"சுந்தரமூர்த்தி நாயனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,951 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (*உரை திருத்தம்*)
சி
}}
 
'''சுந்தரமூர்த்தி நாயனார்''' என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரும் ஆவார். இவர் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது சிவபெருமான் கிழவனாக சென்று தடுத்தார்.<ref name=tam>http://www.tamilvu.org/courses/degree/d051/d0513/html/d0513224.htm</ref> பின்பு சுந்தரரின் பிறவி நோக்கம் சிவபெருமானை புகழ்ந்து பாடுவது என புரியவைத்தார். இதனை தடுத்தாட்கொள்ளுதல் என சைவர்கள் கூறுகிறார்கள். இவர் இறைவன் மீது பல தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார். இப்பாடல்களை திருப்பாட்டு என்று அழைக்கின்றனர்.<ref name=tam/> திருப்பாட்டினை சுந்தரர் தேவாரம் என்றும் அழைப்பர். <ref name=tam/> திருமணத்தினை தடுத்து சுந்தரரை அழைத்துவந்த சிவபெருமானே பரவையார், சங்கிலியார் என்ற பெண்களை திருமணம் செய்துவைத்தார்.<ref name=tam/>
 
 
==சுந்தரர் தேவாரம்==
சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை சுந்தரர் தேவாரம் என்று அழைக்கின்றனர். இப்பாடல்களை திருப்பாட்டு என்றும் அழைப்பது வழக்கம். <ref name=tam/> இப்பாடல்களை பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள்.
 
இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38000 என்று கூறுகின்றனர். இவை பண்களோடு அமைந்துள்ளன. <ref name=tam/> அதனால் பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன.<ref name=tam/> தேவாரங்களில் செந்துருத்திப் பண் கொண்டு பாடல்பாடியவர் இவரே. தேவாரங்களைப் பாடிய மற்ற ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களை பாடவில்லை. <ref name=tam/>
 
==தடுத்தாட்கொள்ளல்==
 
[[திருமுனைப்பாடி]] நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவர் குலத்தில் சுந்தரர் பிறந்தார். <ref name=tam/> இவரது தந்தையார் [[சடையனார்]], தாயார் [[இசைஞானியார்]].<ref name=tam/> மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குத் [[திருமணம்]] ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு [[ஓலைச் சுவடி|ஓலை]]யைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு [[அடிமை]] என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு [[கோயில்|கோயிலுள்]] நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி" என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பின்னர் இறை தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
 
சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம் அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.<ref>சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்; சைவ நூல் அறக்கட்டளை,சென்னை</ref>
#[[சிவபெருமான்]] கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை [[விருத்தாச்சலம்|விருத்தாச்சலத்தில்]] உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது.
#[[காவிரி]]யாறு பிரிந்து வழிவிடச் செய்தது.
#அவிநாசியில் முதலை விழுங்கிய பிராமணக் குழந்தையை அம்முதலையின் வாயின்று மூன்றாண்டு வளர்ச்சியுடன் அழைத்துக் கொடுத்தது.<ref name=tam/>
#வெள்ளை [[யானை]]யில் ஏறி திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது.<ref name=tam/>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
32,884

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2094128" இருந்து மீள்விக்கப்பட்டது