தமிழ் நாட்டார் பாடல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
க்
வரிசை 2:
தமிழில் அமையும் [[நாட்டார் பாடல்|நாட்டார் பாடல்கள்]] '''தமிழ் நாட்டார் பாடல்கள்''' எனப்படும்.
 
[[தமிழ்|தமிழில்]] முதலில் எழுந்த இலக்கியமான [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரமும்]] ஒரு பழைய கதைப்பாடலை ஆதாரமாகக் கொண்டே எழுந்திருக்க வேண்டும். [[சங்ககால இலக்கியம்|சங்ககால இலக்கியமான]] [[ஐந்திணை]] தழுவிய அகப்பாடல்களுக்கும், நாட்டு மகளிடையேமக்களிடையே வழங்கிய காதற்பாடல்களே முன்னோடிகள் எனலாம். சிலப்பதிகாரத்தில் வரும் கானல் வரி, வேட்டுவ வரி, குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை என்பனவும் நாட்டார் இசைமரபின் தொடர்ச்சியாகவும் மக்கள் வாழ்க்கை முறையில் பெறும் முக்கியத்துவத்தைத் தெளிவு படுத்தும் விதமாகவும் இருக்கின்றன. [[இளங்கோ அடிகள்|இளங்கோவடிகளின்]] துன்ப மாலைப் பகுதியில் வழங்கும் பாடல் கூறுகளும், [[யாழ்ப்பாண இசை|யாழ்ப்பாண இசை]] மரபில் வழங்கும் [[ஒப்பாரிப்பாடல்]]களும் ஓசை அமைப்பில் ஒருமைப்பாடு உடையன. [[பெரியாழ்வார்]] [[கண்ணன்|கண்ணனை]] குழந்தையாக [[உருவகம்|உருவகப்படுத்திய]] தாலாட்டு [[தமிழ் நாடு|தமிழ் நாட்டு]]த் தாய்மார்களிடையே வழங்கி வந்த தாலாட்டுப் பாடல்களையொத்தே உருவாக்கப்பட்டது.
நாட்டுபாடலில் ஈடுபாடு காட்டிய [[பாரதியார்]] தமது பல்வேறு பாடல்களில் நாட்டுப்பாடலின் அமைப்பையும் சந்தத்தையும் பயன்படுத்துகின்றார். (எ-டு) [[பாஞ்சாலி சபதம்]]. இவருக்கு முன் [[கோபாலகிருஷ்ண பாரதியார்]], [[வள்ளலார்|இராமலிங்க சுவாமிகள்]] முதலியோர் [[கும்மி]]யாட்டம் போன்றவற்றிற்கான நாட்டுப்படல்களை இயற்றியுள்ளனர். பெரும்பாலும் எழுத்தறிவு பெறாத பொதுமக்களால் இயற்றப்பெறுவதால் நாட்டார் பாடல்களில் வட்டார மொழி வழக்குகளே மிகுந்து காணப்படும். மேலும், பிற இலக்கியங்களைப் போன்றே நாட்டார் பாடல்களில் அவற்றின் காலத்தில் நிகழ்ந்த பெருநிகழ்வுகளும், இருந்த சூழல்களும், வாழ்க்கைமுறைகளும், பண்பாடும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். சில வேளைகளில் பிற இலக்கியங்களில் காணப்படாத காலப்பதிவுகளும் மிகுந்து காணப்படும். எடுத்துக்காட்டாக, [[தாது ஆண்டுப் பஞ்சம்|தாது ஆண்டுப் பஞ்சத்தின்போது]] [[தமிழர்]] திருமணம் முதலிய சடங்குகள் எவ்வாறு இருந்தன போன்ற தகவல்களையும் இவற்றில் காணலாம்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_நாட்டார்_பாடல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது