மா. நா. நம்பியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

293 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 40:
 
===நாடக கம்பேனி===
தொடர்ந்து படிக்க அவரது பொருளாதாரம் இடம் கொடாமையால், தனது 13 வயதிலேயே சென்னை [[நவாப் ராசமாணிக்கம்]] நாடகக் குழுவில் சேர்ந்து <ref>[http://www.vikatan.com/anandavikatan/2008-dec-03/vikatan-pokkisham/43318.art கோபமா..? அப்படின்னா..? எம்.என்.நம்பியார் - சிறப்புக் கட்டுரை ஆனந்த விகடன் - 03 Dec, 2008]</ref> [[சேலம்]], [[மைசூர்]] எனச் சுற்றினார். ஆனாலும் நாடகங்களில் நடிக்க சந்தர்ப்பம் வரவில்லை. நாடகக் கம்பனியின் சமையலறையில் உதவியாளராகவே இருந்தார். வேடம் போட்டால் தான் சம்பளம். இலவசச் சாப்பாடும், படுக்க இடமும் கிடைத்தது.
 
நவாப் கம்பனியின் ''ராம்தாஸ்'' என்ற நாடகத்தை [[1935]] ஆம் ஆண்டு [[பக்த ராம்தாஸ்|பக்த ராம்தாசு]] என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். இதன் படப்பிடிப்புக்காக [[பம்பாய்]] சென்றார்கள். நம்பியாரும் கூடவே சென்றார். இப்படத்தில் அக்கண்ணா, மாதண்ணா என்ற நகைச்சுவை வேடங்களில் மாதண்ணா வேடத்தில் நம்பியார் நடித்தார். இதுவே இவர் நடித்த முதல் திரைப்படமாகும். அக்கண்ணாவாக [[டி. கே. சம்பங்கி]] நடித்தார். இப்படத்தில் நடித்ததற்காக நம்பியாருக்கு நாற்பது ரூபாய் கொடுக்கப்பட்டது.
37,549

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2078454" இலிருந்து மீள்விக்கப்பட்டது