திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றையாக்கம்
சி இற்றையாக்கம்
வரிசை 142:
| 17 || [[கிரீசு]]||ஏப்பிரல் 16|| 2016 || திருத்தந்தை பிரான்சிசு கிரேக்க நாட்டின் லெசுபோசு தீவில் மித்திலினி நகருக்குச் சென்றார். அங்கே, சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் நடைபெறுகின்ற போர்கள் காரணமாக இடம்விட்டு இடம் பெயர்ந்த அகதிகள் சேர்க்கப்பட்டிருந்த முகாம்களுக்குச் சென்று, அவர்களது துயரக் கதைகளுக்குச் செவிமடுத்து ஆறுதல் கூறினார். அவரோடு இணைந்து சென்றவர்களுள் கீழைத் திருச்சபைத் தலைவர், காண்ஸ்டாண்டிநோபுள் மறைமுதல்வர் முதலாம் பர்த்தலமேயு, மற்றும் ஏதன்சு நகர் ஆயர் இரண்டாம் எரோணிமுசு ஆகியோரும் இருந்தனர்.
அகதிகள் முகாமை விட்டுத் திரும்பியபோது திருத்தந்தை பிரான்சிசு தம்மோடு 12 அகதிகளைத் தம் வானூர்தியில் ஏற்றி, வத்திக்கான் நகருக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்குப் புகலிடம் அளித்தார். அந்த அகதிகளுள் மூன்று குடும்பங்களைச் சார்ந்த பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். அனைவரும் இசுலாமியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.<ref>[http://www.catholicnews.com/services/englishnews/2016/it-makes-you-weep-pope-says-of-refugees-stories.cfm திருத்தந்தை பிரான்சிசு, கிரீசு நாட்டில் அகதிகளை சந்திக்கிறார்]</ref>
|} -
| 18|| [[அர்மீனியா]]||ஜூன் 24-26|| 2016 ||திருத்தந்தை பிரான்சிசு அர்மீனியா நாட்டுக்கு வருகை தரவேண்டும் என்ற அழைப்பினை 2015இல் முதலில் அனுப்பியவர் அர்மீனிய நாட்டு அதிபர் செர்ஷ் சார்க்சியான் (Serzh Sargsyan) என்பவர். அந்த அழைப்பினை ஏற்று, திருத்தந்தை பிரான்சிசு அர்மீனிய நாட்டுக்கு 2016, ஜூன் 24ஆம் நாள் சென்றார்.
1915ஆம் ஆண்டு, ஒட்டமான் பேரரசும் அதன் பகுதியாக இருந்த துருக்கியும் பல்லாயிரக் கணக்கான அர்மீனிய மக்களைக் கொன்று குவித்தனர். இது இருபதாம் நூற்றாண்டின் “முதல் இனப் படுகொலை” என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் படுகொலையில் உயிரிழந்தோரின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள நினைவகத்திற்கு திருத்தந்தை பிரான்சிசு சென்று, இறைவேண்டல் நிகழ்த்தினார்.
படுகொலை நிகழ்ந்த காலத்தில் அர்மீனியாவிலிருந்து தப்பியோடியவர்களுக்கு அக்காலத் திருத்தந்தை 15ஆம் பெனடிக்ட் வத்திக்கானில் புகலிடம் அளித்துப் பாதுகாத்தார்.
 
அர்மீனியா நாடுதான் வரலாற்றில் முதன்முறையாக, கி.பி. 301ஆம் ஆண்டில் கிறித்தவ சமயத்தைத் தன் அதிகாரப்பூர்வமான சமயமாக ஏற்றது. இன்று அர்மீனிய மக்கள் பெரும்பான்மையினர் “அர்மீனிய மறைத்தூது திருச்சபை” உறுப்பினராக உள்ளனர். திருத்தந்தை பிரான்சிசு அர்மீனிய திருச்சபையின் தலைவரை சந்தித்து அவரோடு இணைந்து கிறித்தவ ஒன்றிப்பு வழிபாட்டினை நிகழ்த்தினார்.
 
கிறிஸ்தவ ஒன்றிப்பை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிசு வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் உரை நிகழ்த்தினார். “அர்மீனிய நாட்டு மக்களும் துருக்கி நாட்டு மக்களும் தங்கள் வேறுபாடுகளை மறந்துவிட்டு நல்லிணக்க உணர்வுகளை வளர்க்க வேண்டும். இளையோரே, நீங்கள் கடந்த கால அனுபவங்களிலிருந்து நலமானவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். நட்பும் உறவும் நிறைந்த வருங்காலத்தை உருவாக்க வேண்டும்.”
திருத்தந்தை ஆற்றிய உரையின்போது, கிறித்தவ ஒன்றிப்புக்காகப் பாடுபட்ட இரு பெரும் புனிதர்களை நினைவுகூர்ந்து, அவர்களது முன்மாதிரியை இன்றைய கிறித்தவர்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டார். அப்புனிதர்களுள் ஒருவர் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நான்காம் நெர்சசு என்பவர். மற்றொரு புனிதர் 11ஆம் நூற்றாண்டைச் சார்ந்த புனித நாரெக் கிரகோரி என்பவர். இவருக்கு ”மறைவல்லுநர்” என்னும் பட்டத்தை திருத்தந்தை பிரான்சிசு 2015இல் வழங்கினார்.
|}
==திருத்தந்தை பிரான்சிசின் இலங்கைப் பயணம் (சனவரி 13-15, 2015) பற்றி சில தகவல்கள்==
2013, மார்ச்சு 13ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு 1.2 பில்லியன் மக்களைக் கொண்ட கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகப் பொறுப்பேற்றார். உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவியிருக்கின்ற கத்தோலிக்க திருச்சபையின் மக்களை நேரில் சந்தித்து உரையாட அவர் பல பயணங்களை மேற்கொண்டார். 2013-2014 ஆண்டுகளில் அவர் பன்னாட்டுப் பயணம் சென்ற நாடுகளுள் கீழ்வருவன அடங்கும்: பிரேசில், நடு ஆசியா (இசுரயேல், யோர்தான், பாலத்தீனம்), தென் கொரியா, அல்பேனியா, பிரான்சு, துருக்கி.