யாழ்ப்பாண வைபவமாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''யாழ்ப்பாண வைபவமாலை''' என்பது [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] வரலாற்றைக் கூறவென எழுந்த ஒரு நூலாகும். 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[மயில்வாகனப் புலவர் (வைபவமாலை ஆசிரியர்)|மயில்வாகனப் புலவர்]] என்பவரால், அக்காலத்திலிருந்த ஒல்லாந்த அதிகாரியொருவரின் வேண்டுகோளுக்கிணங்க இது எழுதப்பட்டதாக, இந்நூலிலுள்ள [[சிறப்புப் பாயிரம்|சிறப்புப் பாயிர]]ச் செய்யுளொன்றினால் அறியப்படுகிறது.
 
[[கைலாயமாலை]], [[வையாபாடல்]], பரராசசேகரன் உலா மற்றும் இராசமுறை போன்ற நூல்களை முதல் நூல்களாகக் கொண்டே வைபவமாலையை இயற்றினாரென்று மேற்படி செய்யுளில் புலவர் எடுத்துக் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தையாண்ட [[ஆரியச் சக்கரவர்த்திகள்]] கால வரலாறுபற்றிக் கூடிய அளவு தகவல்களைக் கொண்டுள்ள தற்போது கிடைக்கக்கூடிய நூல் இதுவேயாகும். எனினும் மேற்படி காலப்பகுதியின் இறுதியின் பின் 150 தொடக்கம் 200 ஆண்டுகள் வரை கழிந்த பின்னரே இந் நூல் எழுதப்பட்ட காரணத்தால், பல்வேறு நிகழ்வுகளின் காலங்கள் தொடர்பிலும், மேலும் பல விடயங்களிலும், பிழைகளும், குழப்பங்களும் நேர்ந்துள்ளதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனினும் யாழ்ப்பாண வரலாறு தொடர்பில் இந் நூலின் பெறுமதியைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாண_வைபவமாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது