தாரா சிங் (செயற்பாட்டாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎பணிவாழ்வு: *விரிவாக்கம்*
வரிசை 21:
==பணிவாழ்வு==
தன்னார்வல ஆசிரியர்களைக் கொண்டு தாராசிங் நடத்திய இந்தப் பள்ளி மாவட்டத்தின் சிறந்த பள்ளியாக விளங்கியது. சீக்கிய மேன்மையைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூகப் பணிகளில் ஈடுபட்டார். கனடாவில் சீக்கிய புலம்பெயர்ந்தோர் படும் இன்னல்களை அறிந்த தாராசிங் கனடிய அரசுக்கு எதிராகவும் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு]]க்கு எதிராகவும் போராடினார். 1914இல் [[பைசலாபாத்]]தை விட்டு கல்லார் எனுமிடத்தில் இருந்த கால்சா உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியரானார். பின்னர் மீண்டும் தனது பள்ளிக்கே தலைமை ஆசிரியராகத் திரும்பினார்.
== சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழுவும் குருத்வாரா இயக்கமும் ==
சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழுவின் முதல் உறுப்பினர்களில் ஒருவராக தாராசிங் இருந்தார். இந்தக் குழுவின் கட்டுப்பாட்டில் குருத்துவாராக்களை இணைப்பதற்கு அவை உடன்படவில்லை. ஏற்கெனவே இருந்த கோயில் நிர்வாகிகளுக்கும் பிரபந்தக் குழு அனுப்பிய குழுவிற்கும் இடையே வன்முறை வெடித்தது. [[நங்கானா சாகிபு]] கோயிலில் பெப்ரவரி 20, 1921 அன்று அவ்வாறு கைப்பற்றச் சென்ற குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 130 பேர் கொல்லப்பட்டனர். இது நங்கானா சாகிபு படுகொலை எனப்படுகின்றது. இந்த நிகழ்வை அடுத்து ஆசிரியராக இருந்த தாராசிங் குருத்துவாரா இயக்கத்தில் இணைந்தார். [[பொற்கோயில்|பொற்கோயிலின்]] சாவிகளை அரசிடமிருந்து பெறுவதற்கான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக தாராசிங் சிறை சென்றார். இறுதியில் அரசு பணிந்து
சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழு நியமித்த கரக் சிங்கிடம் நிர்வாகத்தை ஒப்படைத்தது. சீக்கியர்களின் உரிமைகளைப் பறிக்கும் அரசின் ஆணைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்தார்.
 
[[பகுப்பு:சீக்கிய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தாரா_சிங்_(செயற்பாட்டாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது