சாமிக்கண்ணு வின்சென்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
== சாமிக்கண்ணு வின்சென்ட் ஓர் அறிமுகம் ==
[[File:சாமிகண்ணு வின்சென்ட்(பிள்ளை).jpg|thumb|left|தென் இந்திய சினிமாவின் தந்தை சாமிக்கண்ணு வின்சென்ட்(பிள்ளை)தோற்றம் 18 ஏப்ரல் 1883 - மறைவு :22 ஏப்ரல் 1942]]
'''சாமிக்கண்ணு வின்சென்ட்''' அவர்கள் 1883 ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி கோவை கோட்டைமேடு பகுதியில் பிறந்தார். சாமிக்கண்ணு வின்சென்ட் தனது 22-ஆவது அகவையில் [[தென்னக இரயில்வே|தென்னக இரயில்வே]] [[திருச்சி]] பொன்மலை புகைவண்டி நிலையத்தில் டிராப்ட்ஸ்மேனாகப் மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் 19௦5-ம் ஆண்டு டியூபாண்ட் என்கிற பிரெஞ்ச் திரைப்படவியலாளரை சந்திக்க நேர்ந்தது அவருக்கு. டியூபாண்ட்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தன் தாய்நாட்டிற்கு திரும்புவதற்கு இருந்த டியூபாண்ட் தனது திரைப்பட புரொஜக்டர், படச்சுருள் மற்றும் பிற சாதனங்களை விற்க முனைந்தார். இதனை அறிந்த சாமிக்கண்ணு வின்சென்ட் மிகுந்த சிரமப்பட்டு திரட்டிய ரூபாய்.2,250/- அவரிடம் கொடுத்து உபகரணங்களை விலைக்கு வாங்கினார். தன்னிடம் உள்ள புரொஜக்டர் உதவியால் 'ஏசுவின் வாழ்க்கை' என்ற படத்தை தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் சென்று காண்பித்தார். மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. அவரது அரிய முயற்சி புது முயற்சியாக “டென்ட் கொட்டகை”யை உருவாக்கினார். ஒவ்வொரு ஊராய் சென்று டென்ட் அமைத்து புரொஜக்டர், திரைச்சீலை உதவியால் படங்களை காண்பித்தார் தென் இந்திய சினிமாவின் தந்தை சாமிக்கண்ணு வின்சென்ட்(பிள்ளை).
[[படிமம்:மணக்கோலத்தில் சாமிகண்ணு வின்சென்ட் தம்பதியர்.jpg|thumb|left|மணக்கோலத்தில் சாமிகண்ணு வின்சென்ட் தம்பதியர்]]
[[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படத் துறையின்]] முன்னோடிகளில் ஒருவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் [[சலனப்படம்|சலனப் படங்களைத்]] திரையிடத் தொடங்கிய இவர் மிக எளிய குடும்பத்திலிருந்து வந்தவர். பின்னாளில் [[கோவை|கோயமுத்தூரில்]] மூன்று திரையரங்குகளை நடத்தினார்; பல தமிழ்ப் படங்களையும் தயாரித்தார். கோவையில் முதன் முதலில் மின்சாரத்தால் இயங்கும் அச்சகத்தையும், அரிசி ஆலையையும், நிறுவியவர் இவரே. கோவையின் முதல் மின்சார உற்பத்தி ஆலையும் இவரால் நிறுவப்பட்டதே.<ref>[http://beta.thehindu.com/arts/cinema/article417856.ece He brought cinema to South]</ref><ref>[http://www.hindu.com/thehindu/mp/2007/08/30/stories/2007083051060100.htm Unsung heroes Sound bytes]</ref> தென்னிந்தியாவில் முதல் நிரந்தர திரையரங்கான வெரைட்டி ஹால் என்ற திரையரங்கு உருவாக்கி படங்களை திரையிடத் தொடங்கினார். ( இந்த காலக்கட்டத்தில் சென்னை கெய்ட்டி, கிரவுன் தியேட்டர் எல்லாம் தற்காலிக கூடார கொட்டகைகளாகத்தான் இருந்தது) கோவையில் இவர் பெயரில் வின்சென்ட் சாலை அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சாமிக்கண்ணு_வின்சென்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது