'''அடிஸ் அபாபா''' (''Addis Ababa'') [[எத்தியோப்பியா]]வினதும் [[ஆப்பிரிக்க ஒன்றியம்|ஆப்பிரிக்க ஒன்றியத்தினதும்]] தலைநகரம் ஆகும். ஆபிரிக்கஆப்பிரிக்க ஒன்றியத்தின் முன்னோடி அமைப்பான ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பின் தலைநகரமாகவும் இதுவே இருந்தது. 1886 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நகரம், எத்தியோப்பியாவின் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2007 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி அடிசு அபாபாவின் [[மக்கள்தொகை]] 23,738384,248569 ஆகும். இது ஒரு நகரமாகவும் அதே வேளையில் ஒரு மாநிலமாகவும் விளங்குகிறது. ஆபிரிக்கஆப்பிரிக்க வரலாற்றில் இதன் ராசதந்திர மற்றும் [[அரசியல்]] முக்கியத்துவம் காரணமாக இது ஆப்பிரிக்காவின் தலைநகரம் எனவும் அழைக்கப்படுவது உண்டு. 80 க்குக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும், அதே எண்ணிக்கை கொண்ட தேசிய இனத்தவர் வாழும் எத்தியோப்பியாவின் பல பகுதிகளிலுமிருந்தும் மக்கள் வந்து இந்நகரத்தில் குடியேறியுள்ளனர். அடிசு அபாபா [[கடல்]] மட்டத்தில் இருந்து 7,546 அடிகள் (2300 மீட்டர்கள்) உயரத்தில் உள்ளது.