"சீக்கிய அலைந்துழல்வு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,213 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
→‎சீக்கியர்கள்: *விரிவாக்கம்*
(→‎சீக்கியர்கள்: *விரிவாக்கம்*)
==சீக்கியர்கள்==
உலகளவில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சீக்கியர்கள் உலகின் மிகப் பெரிய அமைப்புசார் சமயங்களில் ஐந்தாவதான [[சீக்கியம்|சீக்கிய சமயத்தைச்]] சேர்ந்தவர்கள். உலக மக்கள்தொகையில் சீக்கியர்கள் 0.39%<ref>[https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2122.html CIA Factbook]</ref> ஆக உள்ளனர்; இவர்களில் 83% இந்தியாவில் வாழ்கின்றனர். இந்திய சீக்கிய சமூகத்தில் 19.6 மில்லியன், அதாவது 76% வட இந்திய மாநிலமான [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாபில்]] வாழ்கின்றனர். இந்த மாநிலத்தில் பெரும்பான்மையினராக 65% விழுக்காடு வாழ்கின்றனர். 200,000க்கும் கூடுதலானவர்கள் [[அரியானா]], [[இராசத்தான்]], [[உத்தரப் பிரதேசம்]], [[தில்லி]], [[இமாச்சலப் பிரதேசம்]], [[மகாராட்டிரம்]], [[உத்தராகண்டம்]] மற்றும் [[சம்மு காசுமீர்|சம்மு காசுமீரில்]] வாழ்கின்றனர்.<ref>இந்திய மாநிலங்கள் வாரியான சீக்கிய மக்கள்தொகை பிரிப்பு [http://www.censusindia.gov.in/ இந்தியக் கணக்கெடுப்பில்] தரப்பட்டுள்ளது.</ref>
==வரலாற்றில் சீக்கியப் புலம்பெயர்வுப் பாங்கு==
 
இந்திய மரபிலிருந்து தனிப்பட்ட சீக்கிய அடையாளம் அரசியல்ரீதியாக 1606இல் ஐந்தாம் சீக்கிய குரு [[குரு அர்ஜன்]] தேவின் உயிர்க் கொடையை அடுத்து நிறுவப்பட்டது; இதனை உறுதிப்படுத்துமாறு 1699இல் [[குரு கோவிந்த் சிங்]] நிறுவிய 'மெய்யான' உடன்பிறப்புரிமை அல்லது [[கால்சா]] (ਖ਼ਾਲਸਾ) அமைந்தது.<ref>[http://www.bbc.co.uk/religion/religions/sikhism/history/history_1.shtml BBC History of Sikhiam - The Khalsa]</ref> எனவே 400 ஆண்டுகளாகவே சீக்கியர்களின் வரலாறு உள்ளது. குருக்களின் காலத்தில் சீக்கியர்களின் குடிபெயர்வு தற்கால இந்தியா, [[பாக்கித்தான்]] எல்லைகளுக்குள்ளாகவே, குறிப்பாக [[பஞ்சாப் பகுதி]]யின் சீக்கிய பழங்குடி மையப்பகுதிக்குள்ளேயே இருந்தது. [[சீக்கிய சிற்றரசுகள்|சீக்கிய சிற்றரசுகளின்]] உருவாக்கமும் [[சீக்கியப் பேரரசு]] (1716–1849) வளர்ச்சியும், அடுத்து [[லடாக்]], [[பெசாவர்]] போன்று தாங்கள் வென்ற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இருப்பினும் இந்தப் பெயர்வுகள் தற்காலிகமானதாகவும் நிலையற்றதாகவும் இருந்தன; சீக்கியப் பேரரசின் மாறிவந்த எல்லைகளைப் போன்று இவர்களது வாழ்விடமும் மாறி வந்தது. [[சீக்கியப் பேரரசு]] காலத்தில் சீக்கிய மகாராசா [[ரஞ்சித் சிங்]]கைக் குறித்து அறிய [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்]], [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியர்]] முயன்றதால் இருபுற புலம்பெயர்வு நடைபெற்றது.<ref>Maharaja Ranjit Singh: Lord of the Five Rivers (French Sources of Indian History Series) by Jean-Marie Lafont. Pub. by Oxford University Press (2002). Pp. 23-29. ISBN 0-19-566111-7</ref>
 
==மேற்சான்றுகள்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2092718" இருந்து மீள்விக்கப்பட்டது