தாவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox deity | name = தாவ் | image = Ptah..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:42, 30 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பண்டைய எகிப்திய மொழியில் இகுதாவ் என்ற சொல்லுக்கு தாவ்வுடைய ஆவியின் வீடு என்று பொருள். இந்த சொல்லில் இருந்து எகிப்து என்ற பெயர் தோன்றியது.

தாவ்
துணைசெக்மெட், பாசுட்
பெற்றோர்கள்யாருமில்லை (தானாக தோன்றியவர்)
குழந்தைகள்நெஃபெர்டெம், மாகேசு
 தாவ் என்பவர் பண்டைய எகிப்திய தொன்மவியலில் கூறப்படும் ஆக்கும் கடவுள் ஆவர். மெம்ஃபிசின் மும்மையில் இவர் செக்மெட்டின் துணையாகவும் நெஃப்ரெதமின் தந்தையாகவும் இருக்கிறார். இவர் தன் எண்ணம் மற்றும் சொல்லால் இந்த உலகை படைத்ததாக மெம்பிசு மக்கள் நம்புகின்றனர். இவர் பெரும்பாலும் பச்சை நிறத் தோல் மற்றும் தாடியுடன் மூன்று சின்னங்கள் பொருந்திய செங்கோலை கையில் ஏந்தியபடி காட்சியளிக்கிறார். மூன்று சின்னங்களில் வாசு செங்கோல் சின்னம் சக்தியையும் அங்க்கு சின்னம் வாழ்வையும் செத் தூண் சின்னம் நிலையையும் குறிக்கிறது. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவ்&oldid=2096544" இலிருந்து மீள்விக்கப்பட்டது