அரக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[File:Demon Yakshagana.jpg|right|thumb|அரக்கனை உருவகப் படுத்திய ஒரு கலையலங்கார உருவம்-[[கர்நாடகம்]]]]
'''அரக்கர்''' அல்லது '''ராட்சதர்''' அல்லது '''ராக்ஷஸர்''' (''rakshasa'') என்பவர் இந்திய தொன்ம கதைகளில் வரும் ஒரு கற்பனை இனத்தவர். [[இந்து சமயம்|இந்து]] மற்றும் [[புத்தம்|புத்த]] சமய இலக்கியங்களில் தேவர்களின் எதிரிகளாகவும் தீய சக்தியினராகவும் மனித மாமிசம் உண்பவராகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.{{cn}} அரக்கர் என்ற சொல் சில இடங்களில் [[அசுரர், இந்து மதம்|அசுரர்]] எனவும் பயன்படுத்தப்படுவதுண்டு. '''அரக்கன்''' எனும் சொல்லாடல் [[இராமாயணம்|இராமாயணத்தில்]] காணப்படுகின்றது - இலங்கையின் மன்னனான [[இராவணன்]] அரக்கன் என்று அழைக்கப்படுகிறான். [[கும்பகர்ணன்]], [[விபீடணன்]], [[சுபாகு]], [[மாரீசன்]], [[இந்திரசித்து]] ஆகியோர் ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற அரக்கர்கள். [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] இடும்பன், கடோட்கஜன், பகாசுரன் போன்ற அரக்கர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். புத்த சமய இலக்கியங்களிலும் மாறன், இராவணன் போன்ற [[அசுரர் (பௌத்தம்)|அரக்கர்கள் பற்றிய குறிப்புகள்]] உள்ளன.
 
இந்து தொன்மவியலின் அடிப்படையில் '''அரக்கர்கள்''' என்பவர் பதினெட்டு கணங்களில் ஒரு குழுமம் ஆவார். இவர்களின் குருவாக [[சுக்கிராச்சாரியார்]] உள்ளார். மிகுந்த கடுந்தவத்தினால் அதிக சக்தி பெறும் அரக்கர், அரசனாக ஆகிறார். இறைவன் மூலமாக அரக்கரசர் அழிந்த பின்பு, அடுத்த சக்தி வாய்ந்த நபர் அந்த அங்கிகாரத்தினைப் பெறுகிறார். இவர்கள் சிவபக்தர்களாக இருப்பதனால் சிவபெருமானிடமிருந்து வரங்களைப் பெறுகின்றார்கள்.{{cn}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2092235" இருந்து மீள்விக்கப்பட்டது