முகலாயக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 20:
[[பேரரசர் ஔரங்க சீப்|ஔரங்கசீப்]]பின் (1658–1707) காலத்தில், கட்டிடங்களில் செவ்வகக் குற்றிகளாக வெட்டப்பட்ட கற்களினதும், சலவைக் கற்களினதும் பயன்பாடு குறைந்து, [[செங்கள்|செங்கற்களும்]], கண்ட கற்களும் பயன்பாட்டுக்கு வந்தன. இவற்றின்மேல் [[சாந்து|சாந்தினால்]] அழகூட்டல்கள் செய்யப்பட்டன. முன்னரே கட்டப்பட்ட லாகூர்க் கோட்டையில் சில கட்டிட வேலைகளை இவர் செய்துள்ளார். அங்குள்ள 13 நுழைவாயில்களுள் ஒன்று ஔரங்கசீப்பினால் கட்டப்பட்டதே. இது பின்னர் இவரது பெயரில் "அலாம்கீர்" என வழங்கப்பட்டது. இவர் காலத்தில் கட்டப்பட்ட மிகக் கவர்ச்சியான கட்டிடம், லாகூரில் 1674 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட [[பாத்சாகி மசூதி]] ஆகும். லாகூர்க் கோட்டைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள இது, தொடராகச் சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டு வந்த பல பெரிய மசூதிகளில் கடைசியானதாகும். இது சா சகானால் [[சாசகானாபாத்]]தில் கட்டப்பட்ட மசூதியின் வடிவமைப்பிற்கு நெருக்கமாக ஒத்துள்ளது.
 
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
[[பகுப்பு:முகலாயக் கட்டிடக்கலை]]
"https://ta.wikipedia.org/wiki/முகலாயக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது