வளைகாப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:Valaikaappu.jpg|right|thumb|250px|வளைகாப்பு]]
[[File:Valaikaappu 002.jpg|right|thumb|250px|வளைகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ள வளையல்கள்]]
 
'''வளைகாப்பு''' என்ற [[இந்து சமயம்|இந்து சமயச் சடங்கு]] கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யும் ஓர் சடங்கு ஆகும். இச்சடங்கினை ''சீமந்தம்'' என்றும் அழைக்கின்றர். முதல்முறையாகக் கருவுற்றவர்களுக்கு 5 ஆம் மாதம் 7ஆம் மாதம் 9 ஆம் மாதம் ஆகிய காலங்களில் ஏதாவது ஒன்றில் அவரவர் குடும்ப வழக்கப்படி செய்கிறார்கள். மணப்பெண் போலவே பெண்களை அலங்கரித்து கைநிறைய வளையல்களை அடுக்குகிறார்கள். பெண்களே பங்கேற்கும் இவ்விழாவில் மகப்பேறடைந்த தாய்மார்கள் வந்திருந்து புதியதாக தாய்மை எய்தியிருக்கும் பெண்ணிற்கு வளையல்கள் அணிவதும் தாங்களும் அணிந்து கொள்வதும் நிகழும்.
 
இளஞ்சிசு உயிர் வாழ்தல் வீதம் குறைந்தும் மகப்பேறு கால மரணவீதம் கூடுதலாகவும் இருந்த பண்டைக்காலத்தில் சூலுற்றப் பெண் நல்ல முறையில் ஈன்றெடுக்க வேண்டும் என இச்சடங்கு வந்திருக்கலாம்.<ref>[http://thamizhoviya.blogspot.com/2009/04/blog-post_6959.html வளைகாப்பு (பும்சுவன சீமந்தம்)]</ref> மற்றொரு கருத்தாக ஆறாம் மாதம் முதல் குழந்தையின் கரு வெளியுலகை உணரத் தொடங்குகிறது; அக்காலத்தில் அதனை வரவேற்கும் வகையாக இந்தச் சடங்கு நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.<ref>[http://hayyram.blogspot.com/2010/11/2.html வளைகாப்பு என்னும் வரவேற்பு]</ref>
"https://ta.wikipedia.org/wiki/வளைகாப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது