னேற்றம்|முறையான மின்னேற்றத்தைக்]] கொண்டது. இது, கார்போனிக் அமிலத்தை (H<sub>2</sub>CO<sub>3</sub>) இணை மூலமாகக் கொண்ட [[இருகார்பனேட்டு|ஐதரசன் கார்பனேட்டு (இருகார்பனேட்டு)]] அயனியின் (HCO<sub>3</sub><sup>−</sup>) இணை மூலம் ஆகும்.
 
 
கார்பனேட்டு அயனியின் லூயிசு அமைப்பில், எதிர்மறை ஒட்சிசன் அணுக்களுக்கான இரண்டு நீளமான ஒற்றைப் பிணைப்புகளும், நடுநிலை ஒட்சிசனுக்கான குட்டையான இரட்டைப் பிணைப்புக்களும் உள்ளன.
 
 
[[File:Carbonate-ion-localised-2D.png|100px|கார்பனேட்டு அயனியின் எளிமையான, உள்ளடங்கு லூயிசு அமைப்பு]]
 
 
மூன்று பிணைப்புக்களும் ஒரேயளவு நீளம் கொண்டவை, மூன்று ஒட்சிசன் அணுக்களும் முழுதொத்தவை என்னும் முடிவைத்தரும், அயனியின் கண்டறிந்த சமச்சீர் அமைப்புடன் மேற்படி அமைப்புப் பொருத்தமாகக் காணப்படவில்லை. ஒத்த இலத்திரன் நைத்திரேட்டில் உள்ளது போல் சமச்சீரை மூன்று அமைப்புகளுக்கும் இடையேயான [[உடனிசைவு]] மூலம் பெறமுடியும்.
 
 
[[File:Carbonate-ion-resonance-2D.png|400px|கார்பனேட்டு அயனியின் உடனிசைவு அமைப்பு]]
 
 
இந்த உடனிசைவை பகுதியிணைப்புக்களுடனும், உள்ளடங்கா மின்னேற்றங்களுடனும் கூடிய ஒரு மாதிரியாகச் சுருக்க முடியும்.
 
 
[[File:Carbonate-ion-delocalised-partial-charges-2D.png|120px|Delocalisation and partial charges on the carbonate ion]] [[File:Carbonate-3D-vdW.png|80px|Space-filling model of the carbonate ion]]
வரி 27 ⟶ 21:
==வேதியியல் இயல்புகள்==
பொதுவாக உலோகக் காபனேட்டைச் சூடாக்கும்போது அது காபனீரொட்சைட்டாகவும் குறித்த உலோகத்தின் ஒட்சைட்டாகவும் பிரியும். வளிமமான காபனீரொட்சைட்டு வெளியேற உலோக ஒட்சைட்டு எஞ்சும். இது நீற்றுதல் எனப்படும்.
 
 
நேர் மின்னேறிய அயனி M<sup>+</sup>, எதிர் மின்னேறிய அயனியின் ஒட்சிசன் அணுவுடன் சேரும்போது அயனிச் சேர்வையான கார்பனேட்டு உப்பு உண்டாகிறது:
வரி 38 ⟶ 31:
 
நியம வெப்பநிலையிலும் அமுக்கத்திலும், பெரும்பாலான கார்பனேட்டுக்கள் நீரில் கரையக்கூடியன அல்ல. அவற்றின் கரைதிறன் மாறிலி 1×10<sup>−8</sup> இலும் குறைவாக இருக்கும். [[சோடியம் கார்பனேட்டு|சோடியம்]], [[பொட்டாசியம் கார்பனேட்டு|பொட்டாசியம்]], [[அமோனியம் கார்பனேட்டு|அமோனியம்]] ஆகியவற்றின் கார்பனேட்டுக்களும், பல [[யுரேனியம் கார்பனேட்டு]]க்களும் இதற்கு விதிவிலக்கு.
 
 
நீர்க்கரைசலில் கார்பனேட்டு, இருகார்பனேட்டு, காபனீரொட்சைட்டு, காபோனிக் அமிலம் என்பன ஒன்றாக ஒரு இயங்கு சமநிலையில் இருக்கும். வலுவான கார நிலைமைகளில் காபனேட்டு அயனி கூடுதலாகவும், குறைந்த கார நிலைமைகளில் இருகாபனேட்டு அயனிகள் கூடுதலாகவும் இருக்கும். கூடுதலான அமில நிலைமைகளில் நீரில் கரைந்த காபனீரொட்சைட்டு (CO<sub>2</sub>(aq)) முதன்மை பெறும். நீரில் இது காபோனிக் அமிலத்துடன் சமநிலையில் இருக்கும். எனினும் சமநிலையில் காபனீரொட்சைட்டே கூடுதலாகக் காணப்படும். இதனால், சோடியம் கார்பனேட்டு காரம், சோடியம் இருகார்பனேட்டு மென்காரம், காபனீரொட்சைட்டு மென் அமிலம். பெரும்பாலான உலோகக் கார்பனேட்டுக்கள் நீரில் கரையாதன எனினும் அவ்வுலோகங்களின் இருகார்பனேட்டுக்கள் அவ்வாறல்ல. நீரில், கார்பனேட்டு, இருகார்பனேட்டு, காபனீரொட்சைட்டு, காபோனிக் அமிலம் என்பவை சமநிலையில் இருக்க, மாறுகின்ற வெப்பநிலை, அமுக்கம் போன்ற சூழ்நிலைகளில், கரையாத கார்பனேட்டுக்களைக் கொண்ட உலோக அயனிகளும் இருக்கும்போது, நீரில் கரையாத சேர்வைகள் உருவாகின்றன. இதனாலேயே குழாய்களின் உள்ளே உப்புப் படிவுகள் ஏற்படுகின்றன.
 
==கார்பனேட்டு உப்புக்கள்==
 
* கார்பனேட்டு மேலோட்டம்:
{{Carbonates}}
 
{{கனிம கரிமச் சேர்மங்கள், அயனிகள்}}
 
[[பகுப்பு:கார்பனேட்டுகள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/கார்பனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது