குனியமுத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
வரிசை 65:
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 95,924 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இங்கு 1,000 ஆண்களுக்கு 1,001 பெண்கள் என்கின்ற பாலியல் விகிததில் உள்ளனர். குனியமுத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% விழுக்காடு ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%விழுக்காடு , பெண்களின் கல்வியறிவு 70% விழுக்காடு ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விழுக்காடை விட அதிகமானது. குனியமுத்தூர் மக்கள் தொகையில் 10% விழுக்காட்டினோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மொத்த மக்கள் தொகையில் 10.08% விழுக்காடு தாழ்த்தப்பட்ட மக்களும், 00.06% விழுக்காடு பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர்.<ref name="dashboard">{{cite web|title=Census Info 2011 Final population totals|url=http://www.censusindia.gov.in/2011census/censusinfodashboard/index.html|publisher=Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India|year=2013|accessdate=26 January 2014}}</ref>
இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் இந்துக்கள். இவர்களுக்கு அடுத்த படியாக பார்த்தால் இஸ்லாமியர் அதிகம். மூன்றாவதாக கிருத்துவர்கள் வசிக்கின்றனர். இங்கு வாழும் மக்கள் பெரும்பாலானோர் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். தமிழுக்கு அடுத்து மலையாள மொழி அதிகம் பேசுவோர் உள்ளனர். சிறு அளவில் தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது மற்றும் ஆங்கிலம் பேசும் மக்கள் உள்ளனர்.
 
== சட்டமன்ற உறுப்பினர் ==
[[படிமம்:K.P.RAJU AND S.P.VELUMANI.jpg|thumb|left|<sub>கே.பி.ராஜு & எஸ்.பி.வேலுமணி</sub>]]
இந்திய விடுதலைக்கு பின் இந்த ஊரை சார்ந்த எவரும் சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ 1991-க்கு முன்பு வரை இல்லை.
 
அதன் பின் நடந்த சட்டமன்ற பொது தேர்தல் 1991-ல் இந்த பகுதியை சார்ந்த கே.பி.ராஜு அ.இ.அ.தி.மு.க சார்பாக போட்டியிட்டு தமிழக 10-ஆவது சட்டமன்றத்தின் உறுப்பினாராக தேர்தெடுக்கப்பட்டார்.
 
அதன் பின் 2006-ல் நடந்த 13-ஆவது சட்டமன்ற பொது தேர்தல்லில் அ.இ.அ.தி.மு.க. சார்பாக குனியமுத்தூர், சுகுணாபுரம் பகுதியை சேர்ந்த பழனிசாமியின் மகன் எஸ்.பி.வேலுமணி போட்டியிட்டு பேரூர் (107) தொகுதியிலிருந்து முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்த்டுக்கபட்டார். அடுத்து 2011-ல் நடந்த 14-ஆவது சட்டமன்ற பொது தேர்தல்லில் மீண்டும் எஸ்.பி.வேலுமணி அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக தொண்டாமுத்தூர்(119) தொகுதியிலிருந்து தேர்தெடுக்கப்பட்டு சிறப்பு திட்ட அமலாக்கப்பிரிவு அமைச்சராக பதவி ஏற்றார். சிறிது இடைவெளிக்கு பின் தொழில் துறை அமைச்சராகவும், அதன் பிறகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சராக பணியாற்றினார். 2016-ல் நடந்த 15-ஆவது சட்டமன்ற பொது தேர்தல்லில் மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தொண்டாமுத்தூர்(119) தொகுதியிலிருந்து தேர்தெடுக்கப்பட்டு இரண்டாவது முறையாக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பணியாற்றுகிறார்.
 
== புவிசார் எல்லைகள் ==
இந்த ஊரின் எல்லைகளாக, கிழக்கே குறிச்சி குளமும், மேற்கே பேரூர் குளமும், வடக்கே ஆற்றுப்பாலமும், தெற்கே சுகுனாபுரமும் எல்லைகளாக கொண்டுள்ளது. குனியமுத்தூரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தெற்கே பயணித்தால் கேரளா மாநில எல்லையான பாலக்காட்டுக் கணவாயை அடையலாம். குனியமுத்தூரின் தெற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் புகழ் பெற்ற மதுக்கரை ஏ.சி.சி. (அசோசியட் சிமெண்ட் கம்பெனி) சிமெண்ட் தொழிற்சாலை அமைந்துள்ளது. சேலம்-கொச்சி NH47 தேசிய நெடுஞ்சாலை இந்த பகுதி வழியாக செல்கிறது.
 
== சட்டமன்ற உறுப்பினர்உறுப்பினர்கள் ==
[[படிமம்:K.P.RAJU AND S.P.VELUMANI.jpg|thumb|left|<sub>கே.பி.ராஜு & எஸ்.பி.வேலுமணி</sub>]]
1991 தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்த பகுதியை சார்ந்த கே. பி. ராஜு அ.இ.அ.தி.மு.க சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006, 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் அ.இ.அ.தி.மு.க. சார்பாக இவ்வூரைச் சேர்ந்த [[எஸ். பி. வேலுமணி]] பேரூர், தொண்டாமுத்தூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
== அஞ்சலக எல்லை ==
"https://ta.wikipedia.org/wiki/குனியமுத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது