"ஓரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| parents = ஓசிரிசு, இசிசு
| siblings = ஓசிரிசு, இசிசு, சேத், நெஃப்திசு
| consort = [[ஆத்தோர்]]
| offspring = இம்செட், துவாமுதெஃபு, கெபேசெனுவேஃபு
}}
ஓரசு என்பவர் பழங்கால எகிப்திய மதத்தினர் வழிபட்ட மிக முக்கியமான கடவுள் ஆவார். இவர் ஓசிரிசு-இசிசு தம்பதியரின் மகனாக கருதப்படுகிறார். தன் தந்தை ஓசிரிசை சேத் கொன்றதால் அவரது எதிரியானார். இவரது மனைவி ஆத்தோர். ஓரசு வானம், போர், வேட்டையாடுதல் ஆகியவற்றின் கடவுளாக கருதப்படுகிறார். இவரது வலது கண் ஞாயிறு கடவுள் ரா ஆகவும் இடது கண் திங்கள் கடவுள் தோத் ஆகவும் இருப்பதாக கூறப்படுகிறது.
இவர் தந்தை ஓசிரிசை சேத் கொன்றார். இதனால் ஓரசு சேத்தின் எதிரியானார். எகிப்தை கைப்பற்ற இருவருக்கும் போர் நடந்தது. அப்போது சேத் ஓரசின் இடது கண்ணை குத்தி விட்டார். இதனால் ஓரசின் இடது கண்ணான நிலாவின் ஒளி குன்றியது. இதுவே கதிரவனை விட நிலா ஒளி குறைவாக உள்ளதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ஓரசின் கண் என்பது பாதுகாப்பு மற்றும் சக்தியைக் குறிக்கும் பண்டைய எகிப்திய சின்னமாகும். இது எகிப்திய மொழியில் வெத்சட் என்று அழைக்கப்படுகிறது. இந்த கண் [[வத்செட்]], [[ஆத்தோர்]], பாசுடேட் மற்றும் மூத் ஆகிய எகிப்திய பெண் கடவுள்களுடன் ஒப்பிடப்படுகிறது. மம்மிக்களில் காணப்படும் ஏழு காப்புகளில் இந்த கண் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும்.
 
[[பகுப்பு:பகுப்பில்லாதவை]]
93

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2096554" இருந்து மீள்விக்கப்பட்டது