குனியமுத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 140:
 
== சட்டமன்ற உறுப்பினர்கள் ==
[[படிமம்:K.P.RAJU AND S.P.VELUMANI.jpg|thumb|left|400px|<sub>கே.பி.ராஜு & எஸ்.பி.வேலுமணி</sub>]]
1991 தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்த பகுதியை சார்ந்த [[கே. பி. ராஜு]] அ.இ.அ.தி.மு.க சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006, 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் அ.இ.அ.தி.மு.க. சார்பாக இவ்வூரைச் சேர்ந்த [[எஸ். பி. வேலுமணி]] பேரூர், தொண்டாமுத்தூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
குனியமுத்தூர், சுகுணாபுரம் பகுதியை சார்ந்த [[எஸ். பி. வேலுமணி]] 2001-ல் குனியமுத்தூர் நகராட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 2006 வரை அந்தப் பதவியில் இருந்தார். அதன் பின் 2006-இல் நடந்த 13-ஆவது சட்டமன்றத் தேர்தலில் பேரூர் (107) தொகுதியிலிருந்து அ.இ.அ.தி.மு.க.சார்பாக முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name=2011E/> இதையடுத்து 2011-ல் நடந்த 14-ஆவது சட்டமன்றத் தேர்தலில் தொண்டாமுத்தூர் (119) தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக போட்டியிட்டு 53 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டார்.
 
புதிதாக உருவாக்கப்பட்ட துறையான சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறையின் அமைச்சராக 2011 மே 16-ஆம் தேதி பொறுப்பேற்று சூன் 26-ஆம் தேதி வரை அந்தப் பதவியை வகித்தார்.<ref name=dinamani/> சிறிது இடைவெளிக்கு பின் தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
 
பிறகு மே 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு கோவை புறநகர் மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்ட அவருக்கு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் பதவி கிடைத்தது.<ref name=dinamani/> சட்டப் பேரவையின் பதவிக் காலம் முடிவடையும் வரையிலும் இதே பொறுப்பில் அவர் நீடித்தார்.
 
2016இல் நடந்த 15-ஆவது சட்டமன்றத் தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிட்டு 64 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய அமைச்சரவையில் இரண்டாவது முறையாக உள்ளாட்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.<ref name=dinamani/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குனியமுத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது