சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 60:
 
[[டிசம்பர்]] [[2004]] [[ஆழிப்பேரலை]] தாக்கிய இடங்களில் சென்னையும் ஒன்றாகும்.
 
=== தலைநகர் காக்க ம.பொ.சி செய்த போராட்டம் ===
1912ஆம் ஆண்டில் ஆந்திரர்கள் ஆந்திர மகாசபை அமைத்து மொழிவழி மாகாணம் கேட்டுப் போராடி வந்தனர்.சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திராவைப் பிரித்து, தனி ஆந்திர மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தபோது,சென்னை நகரம் தங்களுக்கு வேண்டும் என்று ஆந்திரர்கள் கோரினார்கள்.‘மதராஸ் மனதே ‘ என்று ஆந்திரர்கள் எழுப்பிய இந்தக் குரலுக்கு,’தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ என்று வீர முழக்கம் எழுப்பியவர் ம.பொ.சி .ஒரு கட்டத்தில் சென்னையை பொது தலைநகரமாக ஆக்கலாம்,அல்லது இரெண்டாகப் பிரிக்கலாம் என்று கூட மத்திய அரசு நினைத்தது.இதை அப்போது வெறித்தனமாக மறுத்தார் ம.பொ.சி.செட்டி நாட்டு அரசர் இராஜா சர்.எம்.ஏ. முத்தையா செட்டியாருடன் கலந்து பேசி,சென்னை நகரின் மீது தமிழர்களுக்கு உள்ள உரிமையை வலியுறுத்தி, அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரிக்குத் தந்திகள் அனுப்பும் இயக்கத்தை நடத்தினார்.லால்பகதூர் சாஸ்திரிக்கு சுமார் 2,000க்கும் மேற்பட்ட தந்திகள் அனுப்பி வைக்கப்பட்டன.இதன் தாக்கத்தால்,மத்திய அரசின் முடிவினை மறுபரிசீலனை செய்வதாகவும் சாஸ்திரி உறுதி கூறினார்.
மேயர் செங்கல்வராயன் தலைமையில் கூட்டப்பட்ட சென்னை மாநகராட்சியின் சிறப்புக் கூட்டத்தில், ‘சென்னை நகரை இரண்டாகப் பிரிப்பதோ, ஆந்திர - தமிழக அரசுகளின் பொதுத் தலைநகரமாக ஆக்குவதோ, மத்திய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகச் செய்வதோ, ஆந்திரத்தின் இடைக்காலத் தலைநகராகவோ ஆக்கக் கூடாது’ என்ற தீர்மானத்தை ம.பொ.சி. முன் மொழிந்தார்.ஒரு கட்டத்தில் ம.பொ.சியின் கடும் போராட்டம் தாங்காமல் அப்போது முதலைமச்சராக இருந்த ராஜாஜியே அவரை கைது பண்ண வேண்டிய நிலமை ஏற்பட்டது.ராஜாஜி எவ்வளவோ கேட்டும் ம.பொ.சி அதற்கு இணங்காததால் சிறை சென்றார்.இறுதியாக ம.பொ.சியின் எண்ணம் போல் 1956இல் சென்னை தமிழ்நாட்டின் தலைநகரானது.<ref>தி இந்து[http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%BF/article8772759.ece] </ref>
 
 
== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது