மா. நா. நம்பியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 27:
நவாப் கம்பனியின் ''ராம்தாஸ்'' என்ற நாடகத்தை [[1935]] ஆம் ஆண்டு [[பக்த ராம்தாஸ்|பக்த ராம்தாசு]] என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். இதன் படப்பிடிப்புக்காக [[பம்பாய்]] சென்றார்கள். நம்பியாரும் கூடவே சென்றார். இப்படத்தில் அக்கண்ணா, மாதண்ணா என்ற நகைச்சுவை வேடங்களில் மாதண்ணா வேடத்தில் நம்பியார் நடித்தார். இதுவே இவர் நடித்த முதல் திரைப்படமாகும். அக்கண்ணாவாக [[டி. கே. சம்பங்கி]] நடித்தார். இப்படத்தில் நடித்ததற்காக நம்பியாருக்கு நாற்பது ரூபாய் கொடுக்கப்பட்டது.
 
[[படிமம்:Nambiar Vidyapathy.jpg|leftright|thumb|200px|[[வித்யாபதி]] ([[1946]]) திரைப்படத்தில் நாராயண பாகவதராக நம்பியார், [[எம். எஸ். எஸ். பாக்கியம்|எம்.எஸ்.எஸ்.பாக்கியத்துடன்]]]]
பல இடங்களிலும் சுற்றிவிட்டு [[தஞ்சாவூர்]] வந்தது நவாப்பின் நாடகக் குழு. தஞ்சையில் நடந்த ''ஏசுநாதர்'', ''ராஜாம்பாள்'' போன்ற நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். அப்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட மாதச் சம்பளம் மூன்று ரூபாய். அவ்வேளையில் ''கிருஷ்ணலீலா'' நாடகத்தில் நடித்து வந்த [[கே. சாரங்கபாணி]]க்குக் கையில் ஏதோ கோளாறு ஏற்படவே சாரங்கபாணியின் வேடங்கள் அனைத்து நம்பியாருக்குக் கிடைத்தது. [[1939]] இல் இருந்து பெரிய நடிகர்கள் வாங்கக்கூடிய பதினைந்து ரூபாய் சம்பளம் வாங்கினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/மா._நா._நம்பியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது