தமிழ்நாடு விடுதலைப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
 
=== புலிகளுடன் ===
தமிழ்நாடு விடுதலைப்படை இயக்கத்தினர் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். புலிகள் தங்கள் இயக்கத்துக்கு ஆபத்துக்கால சரணாலயமாக தமிழ்நாட்டையே கொண்டிருந்தனர். புலிகள் இயக்கத்தவர்கள் ஆபத்துக்காலங்களில் தமிழ்நாட்டில் தஞ்சம் புக தமிழ்நாடு விடுதலைப்படை போன்ற ஆயுதக்குழுக்களே உதவி செய்தன. ஆனால் இராசீவு காந்தி படுகொலைக்கு பின்னர் புலிகள் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.<ref name="ரெடிஃப்">{{cite web | url=http://www.rediff.com/news/2000/oct/10tamil.htm | title=A Call for Partition | publisher=http://www.rediff.com/ | date=2000 | accessdate=29 சூன் 2016 | author=George Iype | pages=Part 2}}</ref>
 
=== வீரப்பனாருடன் ===
தமிழ்நாடு விடுதலைப்படைக்கு நெருக்கமாக இருந்த மற்றொரு ஆயுதக்குழு [[வீரப்பன்]] படையினர் ஆகும். தவிப இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான மாறன் தமிழ்நாடு கர்நாடக காவல்துறையால் தேடப்பட்ட போது மாறன் வீரப்பன் பாதுகாப்பில் ஒளிந்திருந்ததாகவும் கருதப்படுகிறது. வீரப்பனும் தவிபவும் கர்நாடக அரசை பொது எதிரியாக கருதினர். கர்நாடக தமிழக நீர் பங்கீட்டு சிக்கல்களில் கர்நாடக அரசு காவிரி ஆற்றுநீரை தமிழகத்துக்கு தராததும் கர்நாடக மாநிலத்திலுள்ள தமிழர்கள் தாக்கப்பட்டதும் தவிபவும் வீரப்பனும் கர்நாடக அரசை பகைப்பதற்கு பொதுக்காரணங்களாக இருந்தன. வீரப்பனின் தம்பி அர்சுனன் கர்நாடக அரசால் கொல்லப்பட்டதும் மற்றொரு காரணமாய் வீரப்பன் குழுவினருக்கு இருந்தது.<ref name="ரெடிஃப்" />
 
=== வழிபட்டவர்கள் ===
தமிழ்நாடு விடுதலைப்படை பல இயக்கங்களுக்கு முன்னோடியாக விளங்கியது. அவற்றுள் தமிழ்நாடு விடுதலைக்கழகம், விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம், தமிழ்த்தேசிய பெண்கள் விடுதலை இயக்கம், உரிமை கோருவோர் ஒருங்கமைப்பு, தமிழ்நாடு இளைஞர் பேரவை, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.<ref name="ரெடிஃப்" />
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_விடுதலைப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது