சாமிக்கண்ணு வின்சென்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
==வாழ்க்கைக் குறிப்பு==
சாமிக்கண்ணு வின்சென்ட் 1883 ஏப்ரல் 18-ஆம் தேதி [[கோயம்புத்தூர்|கோவை]] கோட்டைமேடு பகுதியில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் தம்புசாமி. இவர் கோவை நகராட்சியில் பணிபுரிந்தார். <ref> சாமிக்கண்ணு வின்சென்ட், பக்கம்:132, கோவை வரலாறு, ஆசிரியர்:சி.ஆர்.இளங்கோவன், ஸ்ரீகாந்த் பப்ளிகேஷன்ஸ், கோவை </ref>தனது 22-ஆவது அகவையில் [[தென்னக இரயில்வே|தென்னக இரயில்வே]] [[திருச்சி]] பொன்மலை புகைவண்டி நிலையத்தில் பொறிமுறைவரைதலறிஞனாக மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் 19௦5-ம் ஆண்டு டியூபாண்ட் என்கிற பிரெஞ்ச் திரைப்படவியலாளரை சந்திக்க நேர்ந்தது. பின்னொரு நாளில் டியூபாண்ட்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது திரைப்பட புரொஜக்டர், படச்சுருள் மற்றும் பிற சாதனங்களை விற்றுவிட்டு தனது தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தார். இதனை அறிந்த சாமிக்கண்ணு வின்சென்ட் கையிலிருந்த பணத்துடன், தான் மனைவியின் நகைகளை விற்று திரட்டிய ரூபாய்.2,250/- அவரிடம் கொடுத்து உபகரணங்களை விலைக்கு வாங்கினார். தன்னிடம் உள்ள புரொஜக்டர் உதவியால் 'ஏசுவின் வாழ்க்கை' என்ற படத்தை தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் சென்று காண்பித்தார். மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. அவரது அரிய முயற்சி புது முயற்சியாக “டென்ட் கொட்டகை”யை உருவாக்கினார். ஒவ்வொரு ஊராய் சென்று டென்ட் அமைத்து புரொஜக்டர், திரைச்சீலை உதவியால் படங்களை காண்பித்தார் தென் இந்திய சினிமாவின் தந்தை சாமிக்கண்ணு வின்சென்ட்(பிள்ளை).
[[படிமம்:டிலைட் திரையரங்கம் (வெரைட்டி ஹால்).jpg|thumb|right|250px|டிலைட் திரையரங்கம் (வெரைட்டி ஹால்) தற்போதைய தோற்றம்]]
 
தென்னிந்தியாவில் முதல் நிரந்தர திரையரங்கான வெரைட்டி ஹால் என்ற திரையரங்கு உருவாக்கி படங்களை திரையிடத் தொடங்கினார். (இந்த காலக்கட்டத்தில் சென்னை கெய்ட்டி, கிரவுன் தியேட்டர் எல்லாம் தற்காலிக கூடார கொட்டகைகளாகத்தான் இருந்தது) அதன் பின் அதே சாலையில் எடிசன் எனும் சாமி திரையரங்கு, பேலஸ் எனும் நாஸ் திரையரங்கு (தற்போதும் செயல்பட்டுக்கொண்டியிருக்கிறது), ரெயின்போ திரையரங்கு (தற்போது ரெயின்போ அடுக்குமாடி குடியிருப்பு) என அவரது திரையரங்கு சாம்ராஜ்யம் விரிவடைந்தது. இதே காலகட்டத்தில் இவர் சினிமா ப்ரொஜெக்டர் தயாரிக்கும் அமெரிக்கா நிறுவனம் ஒன்றின் முகவராகவும் செயல்பட்டு வந்தார். இந்த முகாமையே தென்னிந்தியாவின் முக்கிய இடங்களுக்கு சலனப்படக்காட்சியை எடுத்துச்சென்றது. திரைப்பட தொழில் போக, ஒரு அச்சகமும், மாவு ஆலையும் வைத்திருந்தார். மின்சாரம் மூலம் இயங்கிய அந்த அச்சகத்தின் பெயரே 'எலக்ட்ரிக் பிரின்டிங் ஒர்க்ஸ்' என்பதாகும். இவருக்கு உறுதுணையாக இவரின் சகோதரர் ஜேம்ஸ் வின்சென்ட் இருந்தார். அவரை தொடர்ந்து அவரது மகன் பால் வின்சென்ட் கோவை ரத்தின சபாபதி புரத்தில் லைட் ஹவுஸ் எனும் கென்னடி திரையரங்கை நிறுவினார். ஒரே நேரத்தில் அவர்களிடம் கிட்டத்தட்ட அறுபது டென்ட் கொட்டைகள் கைவசம் இருந்தன <ref> சாமிக்கண்ணு வின்சென்ட், பக்கம்:132-133, கோவை வரலாறு, ஆசிரியர்:சி.ஆர்.இளங்கோவன், ஸ்ரீகாந்த் பப்ளிகேஷன்ஸ், கோவை </ref> . கோயம்புத்தூர்-திருச்சிராப்பள்ளி சாலை, அரசு மருத்துவமனைக்கு அடுத்து உள்ள ரெயின்போ திரையரங்குக்கு (இப்பொழுது அடுக்குமாடி குடியிருப்பு) நேர் எதிரே அவர் துவங்கிய கம்பெனிதான் வின்சென்ட் சோடா மற்றும் குளிர்பான நிறுவனம். அதேபோல கோயம்புத்தூர்-திருச்சிராப்பள்ளி சாலையில் 1937-ம் ஆண்டு உருவான சென்ட்ரல் ஸ்டூடியோ-வின் இயக்குனர்களில் இவரும் ஒருவர் என்பது மிகவும் குறிபிடத்தக்க செய்தி. கோவை, கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள 'வின்சென்ட்' சாலை இவர் பெயரிலேயே அமைந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது. இவர் கோயம்புத்தூர் அடுத்து உதகமண்டலம், மதுக்கூர், ஈரோடு, அரக்கோணம், கொல்லம் உட்பட சில கேரள நகரங்களிலும் திரையரங்குகளை உருவாக்கினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சாமிக்கண்ணு_வின்சென்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது