"பஞ்சாப் (இந்தியா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  4 ஆண்டுகளுக்கு முன்
[[பாபர்]] வட இந்தியாவை வென்ற நேரத்தில் சீக்கியமும் வேர் விட்டது. அவரது பெயரர், [[அக்பர்]], சமய விடுதலையை ஆதரித்தார். [[குரு அமர் தாஸ்|குரு அமர்தாசின்]] [[லங்கர் (சீக்கியம்)|லங்கர்]] எனும் சமுதாய உணவகத்தைக் கண்டு சீக்கியத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தார். லங்கருக்கு நிலம் கொடையளித்ததுடன் [[சீக்கியக் குருக்கள்|சீக்கிய குருக்களுடன்]] 1605இல் தமது மரணம் வரை இனிய உறவு கொண்டிருந்தார்.<ref>{{harvnb|Kalsi|2005|pages=106–107}}</ref> ஆனால் அடுத்துவந்த [[ஜஹாங்கீர்]], சீக்கியர்களை அரசியல் அச்சுறுத்தலாக கருதினார். குஸ்ரூ மிர்சாவிற்கு ஆதரவளித்ததால் [[குரு அர்ஜன்]] தேவை கைது செய்து<ref>{{harvnb|Markovits|2004|page=98}}</ref> சித்திரவதைக்குட்படுத்தி கொல்ல ஆணையிட்டார். அர்ஜன் தேவின் உயிர்க்கொடை ஆறாவது குரு, [[குரு அர்கோவிந்த்]] சீக்கிய [[இறைமை]]யை அறிவிக்கச் செய்தது; [[அகால் தக்த்]]தை உருவாக்கி [[அமிருதசரசு|அமிருதசரசை]] காக்க கோட்டையும் கட்டினார்.<ref name="Jestice 2004 pages=345-346">{{harvnb|Jestice|2004|pages=345–346}}</ref>
 
குரு அர்கோவிந்தை [[குவாலியர்|குவாலியரில்]] கைது செய்த சகாங்கீர் பின்னர் விடுவித்தார். குரு தன்னுடன் கைது செய்யப்பட்டிருந்த மற்ற இந்து இளவரசர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என கோரியதால் அவர்களையும் விடுவித்தார். 1627இல் சகாங்கீர் இறக்கும் வரை சீக்கியர்களுக்கு [[முகலாயப் பேரரசு|முகலாயர்களிடமிருந்து]] எவ்விதபு பிரச்சினையும் இல்லாதிருந்தது. tஅடுத்தஅடுத்த மொகலாயப் பேரரசர் [[ஷாஜகான்]] சீக்கிய இறையாண்மையை "எதிர்த்து" சீக்கியர்களுடன் போரிட்டு அவர்களை [[சிவாலிக் மலை]]க்குப் பின்வாங்கச் செய்தார்.<ref name="Jestice 2004 pages=345-346" /> அடுத்து சீக்கிய குருவான [[குரு ஹர் ராய்]] சிவாலிக் மலையில் தமது நிலையை உறுதிபடுத்திக் கொண்டார். [[ஔரங்கசீப்]]பிற்கும் [[தாரா சிக்கோ]]விற்கும் இடையே நடந்த அதிகாரப் போட்டியில் நடுநிலை வகித்தார். ஒன்பதாவது குரு, [[குரு தேக் பகதூர்]], சீக்கிய சமூகத்தை [[அனந்த்பூர் சாஹிப்|அனந்த்பூருக்கு]] கொண்டு சென்றார். பரவலாக பயணம் செய்துமொகலாயரின் தடையை எதிர்த்து சீக்கியக் கொள்கைகளை பரப்பினார். [[காஷ்மீர பண்டிதர்கள்]] இசுலாமிற்கு மாறுவதைத் தடுக்க தாமே கைதானார்; சமயம் மாற மறுத்ததால் சிறையிலேயே உயிர் நீத்தார்.<ref>{{harvnb|Johar|1975|pages=192–210}}</ref> 1675இல் பொறுப்பேற்ற [[குரு கோவிந்த் சிங்]] பவன்டாவிற்கு தமது குருமடத்தை மாற்றினார். அங்கு பெரிய கோட்டையைக் கட்டினார். சீக்கியர்களின் படை வலிமை சிவாலிக் இராசாக்களுக்கு அச்சமூட்ட அவர்கள் சீக்கியர்களுடன் போரிட்டனர்; ஆனால் இதில் குருவின் படைகள் வென்றனர். குரு அனந்த்பூருக்கு மாறி அங்கு மார்ச் 30, 1699இல் [[கால்சா]]வை நிறுவினார்..<ref>{{harvnb|Jestice|2004|pages=312–313}}</ref>1701இல் மொகலாயப் பேரரசும் சிவாலிக் இராசாக்களும் இணைந்து வாசிர் கான் தலைமையில் அனந்த்பூரைத் தாக்கினர். முக்த்சர் சண்டையில் கால்சாவிடம் தோற்றனர்.
 
=== சிசு-சத்துலுச்சு நாடுகள் ===
தற்கால பஞ்சாப், [[அரியானா]]வில் சத்துலச்சு ஆற்றை வடக்கிலும் இமய மலையை கிழக்கிலும் யமுனா ஆறு, [[தில்லி]]யைத் தெற்கிலும் [[சிர்சா மாவட்டம்|சிர்சா மாவட்டத்தை]] மேற்கிலும் எல்லைகளாகக் கொண்ட நாடுகளின் குழு [[சிசு-சத்துலுச்சு]] எனப்படுகின்றது. இந்த நாடுகளை [[மராட்டியப் பேரரசு|மராட்டியப் பேரரசின்]] சிந்தியா வம்சத்தினர் ஆண்டு வந்தனர். 1803-1805இல் [[இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்]] வரை இப்பகுதியின் சிற்றரசர்களும் அரசர்களும் மராத்தியர்களுக்கு கப்பம் கட்டி வந்தனர்.<ref name="Books.google.co.in">{{cite book|url=https://books.google.com/books?id=sxhAtCflwOMC&pg=PA334|title=A Comprehensive History of Medieval India: Twelfth to the Mid-Eighteenth Century}}</ref> சிசு-சத்துலுசு நாடுகள் [[கைத்தல்]], [[பட்டியாலா]], [[ஜிந்து]], [[தானேசர்]], [[மாலேர் கோட்லா]], [[பரீத்கோட் இராச்சியம்|பரீத்கோட்]] ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2096319" இருந்து மீள்விக்கப்பட்டது