லூர்து நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'லூர்து நகர்' பிரனீசு மல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி heading
வரிசை 1:
'லூர்து நகர்' [[பிரனீசு மலைத்தொடர்|பிரனீசு]] மலைத்தொடர்களின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும். இந்நகரம் ஹோத்-பிரெனே மாநிலத்தில், மிதி-பிரெனே மாவட்டத்தில் பிரான்சின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் நடுவே செங்குத்தானப் பகுதியில் கட்டப்பட்டுள்ள கற்கோட்டையானது இந்நகரின் சிறப்பாகும். இது 1858 ஆம் ஆண்டு லூர்து அன்னைத் திருத்தலம் அமைவதற்கு முன்னமே உருவாக்கப்பட்டதாகும்.
 
1858 ஆம் ஆண்டு [[பெர்னதெத் சுபீரு|பெர்னதெத்]] எனும் ஆடு மேய்க்கும் பெண்ணிற்கு [[மரியாவின் காட்சிகள்|மரியாள் காட்சி]] கொடுத்ததிற்கு பின்னர் இந்நகர் பிரான்சிலும், உலகம் முழுமைக்கும் பிரபலமானது. மேலும், உலகின் முதன்மையான புனிதப் பயணம் மற்றும் மதச் சுற்றுலாசுற்றுலாத் தளமானது.
 
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுமையிலிருந்தும் வருகைத் தரும் அறுபது இலட்சம் வருகையாளர்களின் மூலம், லூர்து நகர் பிரான்சு நாட்டின் சுற்றுலாத் தளங்களில் பாரீசிற்கு அடுத்து இரண்டாமிடத்திலும், அகில உலக கத்தோலிக்க புனித பயணத்தளங்களில் [[உரோம்|ரோமிற்கும்]], புனித பூமிக்கும் அடுத்ததாக மூன்றாமிடத்திலும் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/லூர்து_நகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது