புகுசிமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி மேற்கோள் சரிசெய்தல்
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 142:
 
சோமோன் காலப்பகுதியில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக அபுகுமா ஆற்றின் கிழக்குக்கரையில் ஒரு பாரியக் குடியேற்றம் காணப்பட்டது. இப்பகுதி அகழ்வாய்வு செய்யப்பட்டு மியாகதா எச்சங்கள் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
 
==புவியியல்==
புகுசிமா நகரானது, புகுசிமா மாகாணத்தின் மைய வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது இனவாசிரோ ஏரியிலிருந்து கிழக்கு நோக்கி அண்ணளவாக 50 கிமீ தொலைவிலும், டோக்கியோவிலிருந்து வடக்கு நோக்கி 260 கிமீ தொலைவிலும், சென்டாயிலிருந்து தெற்கே 80 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது மேற்கே ஓஉ மலைகளாலும், கிழக்கே அபுகுமா மேட்டுநிலங்களாலும் சூழப்பட்டுள்ளது. நகரின் பெரும்பாலான பகுதி புகுசிமா பள்ளத்தாக்கின் தென்கிழக்குப் பகுதி மற்றும் அருகிலுள்ள மலைகளிடையே அமைந்துள்ளது. நகரின் மேற்கே அசுமா மலையும், தென்மேற்கே அடதாரா மலையும் அமைந்துள்ளது.
 
புகுசிமாவுக்கு வடக்கே மியாகி மாகாணத்தின் சிரோசி மற்றும் சிசிகசுகு ஆகிய நகரங்களும், வடமேற்கே யமகாடா மாகாணத்தின் யொனேசவா மற்றும் டகாகடா நகரங்களும் அமைந்துள்ளன. புகுசிமா மாகாணத்தின் ஆட்சிப்பகுதிக்குள், மேற்கே இனவாசிரோ, தெற்கே நிகோன்மத்சு, கிழக்கே கவாமாடா மற்றும் டாதே, வடகிழக்கே கூரி ஆகியன அமைந்துள்ளன.<ref name=fukushima-toshiken />
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புகுசிமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது