உமைத் பவான் அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
உமைத் பவன் அரண்மனை , ராஜஸ்தான், இந்தியா , ஜோத்பூர் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தனியார் வீடுகளில் ஒன்றாகும். இந்த மாளிகையின் 347 அறைகளைக் கொண்டுள்ளது. அரண்மனையின் ஒரு பகுதி தாஜ் ஹோட்டல் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. மகாராஜா உமைத் சிங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. அரண்மனையின் ஒரு பகுதியில் அருங்காட்சியகம் செயல்படுகிறது.
 
இந்த அரண்மனை முழுவதுமே ஜோத்பூரில் மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கும் 'சித்தார்' என்ற மஞ்சள் நிற பாலைவன கல்லினால் கட்டப்பட்டிருப்பதால் இங்குள்ள மக்கள் இந்த அரண்மனையை 'சித்தார் அரண்மனை' என்ற பெயராலும் அழைக்கின்றனர். இந்த அரண்மனையின் கட்டுமான பணிகள் 1929ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி துவங்கப்பட்டு கிட்டத்தட்ட பதிமூன்று14 வருடங்கள் நடைபெற்றிருக்கின்றன. 1943ஆம் ஆண்டு தான் இந்த அரண்மனை கட்டிமுடிக்கப்பட்டிருக்கிறது. இந்த உமைத் பவான் அரண்மனை இப்போது மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த அரண்மனையின் ஒரு பகுதி 1972 ஆம் ஆண்டு முதல் 'தாஜ்' குழுமத்தினால் ஆடம்பர தங்கும் விடுதியாக மாற்றப்பட்டு பராமரிக்கப்படுகிறது. அதை தவிர மற்ற ஒரு பகுதியில் ஜோத்பூர் அரச குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் பழங்காலத்தின் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் கார்கள் போன்றவை கொண்ட அருங்காட்சியகம் ஒன்றும் இதனுள் செயல்பட்டு வருகிறது.
 
அரச குடும்பத்தினர் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட அருங்காட்சியகம் ஒவ்வொரு நாளும் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/உமைத்_பவான்_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது