தாரா சிங் (செயற்பாட்டாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
==இந்திய விடுதலைப் போராட்டம்==
1930 ஆம் ஆண்டு [[மகாத்மா காந்தி]], [[உப்புச் சத்தியாகிரகம்|குடிமை ஒத்துழையாமை இயக்கத்தைத்]] தொடங்கினார். இதில் பங்கேற்ற தாராசிங் 100 பேருடன் [[பெசாவர்|பெசாவரில்]] பேரணி சென்று கைதானார்.1931இல் [[காந்தி-இர்வின் ஒப்பந்தம்]] வெளியிடப்பட்டது. 1935இல் முசுலிம் நிலைக்கு தாராசிங் எதிர்ப்பு தெரிவித்தார். 1945 ஆம் ஆண்டில், வாவெல் மாநாட்டில் தாராசிங் சீக்கியர்களின் நிலை குறித்து பங்கெடுத்தார். மே 17 ம் நாள் கிரிப்ஸ் மிஷன், மற்றும் ஜூன் 3, 1946-ல் இந்திய-பாகிஸ்தான் பிரிவினை குறித்த மவுண்ட்பேட்டன் முடிவு இவற்றிற்கு எதிராக தாராசிங் எதிர்த்தார். இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் நலனைக் காப்பாற்ற முயற்சிகள் செய்தார். ஆகத்து 15, 1947 அன்று, விடுதலை பெற்றபோதும் சீக்கியர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
==தனி மாநில இயக்கம்==
{{முதன்மைக் கட்டுரை:பஞ்சாப் தனிமாநில இயக்கம்}}
தாராசிங் மே 28, 1948 அன்று பஞ்சாப் தனி மாகாணம் அமைக்கக் கோரினார். பின்னர் மீண்டும் இரண்டாவது முறையாக மே 29, 1960 ஆம் ஆண்டு தனது கோரிக்கையை வலியுறுத்திப் போராடினார்.
1965 [[சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழு]] தேர்தல்களில் [[பதேசிங் (சீக்கியத் தலைவர்)|சாந்த் பதேசிங்]] தலைமையிலான அகாலிதளம் 100 இடங்களையும் தாராசிங்கின் கட்சி 40 இடங்களையும் வென்றன. இதனால் பதேசிங்கின் தலைமையை சீக்கியர்கள் ஏற்பதாகக் கூறிய தாராசிங் அரசியலிலிருந்து விலகுவதாகக் கூறினார். நவம்பர் 1966இல் தனிப் பஞ்சாப் மாநிலம் உருவானது. நவம்பர் 22, 1967இல் தாராசிங் மரணமடைந்தார்.
 
[[பகுப்பு:சீக்கிய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தாரா_சிங்_(செயற்பாட்டாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது