பேகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Vallal_Pegan.jpg" நீக்கம், அப்படிமத்தை Jcb பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: [[:c:Commons:Dele
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''பேகன்''' [[கடையெழு வள்ளல்கள்|கடையெழு வள்ளல்களுள்]] ஒருவர். பொதினி ([[பழனி]]) மலைக்குத் தலைவர். மழை வளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று நினைத்தார். அவரகத்தே அருள் உணர்ச்சி பெருகவே, தமது போர்வையை அம்மயிலுக்குப் போர்த்தினார். மயில் போர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமல் இத்தகைய செயல் செய்தார். இதனையே ‘கொடைமடம்’ எனச் சான்றோர் போற்றிக் கூறினர். [[புறநானூறு|புறநானூற்றுப்]] பாடல் 142இல் புலவர் [[பரணர்]], “கழற்கால் பேகன், வரையாது (அளவில்லாது) வழங்குவதில் மழை போலக் கொடைமடம் படுவதன்றி, வேந்தரது படை மயங்கும் போரில் மடம்படான்” என்ற கருத்தமைத்துப் பாடியுள்ளார்.
 
"https://ta.wikipedia.org/wiki/பேகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது