காந்தார நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox Former Country |conventional_long_name = காந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

19:12, 24 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

காந்தார நாடு (Gandhara Kingdom) (பஷ்தூ: ګندارا, உருது: گندھارا, Avestan: Vaēkərəta, சமக்கிருதம்: गन्धार) பரத கண்டத்தின் வடமேற்கில் அமைந்த பண்டைய பாரத நாடுகளில் ஒன்றாகும். காந்தார நாடு தற்கால பாகிஸ்தான் நாட்டின் புருசபுரம் முதல் சுவாத் சமவெளி வரையான பகுதிகளையும், ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் மாகாணம் மற்றும் கந்தகார் மாகாணம் பகுதிகளையும் கொண்டிருந்தது.

காந்தார நாடு
கி மு 1500–கி மு 535
காந்தார நாடு
காந்தார நாடு
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்பிந்தைய வேத காலம்
• தொடக்கம்
கி மு 1500
• முடிவு
கி மு 535
பின்னையது
}
[[அகாமனிசியப் பேரரசு]]
தற்போதைய பகுதிகள் ஆப்கானித்தான்
 பாக்கித்தான்
காந்தார நாடு

மகாபாரதத்தில்

காந்தார நாடு மகாபாரத காவியத்தில் காந்தார நாட்டையும், அதன் மன்னர்களையும் விரிவாக குறித்துள்ளது. காந்தார நாட்டின் மன்னன் சுவலனின் மகன் இளவரசன் சகுனி ஆவார். சகுனியின் மகன் பெயர் உல்லூகன். காந்தார இளவரசி காந்தாரி, குரு நாட்டின் மன்னர் திருதராட்டிரனை மணந்து, கௌரவர் எனும் நூறு மகன்களையும்; துச்சலை எனும் ஒரு மகளை ஈன்றாள். துரியோதனன் சார்பாக சொக்கட்டான் காய்களை உருட்டிய சகுனியின் திறமையால், சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்றனர். சூதாட்ட ஒப்பந்தப்படி பாண்டவர்கள் திரௌபதியுடன் 12 ஆண்டுகள் காடுறை வாழ்வும்; ஒரு ஆண்டு தலைமறைவு வாழ்க்கையை நடத்த வேண்டியதாயிற்று.

குருச்சேத்திரப் போரில்

குருச்சேத்திரப் போரில் சகுனியின் தலைமையிலான காந்தாரா நாட்டுப் படைகள், கௌரவர் அணியின் சார்பாக, பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டது.

சகுனியின் உடன்பிறப்புகளான கயா, கவாட்சன், விருசவா, சார்மவாத், ஆர்ஜவன் மற்றும் சுகன் குருச்சேத்திரப் போரில் சகுனியுடன் இணைந்து போரிட்டனர். (6,91)

காந்தாரா நாட்டு போர்ப்படைத் தலைவர் விரிசக் மற்றும் ஆச்சாலா அருச்சுனனுடன் போரிட்டனர். (7,28)

காந்தாரா நாட்டு மன்னன் சுவலனின் மகன் காளிகேயனை அபிமன்யு கொன்றார். (7,47)

பாண்டவர்களில் இளையவரான சகாதேவன், சகுனியையும், அவர்தம் மகன் உலூகனையும் கொன்றார். (9,28)

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தார_நாடு&oldid=2080758" இலிருந்து மீள்விக்கப்பட்டது