சித்தார்த் விபின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 19:
| notable_instruments = பியானோ, கீபோர்ட்
}}
'''சித்தார்த் விபின் ( Siddharth Vipin )''' என்பவர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர்  ஆவார்.  இவர்  முதன்மையாக  தமிழ்த்  திரைப்படங்களில்  பணியாற்றியுள்ளார். இவர் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ''[[இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (திரைப்படம்)|இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா]]'' (2013) மற்றும் ''[[வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்]]'' (2014) போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.<ref>http://behindwoods.com/tamil-music-director/siddharth-vipin/siddharth-vipin-interview.html</ref>
 
== வாழ்க்கை ==
சித்தார்த்  கொச்சியைச்  சேர்ந்த  கொங்கனி  குடும்பத்தைச்  சேர்ந்தவர்  என்றாலும் தாயின் ஊரான சேலத்தில் பிறந்தவர்.  இவரது  பள்ளிப்படிப்பை ஓமனின் [[மஸ்கத்|மஸ்கட்டில்]]  முடித்தார். கல்லூரிப் படிப்பை சென்னை [[இலயோலாக் கல்லூரி, சென்னை|லயோலா கல்லூரியில்]] பி. காம்  பட்டத்தை  முடித்தார் உடன் தொழில்முறை ஒலிப் பொறியாளர்  படிப்பை எஸ்ஏஇ  கல்வி  நிறுவனத்தில்  முடித்தார்.  இவரின்  தந்தையான  விபின்  சந்ரா 2005 இல் காலமானார்.
 
== பணிகள் ==
ஒலிப் பொறியியல் இறுதியாண்டு படிக்கும்போதே தன்னுடைய நண்பரான குணால் மூலமாக ஹாலிவுட் படங்களுக்கு சவுண்ட் எஃபக்ட்ஸ் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.  குறிப்பாக 2007இல் சென்னையில் இருந்துகொண்டே பிரபல ஹாலிவுட் நடிகர் ரஸ்ஸல் குரோ நடித்த ‘3.10 டூ யூமா’ , வால்ட் டிஸ்னியின் ‘அண்டர் டாக்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களுக்கு சவுண்ட் எஃபக்ட்ஸ் செய்தார்.
 
இதன்பிறகு ராஜிவ் காந்தியின் படுகொலை சம்பவத்தை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் மேஜர் ரவி இயக்கிய ‘மிஷன் 90 டேஸ்’ படத்துக்குச் சவுண்ட் எஃபக்ட்ஸ் செய்து தரும் வாய்ப்பு வந்தது.  தொடர்ந்து, தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் விளம்பரப் படங்களுக்கு இசையமைத்தார். 2008இல் மேஜர் ரவி இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘குருஷேக்த்திரா’வில் இசையமைப்பாளராக அறிமுகமானார். 2012இல் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின்  வழியாக தமிழ் சினிமாவில் இடம்பிடித்தார். 2015-ல் வெளியான  சேரனின்  இயக்கத்தில்  வெளியான ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’,  ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்துக்கு  இசையைக் கொடுத்திருந்தார். சுந்தர்.சி.யின் உதவி இயக்குநர் வெங்கட்ராகவன் இயக்கிய ‘முத்துன கத்திரிக்காய்’ படத்துக்கு இசையமைத்துள்ளார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/lifestyle/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/article8654485.ece | title=புறப்படும் புதிய இசை 9: விளையாட்டுப் பிள்ளை அல்ல! | publisher=தி இந்து (தமிழ்) | date=2016 மே 27 | accessdate=21 சூன் 2016 | author=ம. சுசித்ரா}}</ref>
== திரைப்பணிகள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2079357" இருந்து மீள்விக்கப்பட்டது