மானிப்பாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''மானிப்பாய்''', யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமப் ...
 
No edit summary
வரிசை 1:
'''மானிப்பாய்''', [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]], வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இது [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரத்தில்]] இருந்து சுமார் 5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. யாழ் நகரில் இருந்து வடமேற்குத் திசையில் செல்லும் முக்கிய வீதியான மானிப்பாய் வீதி இவ்வூருக்குச் செல்கிறது. [[சண்டிலிப்பாய்]], [[நவாலி]], [[சுதுமலை]], [[உடுவில்]], [[ஆனைக்கோட்டை]] ஆகிய ஊர்கள் மானிப்பாயின் எல்லைகளில் அமைந்துள்ளன. [[யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சியின்ஆட்சி]]யின் தொடக்க காலத்தில் அமெரிக்க மிஷனரிகளின் மையங்களில் ஒன்றாக இது விளங்கியது. இம் மிஷனின் சார்பில் அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவரான [[கிறீன்]] என்பார் இங்கே ஒரு வைத்தியசாலையை நிறுவியதுடன், மாணவர்களுக்கு மேனாட்டு மருத்துவத்திலும் பயிற்சியும் கொடுத்து வந்தார். இது கிறீன் நினைவு வைத்தியசாலை என்னும் பெயருடன் இன்றும் செயற்பட்டு வருகிறது.
 
 
==பாடசாலைகள்==
 
இவர்கள் சில [[பாடசாலை]]களையும் இங்கே நிறுவினர். இப் பாடசாலைகள் தவிரப் பிற்காலத்தில் நிறுவப்பட்ட பல பாடசாலைகளும் இங்கே உள்ளன. இவற்றுள் [[மானிப்பாய் இந்துக் கல்லூரி]], [[மானிப்பாய் மகளிர் கல்லூரி]] என்பன முக்கியமானவை. இவை யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
 
 
==வழிபாட்டு இடங்கள்==
 
இது கிறிஸ்தவரின் சமயப் பிரசார மையமாக இருந்துவந்ததால் இங்கே அச் சமயத்தவரின் தேவாலயங்கள் பல காணப்படுகின்றன. தவிர பல இந்துக் கோயில்களும் இங்கே உள்ளன.
 
 
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/மானிப்பாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது