அக்கினேனி நாகார்ஜுனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
== ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் குடும்பம் ==
நாகார்ஜூனா 1959 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி [[சென்னை]]யில் பிறந்தார்.
இவர் [[தெலுங்கு]] நடிகர் [[அக்கினேனி நாகேஸ்வர ராவ்|அக்கினேனி நாகேசுவர ராவ்]] மற்றும் அன்னபூர்ணா அக்கினேனியின் மகனாவார். அவர்களின் ஐந்து குழந்தைகளில் நாகார்ஜூனா கடைசியாவார். பின்னர் அவரது குடும்பம் ஐதராபாதத்திற்கு குடிபெயர்ந்தது அங்கு தனது ஆரம்பக் கால கல்வியை ஐதராபாத் பொதுப்பள்ளியிலும் பின்னர் பள்ளி இடைநிலைக் கல்வியை லிட்டில் பிளவர் இளநிலைக்கல்லூரியிலும் கற்றார்.
 
நாகார்ஜூனா இருமுறை திருமணம் செய்துள்ளார். அவரது முதல் மனைவி, லஷ்மி ராமா நாயுடுவை 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி மணந்தார். அவர் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் டி. ராமா நாயுடுவின் மகளும் தெலுங்கு திரை நட்சத்திரம் வெங்கடேசின் சகோதரியுமாவார். நாகார்ஜூனா லஷ்மியினரின் மகன் நாக சைத்தன்யா (1986 ஆம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி பிறந்த இடம் - [[ஹைதராபாத்]]) ''ஜோஷ்'' திரைப்படத்தின் மூலம் நடிக்கத் துவங்கினார், அது 2009 ஆம் ஆண்டில் செப்டம்பர் 5 ஆம் திகதி வெளிவந்தது.
"https://ta.wikipedia.org/wiki/அக்கினேனி_நாகார்ஜுனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது