முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

89 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
விக்கியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்
பல ஆறுகள் பாய்வதால், பஞ்சாபின் பெரும்பகுதி வளமிக்க [[வண்டல் மண்]] கொண்டுள்ளது. சிறப்பான நீர்ப்பாசன கால்வாய்கள் அமைப்பையும் கொண்டுள்ளது.<ref name="ReferenceB">{{cite web|url=http://punjabgovt.gov.in/StateProfile.aspx|title=State Profile – About Punjab|publisher=Punjabgovt.nic.in|accessdate=2010-07-18}}</ref> பொதுவாக வரண்ட வானிலையை கொண்டிருப்பினும், மிகச் சிறந்த நீர்பாசன கட்டமைப்பினை கொண்டிருப்பதாலும், வளமிக்க மூன்று ஆறுகள் பாய்வதாலும், வேளாண்மையில் சிறந்து விளங்குகிறது.
 
வடகிழக்கு பகுதியில் இமய மலையின் அடிவாரத்தில் ஏற்றயிறக்கமான மலைக்குன்றுகள் உள்ளன. இதன் சராசரி உயரம் கடல்மட்டத்திலிருந்து {{convert|300|m|ft}} ஆகும்; தென்மேற்கில் இது {{convert|180|m|ft}} ஆகவும் வடகிழக்கில் {{convert|500|m|ft}}க்கும் கூடுதலாகவும் உள்ளது. தென்மேற்குப் பகுதி பகுதிவறள் வட்டாரமாகும்; இறுதியில் [[தார்ப் பாலைவனம்|தார்ப் பாலைவனத்துடன்]] இணைகிறது. வடகிழக்கு பகுதியில் [[சிவாலிக் மலை]] பரவியுள்ளது.
 
பஞ்சாபின் வெவ்வேறு பகுதிகளில் மண்வளம் அங்குள்ள நிலவியல், தாவரங்கள், பாறையமைப்பைப் பொறுத்து மாறுகின்றது. பஞ்சாப் பகுதியின் தட்பவெட்பம், பருவ நிலைக்கு தக்கவாறு, -5&nbsp;°C இருந்து 47&nbsp;°C வரை நிலவுகிறது. வட்டார வானிலை வேறுபாடுகளால் இவ்வாறான மண்ணின் பண்புகள் மிகவும் வேறுபடுகின்றன. பஞ்சாபை மூன்று வேறுபட்ட வட்டாரங்களாக, மண்வளத்தைக் கொண்டு, பிரிக்கலாம்: தென்மேற்கு, நடுவம், கிழக்கு
 
பஞ்சாப் நிலநடுக்க அபாய மண்டலங்கள் II, III, IV கீழ் வருகின்றது. மண்டலம் II குறைந்த தீவாய்ப்புள்ள மண்டலமாகும்; மண்டலம் III மிதமான தீவாய்ப்புள்ள மண்டலமாகவும் மண்டலம் IV உயர்ந்த தீவாய்ப்புள்ள மண்டலமாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன.<ref>{{cite web|author=Pragati Infosoft Pvt. Ltd.|url=http://punjabonline.in/Profile/Geography/|title=Punjab Geography, Geography of Punjab, Punjab Location, Punjab Climate|publisher=Punjabonline.in|accessdate=2010-07-18}}</ref>
=== வானிலை ===
[[Fileபடிமம்:Punjab Monsoon.jpg|thumb|right|பருவமழையின்போது பஞ்சாபி விளைநிலங்கள்]]
 
பஞ்சாபின் புவியியலாலும் [[அயன அயல் மண்டலம்|அயன அயல் மண்டல]] அமைவிடத்தாலும் இங்கு மாதத்திற்கு மாதம் வேறுபடும் வானிலை நிலவுகின்றது. குளிர்காலத்தில் மாநிலத்தின் சில பகுதிகளில் மட்டுமே வெப்பநிலை {{convert|0|C|F}}க்கு கீழே சென்றபோதும் நிலமட்ட பனிப்புகை பஞ்சாபின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றது. வெப்பநிலை உயரும்போது [[ஈரப்பதம்|ஈரப்பதமும்]] உயர்கின்றது. இருப்பினும் மேகமூட்டம் இல்லாத காலங்களில் ஈரப்பதம் குறைந்துள்ளபோது வெப்பநிலை மிகவிரைவாக மேலேறுகின்றது.<ref name="auto">{{cite web|url=http://www.discoveredindia.com/punjab/the-green-granary-of-india/seasons.htm|accessdate=2015-10-27|title=Weather & Climate Of Punjab}}</ref>
 
மே மாத நடுவிலிருந்து சூன் வரை மிக உயரிய வெப்பநிலை நிலவுகின்றது. வெப்பநிலை {{convert|40|C|F}}க்கும் கூடுதலாக உள்ளது. லூதியானாவில் மிக உயர்ந்த வெப்பநிலையாக {{convert|46.1|C|F}}உம் பட்டியாலா, அமிருதசரசில் மிக உயர்ந்த வெப்பநிலையாக {{convert|45.5|C|F}}உம் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் சனவரியில் மிகக் குறைந்த வெப்பநிலை காணப்படுகின்றது. சூரியரேகைகள் மிகச் சாய்ந்திருப்பதால் குளிர்காற்று வெப்பநிலையை கட்டுப்படுத்துகின்றது.<ref name="auto" />
 
திசம்பர் முதல் பெப்ரவரி வரை குளிர்காலம் நிலவுகின்றது. மிகக் குறைந்த வெப்பநிலையாக அமிருதசரசில் ({{convert|0.2|C|F}})உம் லூதியானாவில் {{convert|0.5|C|F}}உம் பதிவு செய்யப்பட்டுள்ளன. குளிர்காலத்தில் இரண்டு மாதங்களுக்கு குறைந்த வெப்பநிலை {{convert|5|C|F}} கீழுள்ளது. சனவரி, பெப்ரவரியின் மிக உயரிய வெப்பநிலை சூன் மாதத்தின் மிகக் குறைந்த வெப்பநிலையை விடக் குறைவாகும். பஞ்சாபின் ஆண்டு சராசரி வெப்பநிலை ஏறத்தாழ {{convert|21|C|F}} ஆகும்.<ref name="auto" />
 
== வரலாறு ==
 
=== பஞ்சாபில் சீக்கியர்கள் ===
[[Fileபடிமம்:Sikhs with chakrams.jpg|right|200px|thumb|[[1844]]-ல் தலைப்பாகை அணிந்த சீக்கிய சிப்பாய்கள்]]
[[பாபர்]] வட இந்தியாவை வென்ற நேரத்தில் சீக்கியமும் வேர் விட்டது. அவரது பெயரர், [[அக்பர்]], சமய விடுதலையை ஆதரித்தார். [[குரு அமர் தாஸ்|குரு அமர்தாசின்]] [[லங்கர் (சீக்கியம்)|லங்கர்]] எனும் சமுதாய உணவகத்தைக் கண்டு சீக்கியத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தார். லங்கருக்கு நிலம் கொடையளித்ததுடன் [[சீக்கியக் குருக்கள்|சீக்கிய குருக்களுடன்]] 1605இல் தமது மரணம் வரை இனிய உறவு கொண்டிருந்தார்.<ref>{{harvnb|Kalsi|2005|pages=106–107}}</ref> ஆனால் அடுத்துவந்த [[ஜஹாங்கீர்]], சீக்கியர்களை அரசியல் அச்சுறுத்தலாக கருதினார். குஸ்ரூ மிர்சாவிற்கு ஆதரவளித்ததால் [[குரு அர்ஜன்]] தேவை கைது செய்து<ref>{{harvnb|Markovits|2004|page=98}}</ref> சித்திரவதைக்குட்படுத்தி கொல்ல ஆணையிட்டார். அர்ஜன் தேவின் உயிர்க்கொடை ஆறாவது குரு, [[குரு அர்கோவிந்த்]] சீக்கிய [[இறைமை]]யை அறிவிக்கச் செய்தது; [[அகால் தக்த்]]தை உருவாக்கி [[அமிருதசரசு|அமிருதசரசை]] காக்க கோட்டையும் கட்டினார்.<ref name="Jestice 2004 pages=345-346">{{harvnb|Jestice|2004|pages=345–346}}</ref>
 
தற்கால பஞ்சாப், [[அரியானா]]வில் சத்துலச்சு ஆற்றை வடக்கிலும் இமய மலையை கிழக்கிலும் யமுனா ஆறு, [[தில்லி]]யைத் தெற்கிலும் [[சிர்சா மாவட்டம்|சிர்சா மாவட்டத்தை]] மேற்கிலும் எல்லைகளாகக் கொண்ட நாடுகளின் குழு [[சிசு-சத்துலுச்சு]] எனப்படுகின்றது. இந்த நாடுகளை [[மராட்டியப் பேரரசு|மராட்டியப் பேரரசின்]] சிந்தியா வம்சத்தினர் ஆண்டு வந்தனர். 1803-1805இல் [[இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்]] வரை இப்பகுதியின் சிற்றரசர்களும் அரசர்களும் மராத்தியர்களுக்கு கப்பம் கட்டி வந்தனர்.<ref name="Books.google.co.in">{{cite book|url=https://books.google.com/books?id=sxhAtCflwOMC&pg=PA334|title=A Comprehensive History of Medieval India: Twelfth to the Mid-Eighteenth Century}}</ref> சிசு-சத்துலுசு நாடுகள் [[கைத்தல்]], [[பட்டியாலா]], [[ஜிந்து]], [[தானேசர்]], [[மாலேர் கோட்லா]], [[பரீத்கோட் இராச்சியம்|பரீத்கோட்]] ஆகும்.
 
=== சீக்கியப் பேரரசு ===
 
{{Main article|சீக்கியப் பேரரசு}}
[[Fileபடிமம்:Sikh Empire.JPG|thumb|right|[[சீக்கியப் பேரரசு]]]][[Fileபடிமம்:Darbar of Maharaja Ranjit Singh.jpg|thumb|380px|[[ரஞ்சித் சிங்|மகாராசா ரஞ்சித்சிங்]] அவையில் அனைத்து சமய மக்களும் இடம் பெற்றிருத்தல்]]
[[Fileபடிமம்:Ranjit Singh at Harmandir Sahib - August Schoefft - Vienna 1850 - Princess Bamba Collection - Lahore Fort.jpg|left|thumb|அமிர்தசரசின் பொற்கோவிலருகே கிரந்த் சாகிப் ஓதப்படுவதை கேட்கும் மகாராசா இரஞ்சித் சிங்]]
1801–1849 காலக்கட்டத்தில் ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த [[கால்சா]] கட்டைமைப்பினைப் பயன்படுத்தி, [[சீக்கிய சிற்றரசுகள்|சீக்கிய சிற்றரசுகளை]] ஒன்றிணைத்து [[ரஞ்சித் சிங்|மகாராசா இரஞ்சித் சிங்]] [[சீக்கியப் பேரரசு|சீக்கியப் பேரரசை]] நிறுவினார். இந்தப் பேரரசு மேற்கில் [[கைபர் கணவாய்]], வடக்கில் [[சம்மு காசுமீர்|காசுமீர்]], தெற்கில் [[சிந்து மாகாணம்]], கிழக்கில் [[திபெத்து]] வரைப் பரவியிருந்தது. இப்பேரரசின் முதன்மையான புவியியல் அடித்தளமாக பஞ்சாப் பகுதி அமைந்திருந்தது. இந்தப் பேரரசின் [[மக்கள் தொகையியல்|மக்கள்தொகையில்]] 70% முசுலிம்களும் 17% சீக்கியர்களும் 13% இந்துக்களும் இருந்தனர்.<ref>{{cite web|url=http://www.exoticindiaart.com/book/details/IDE822/ |title=Ranjit Singh: A Secular Sikh Sovereign by K.S. Duggal. '&#39;(Date:1989. ISBN 81-7017-244-6'&#39;) |publisher=Exoticindiaart.com |date=2009-02-01 |accessdate=2009-08-09}}</ref> தமது படைகளை நவீனப்படுத்தினார்; ஐரோப்பிய படைத்துறை அதிகாரிகளை நியமித்து நவீனப் போர்முறைகளில் பயிற்றுவித்தார். துப்பாக்கி, பீரங்கிகளைக் கொண்டு முதன்மையான படையாக மாற்றினார்.<ref name="Encyclopædia Britannica Eleventh Edition 1911 Page 892">Encyclopædia Britannica Eleventh Edition, (Edition: Volume V22, Date: 1910-19111910–1911), Page 892.</ref><ref>{{cite web|url=http://encyclopedia.jrank.org/PYR_RAY/RANJIT_SINGH_MAHARAJA_178o_1839.html |title=MAHARAJAH RANJIT SINGH ... – Online Information article about MAHARAJA RANJIT SINGH |publisher=Encyclopaedia.jrank.org |accessdate=2009-08-09}}</ref>
 
ஆனால் 1839இல் இரஞ்சித் சிங்கின் மறைவிற்குப் பிறகு உள்நாட்டுக் குழப்பங்களால் பேரரசு பலமிழந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி [[பிரித்தானியப் பேரரசு]] [[முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர்|ஆங்கிலேய-சீக்கியப் போரைத்]] தொடுத்தனர். படைத்துறையின் தலைமையால் ஏமாற்றப்பட்டு சீக்கியப் பேர்ரசு பிரித்தானியர்களிடம் தோல்வியைத் தழுவியது.<ref name="Grewal">{{cite book|title=The Sikhs of the Punjab|author=J. S. Grewal|publisher=Cambridge University Press |year=1998}}</ref><ref>Maharaja Ranjit Singh, the last to lay arms, (Duggal,p.136-138)</ref>
 
1849இல் மீண்டும் நடந்த இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போரில் தோற்கடிக்கப்பட்டு தனித்தனி [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|மன்னராட்சிகள்]] நிறுவப்பட்டன; பிரித்தானிய மாகாணமாக பஞ்சாப் நிறுவப்பட்டது. பிரித்தானிய அரசியின் நேரடி சார்பாளராக ஆளுநர் இலாகூரில் நியமிக்கப்பட்டார்.
=== பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா) ===
[[Fileபடிமம்:Punjab 1909.jpg|thumb|[[பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)|பிரித்தானிய பஞ்சாப் மாகாணம்]], 1947க்கு முன்னர்]]
சிசு-சத்துலச்சு அரசுகள் மராத்தியப் பேரரசின் சிந்தியா மரபுவழியினரால் ஆளப்பட்டு வந்தன. [[இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்|இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில்]] மராத்தியர்கள் தோல்வியடைய இந்தப் பகுதி பிரித்தானியர்களின் கைவசம் வந்தது. 1809இல் இரஞ்சித் சிங்குடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி இந்த சிற்றரசுகள் முறையான பிரித்தானிய பாதுகாப்பின் கீழ் வந்தன.<ref name="Books.google.co.in" /><ref name="http">{{cite book|url=https://books.google.com/books?id=D_v3Y7hns8QC&pg=PA13 |title=History Of The Marathas |first=R.S. |last=Chaurasia |publisher= |accessdate=2012-05-26}}</ref><ref name="ReferenceC">{{cite book|url=https://books.google.com/books?id=Nyk6oA2nOlgC&pg=PA379 |title=Aspects of India's International Relations, 1700 to 2000: South Asia and the ... |publisher= |accessdate=2013-03-29}}</ref>
 
இரஞ்சித் சிங்கின் மறைவிற்குப் பிறகு நிகழ்ந்த [[முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர்|முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போரில்]] சீக்கியர்கள் தோல்வியுற்றனர். போருக்கான நட்டயீடாக சத்துலச்சு ஆற்றிற்கும் [[பியாஸ் ஆறு|பியாஸ்]] ஆற்றுக்கும் இடையேயான பகுதியும் [[காஷ்மீர்|காசுமீரும்]] [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|பிரித்தானிய கம்பெனி ஆட்சிக்கு]] வழங்கப்பட்டன; இதில் காசுமீரை சம்முவை பிரித்தானியரின் கைப்பொம்மையாக ஆண்டுவந்த குலாப் சிங் விலைக்கு வாங்கிக் கொண்டு சம்மு & காசுமீர் அரசராக முடிசூட்டிக் கொண்டார்.
 
மீண்டும் சீக்கியர் தங்களை மீளமைத்துக் கொண்டு போரிட்ட இரண்டாம் ஆங்கில-சீக்கியப் போரில் மீண்டும் தோல்வியுற 1849 இலாகூர் உடன்பாட்டின்படி சீக்கிய அரசர் துலீப் சிங்கிற்கு ஓய்வூதியம் தந்து பஞ்சாபை [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்]] எடுத்துக் கொண்டது. பஞ்சாப் பிரித்தானிய இந்தியாவின் மாகாணமாயிற்று; [[பட்டியாலா]], கபூர்தலா, பரீத்கோட், நாபா, ஜிந்த் போன்ற சிறிய அரசுகள் lபிரித்தானியருடன் [[துணைப்படைத் திட்டம்|துணைப்படைத் திட்டத்தின்]] கீழ் உள்நாட்டில் [[இறைமை]]யைக் கொண்டு அதேநேரம் பிரித்தானிய பாதுகாப்பை ஏற்றனர்.<ref>{{cite news|title=According to a legend which finds mention on khalistan-affairs.org, in 1930, Maharaja Bhupinder Singh felt slighted at the British Rolls Royce company’s refusal to accept an order from him for a new Rolls Royce car.|url=http://www.tribuneindia.com/2004/20040516/spectrum/main6.htm}}</ref>
 
1946இல் பெரும் சமயஞ்சார்ந்த வன்முறை வெடித்தது; பஞ்சாபின் பெரும்பான்மை முசுலிம்களுக்கும் இந்து, சீக்கியர்களுக்கும் இடையே கலகம் மூண்டது. காங்கிரசும் முசுலிம் லீக்கும் பஞ்சாபை சமய அடிப்படையில் பிரிக்க உடன்பட்டனர்.<ref>{{cite web|title=Ethnic cleansing and genocidal massacres 65 years ago by Ishtiaq Ahmed|url=http://infocus.asiaportal.info/2012/09/14/ethnic-cleansing-and-genocidal-massacres-65-years-ago-by-ishtiaq-ahmed/}}</ref>
=== விடுதலைக்குப் பின்னர் ===
1947இல் பஞ்சாப் மாகாணம் சமய அடிப்படையில் [[மேற்கு பஞ்சாப்]], [[கிழக்கு பஞ்சாப்]] என [[இந்தியப் பிரிவினை|பிரிக்கப்பட்டது]]. பெருந்தொகையான மக்கள் இடம் பெயர்ந்தனர்; செல்லும் வழியிலும் சமயச் சண்டைகள் நடந்தவண்ணம் இருந்தது. சிறிய பஞ்சாபி சிற்றரசுகள், பட்டியாலா அரசரின் வழிகாட்டுதலில், இந்திய ஒன்றியத்துடன் இணைந்தன. இவற்றை அடக்கிய புதிய மாநிலமாக [[பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம்]] உருவானது. 1956இல் இது கிழக்கு பஞ்சாபுடன் இணைக்கப்பட்டு புதிய விரிவான ''பஞ்சாப்'' மாநிலம் உருவானது.
 
1950இல் இந்திய அரசியலமைப்பு இரு மாநிலங்களை அங்கீகரித்தது: முந்தைய பிரித்தானிய பஞ்சாப் மாகாணத்தின் இந்தியப் பகுதி கிழக்கு பஞ்சாப், முன்னாள் மன்னராட்சி அரசுகள் இணைந்த [[பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம்]] (PEPSU). மலைநாட்டில் இருந்த பல மன்னராட்சிகளை ஒருங்கிணைத்து [[இமாச்சலப் பிரதேசம்]] உருவாக்கப்பட்டது.
=== தற்போதைய பஞ்சாப் உருவாக்கம் ===
பிரிவினைக்கு முந்தைய பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரமான இலாகூர் பாக்கித்தானுக்குக் கொடுக்கப்பட்டு விட்டதால் இந்திய பஞ்சாபிற்கு புதிய தலைநகரமாக [[சண்டிகர்]] கட்டமைக்கப்பட்டது. இந்த நகரம் கட்டி முடிக்கப்படும்வரை, 1960, [[சிம்லா]] தற்காலிகத் தலைநகரமாக இருந்தது. 1956இல் பெப்சு மாநிலம் பஞ்சாபில் இணைக்கப்பட்டு கிழக்கு பஞ்சாப் என்ற பெயரிலிருந்து பஞ்சாப் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
 
[[அகாலி தளம்|அகாலி தளமும்]] பிற சீக்கிய அமைப்புக்களும் பல்லாண்டுகளாக போராடி 1966இல் மொழிவாரியாக கிழக்கு பஞ்சாப் பிரிக்கப்பட்டது. இந்தி பேசிய தெற்கு பஞ்சாப் தனி மாநிலமாக, [[அரியானா]] எனவும் வடக்கிலிருந்து பகாரி எனப்படும் மலைநாட்டு மொழி பேசிய மலைப்பகுதிகள் [[இமாச்சலப் பிரதேசம்]] எனவும் உருவாயின. சண்டிகர் பஞ்சாபிற்கும் அரியானாவிற்கும் எல்லையாக, தனி [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஒன்றியப் பகுதியானது]]. பஞ்சாபிற்கும் அரியானாவிற்கும் பொதுத் தலைநகரமாக சண்டிகர் விளங்கியது.
 
1970களில், [[பசுமைப் புரட்சி]] பஞ்சாபிற்கு பொருளியல் வளமையைக் கொணர்ந்தது.
 
== கல்வி ==
{{Main article|பஞ்சாபில் கல்வி|பஞ்சாப் பள்ளிக் கல்வி வாரியம்}}
[[படிமம்:Main Building NIT jalandhar.jpg|right|200px|thumb| [[ஜலந்தர்]] [[பி ஆர் அம்பேத்கர் தேசிய தொழில்நுட்ப கழகம், ஜலந்தர்|என்.ஐ.டி-யின் முதன்மை கட்டடம்]]]]
துவக்கக் கல்வியும் இடைநிலைக் கல்வியும் பஞ்சாப் பள்ளிக்கல்வி வாரியத்தால் ஒன்றிணைக்கப்படுகின்றது. உயர் கல்விக்கு 32 பல்கலைகழகங்கள் கலை, மாந்தவியல், அறிவியல், பொறியியல், சட்டம், மருந்தியல், கால்நடை மருத்துவம், வணிக மேலாண்மை ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிபுக்களை வழங்கி வருகின்றன. இவற்றில் 11 அரசு பல்கலைக்கழகங்களாகும். [[பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம்]] உலக புகழ் பெற்றது. அதுவே, 1960–1970 களில் நடந்த பஞ்சாப்பின் பசுமை புரட்சிக்கு பெரும் பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. [[பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்|பஞ்சாப் பல்கலைக்கழகத்தில்]] படித்த முன்னாள் மாணவர்களில் முன்னாள் [[இந்தியப் பிரதமர்]] [[மன்மோகன் சிங்]], [[உயிர்வேதியியல்|உயிர்வேதியியலில்]] [[நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்|நோபல் பரிசு பெற்ற]] முனைவர். [[ஹர் கோவிந்த் கொரானா]] ஆகியோர் உள்ளனர்.
 
1894இல் நிறுவப்பட்ட [[கிருத்தவ மருத்துவக் கல்லூரி, லூதியானா]] நாட்டின் தொன்மையான மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாக உள்ளது.<ref>[http://www.telegraphindia.com/1050815/asp/knowhow/story_5105265.asp An Indian doctor’s triumph] The Telegraph, 15 August 2005</ref> கல்வியில் பாலின இடைவெளி உள்ளது; ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் பத்து இலட்சம் முப்பதாயிரம் மாணவர்களில் 44% மடுமே பெண்களாவர்.<ref>Ministry of Human Resource Development, G. o. (29 August 2013). Department of School Education and Literacy http://mhrd.gov.in/rashtriya_madhyamik_shiksha_abhiyan</ref>
 
== பண்பாடு ==
{{Main article|பஞ்சாபிப் பண்பாடு|பஞ்சாபி மக்கள்|பஞ்சாபித் திருவிழாக்கள்|பஞ்சாபி உடை|பஞ்சாபிக் குர்த்தாவும் தாம்பாவும்}}
[[Fileபடிமம்:Apr 21 ontario place punjabi virsa miss brampton.JPG|right|thumb|பண்பாட்டு நிகழ்வொன்றில் பெண்கள்]]
பஞ்சாபிப் பண்பாட்டில் பல கூறுகள் உள்ளன: [[பாங்கரா (இசை)|பாங்கரா]] போன்ற [[பஞ்சாபி இசை|இசை]], விரிவான சமய மற்றும் சமயசார்பற்ற [[பஞ்சாப் நாட்டுப்புற நடனங்கள்|நடன மரபுகள்]], பஞ்சாபி மொழியில் நீண்ட [[பஞ்சாபி மொழிக் கவிஞர்கள் பட்டியல்|இலக்கிய வரலாறு]], பிரிவினைக்கு முன்பிருந்தே குறிப்பிடத்தக்க அளவிலான [[பஞ்சாபித் திரைப்படங்கள் (இந்தியா)|பஞ்சாபித் திரைப்படத்துறை]], வெளிநாடுகள் வரை புகழ்பெற்றுள்ள பல்வகைப்பட்ட [[பஞ்சாபிய உணவு|உணவுகள்]], மற்றும் [[உலோகிரி]], <ref>{{cite web|url=http://www.lohrifestival.org/harvest-festival-of-punjab.html|title=Harvest Festival of Punjab, Harvest Festival Lohri, Cultural Festival of India, Harvest Festival in India|publisher=Lohrifestival.org|accessdate=2010-07-18}}</ref> [[வசந்தப் பட்டத் திருவிழா]], [[வைசாக்கி]], [[தீயான் (ஊஞ்சல்)]],<ref>{{cite news|title=Sikh festival celebrates women and girls|url=http://www.brantnews.com/news-story/5680153-sikh-festival-celebrates-women-and-girls/}}</ref><ref>{{cite news|title=Celebrate mothers again|url=http://www.kamloopsthisweek.com/celebrate-mothers-again/}}</ref><ref>{{cite news|title=Girl power on display at Teeyan da Mela festival|url=http://www.appeal-democrat.com/news/girl-power-on-display-at-teeyan-da-mela-festival/article_cdc6df48-319f-11e4-aee5-0017a43b2370.html}}</ref> போன்ற பல பருவஞ்சார் அறுவடை திருவிழாக்கள் என்பனவாகும்.
 
[[பஞ்சாபி கிஸ்ஸா|கிஸ்ஸா]] எனப்படும் பஞ்சாபி மொழி வாய்வழி கதைகள் அராபியத் தீபகற்பத்தில் தொடங்கி ஈரான், ஆப்கானித்தான் வழியே வந்தவையாகும்.<ref name="CITEREFFarinaMir">{{cite web|url=http://www.unc.edu/depts/cdeisi/abstracts.html|title=Representations of Piety and Community in Late-nineteenth-century Punjabi Qisse|first=Farina|last=Mir|publisher=[[கொலம்பியா பல்கலைக்கழகம்]]|accessdate=2008-07-04}}</ref>
[[Fileபடிமம்:Punjabi jutti at Dilli Haat.jpg|right|thumb|பஞ்சாபி ஜூத்தி]]
பஞ்சாபி திருமணச் சடங்குகளும் மரபுகளும் பஞ்சாபிப் பண்பாட்டை பிரதிபலிக்கின்றன; திருமணங்களில் சடங்குகள், பாட்டுக்கள், நடனங்கள், உணவு, உடை, என நூற்றாண்டுகளாக பரிணமித்த பண்பாட்டின் எடுத்துக் காட்டுகளாக விளங்குகின்றன.<ref>{{cite news|title=was-it-a-sikh-wedding|url=http://www.bollywoodlife.com/news-gossip/was-it-a-sikh-wedding-for-shahid-kapoor-and-mira-rajput-view-pic/}}</ref><ref>{{cite news|title=Sikh groom thrown from horse during wedding procession in Surrey|url=http://www.cbc.ca/news/canada/british-columbia/sikh-groom-thrown-from-horse-during-wedding-procession-in-surrey-1.3162639}}</ref>
 
 
== சுற்றுலா ==
{{Main article|பஞ்சாபில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களின் பட்டியல்}}
[[Fileபடிமம்:MotiBaghPalace.jpg|left|thumb|[[பட்டியாலா]]விலுள்ள மோதிபாக் அரண்மனை]]
[[படிமம்:mohindra college night.jpg|right|200px|thumb|புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் [[மொகிந்தரா கல்லூரி, பட்டியாலா]].]]
[[Fileபடிமம்:Harminder sahib5.jpg|right|thumb|[[அமிருதசரசு|அமிருதசரசில்]] உள்ள [[பொற்கோயில்]] முதன்மையான சுற்றுலா இடமாகும்]]
பஞ்சாப்பின் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் சுற்றுலாத்துறையும் ஒன்று. பஞ்சாப்பின் சுற்றுலாத்துறை அம்மாநிலத்தின் கலாச்சாரம், பண்பாடு, பழம்பெருமை, வரலாறு ஆகியவற்றை பறைசாற்றும் சின்னங்களை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது.<ref>{{cite news|title=World Heritage Day: 8 places to visit in Punjab|url=http://www.hindustantimes.com/chandigarh/world-heritage-day-places-to-visit-in-punjab/article1-1338517.aspx}}</ref> எடுத்துக்காட்டாக [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகத்தின்]] தொல்லியல் களங்கள, [[பட்டிண்டா]]வின் பழமையான கோட்டை, [[கபுர்த்தலா]], [[பட்டியாலா]]வின் சீக்கியக் கட்டிடக்கலைச் சிறப்பு, [[லெ கொபூசியே]] வடிவமைத்த தற்காலத் தலைநகரம் [[சண்டிகர்]] ஆகியன.<ref>[http://www.mapsofindia.com/stateprofiles/punjab/ Punjab]. Mapsofindia.com. Retrieved on 2012-01-18.</ref>
 
[[அமிருதசரசு|அமிருதசரசிலுள்ள]] [[பொற்கோயில்]] ஓர் முதன்மையான சுற்றுலா இடமாகும். இந்தியாவிற்கு [[தாஜ் மகால்]] காண வருவோரை விட இங்கு வரவோரின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. லோன்லி பிளானட் 2008ஆம் ஆண்டு பொற்கோயிலை உலகின் மிகச்சிறந்த ஆன்மீக இடங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ளது.<ref>[http://web.archive.org/web/20080202051110/http://www.ptinews.com/pti/ptisite.nsf/0/03d3a18aa4bdceae6525738e00199bff?OpenDocument Lonely Planet tips Mumbai as a must-see destination in 2008]. ptinews.com. 9 November 2007</ref> அமிருதசரசில் பன்னாட்டு தங்குவிடுதிகள் பல விரைவாக கட்டமைக்கப்பட்டு வருகின்றன.
 
மற்றுமொரு ஆன்மீக, வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலா இடமாக [[அனந்த்பூர் சாஹிப்]] உள்ளது; இங்குள்ள விரசத்-இ-கால்சா (கால்சா பாரம்பரிய நினைவக வளாகம்) காணவும் ஹோலா மொகல்லா கொண்டாட்டங்களில் பங்கேற்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். [[லூதியானா]] அருகில் ராய்பூர் கோட்டையில் நடைபெறும் [[கிலா ராய்பூர் விளையாட்டுத் திருவிழா]]வும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது.<ref>{{cite news|title=Pictures displayed at media centre attract visitors to 'Kila Raipur' games|url=http://www.hindustantimes.com/ludhiana/pictures-displayed-at-media-centre-attract-visitors-to-kila-raipur-games/article1-1179480.aspx}}</ref><ref>{{cite news|title=Kila Raipur sports festival begins today|url=http://indianexpress.com/article/cities/ludhiana/kila-raipur-sports-festival-begins-today/}}</ref><ref>{{cite news|title=Kila Raipur sports festival concludes|url=http://www.tribuneindia.com/news/punjab/community/kila-raipur-sports-festival-concludes/36826.html}}</ref>[[பட்டான்கோட்]]டில் சாபூர் கண்டி கோட்டை, ரஞ்சித் சாகர் ஏரி, முக்த்சர் கோயில் என்பன சுற்றுலா இடங்களாக உள்ளன. இந்திய - பாகிஸ்தான் எல்லைப்புற பாதுகாப்பு காவல் சாவடியான [[வாகா]]வில் அன்றாடம் நடைபெறும் இருநாட்டு கொடிகளை இராணுவ வீரர்கள் கம்பத்திலிருந்து இறக்கும் காட்சி விழா மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
 
=== வானூர்தி நிலையங்கள் ===
[[Fileபடிமம்:Amritsar Airport Entrance.jpg|thumb|right|[[ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி பன்னாட்டு விமான நிலையம்]], [[அமிருதசரசு]]]]
அமிர்தசரஸில் உள்ள [[ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி பன்னாட்டு விமான நிலையம்]] மற்றும் மொகாலியிலுள்ள [[சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையம்]] என்பன இம்மாநிலத்திலுள்ள பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் ஆகும். பட்டிண்டா வானூர்தி நிலையம், [[பட்டான்கோட் வானூர்தி நிலையம்]], பட்டியாலா வானூர்தி நிலையம் மற்றும் சானேவல் வானூர்தி நிலையம் ஆகியவை ஏனைய வானூர்தி நிலையங்கள் ஆகும்.
 
மாநிலத்தின் அனைத்து நகரங்களும் நான்கு வழிச் சாலைகளான தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன. [[கொல்கத்தா]]வை [[பெசாவர்|பெசாவருடன்]] இணைக்கும் [[பெரும் தலைநெடுஞ்சாலை]] பஞ்சாபின் [[ஜலந்தர்]] மற்றும் [[அமிர்தசரஸ்]] ஊடாகச் செல்கின்றது.
 
== விளையாட்டுக்கள் ==
{{Main article|இந்திய பஞ்சாபில் விளையாட்டுக்கள்}}
[[Fileபடிமம்:Kabaddi.....JPG|left|thumb|[[பஞ்சாபில் கபட்டி (சடுகுடு)கபடி|கபடி (வட்டப் பாணி)]]]]
[[Fileபடிமம்:LightsMohali.png|right|thumb|இரவொளியில் பஞ்சாப் துடுப்பாட்ட அரங்கம், அசித்கர்]]
ஊரக பஞ்சாபில் தனது ஆரம்பத்தைக் கொண்ட [[பஞ்சாபில் கபட்டி (சடுகுடு)கபடி|கபடி (வட்டப் பாணி)]] அணி விளையாட்டு மாநில விளையாட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.<ref>{{cite news|title=Circle Style Kabaddi in a new avatar - World-wide Kabaddi League|url=http://www.afaqs.com/news/company_briefs/?id=57212_Circle+Style+Kabaddi+in+a+new+avatar+-+World-wide+Kabaddi+League}}</ref><ref>{{cite news|title=Kabaddi player alleges Punjab Police pushed him into drugs|url=http://www.tribuneindia.com/news/sport/kabaddi-player-alleges-punjab-police-pushed-him-into-drugs/99617.html}}</ref> மாநிலத்தில் புகழ்பெற்ற மற்றுமொரு விளையாட்டு [[வளைதடிப் பந்தாட்டம்]] ஆகும்.<ref>{{cite news|title=Punjab women enter semifinals of National Hockey Championship|url=http://www.hindustantimes.com/chandigarh/punjab-women-enter-semifinals-of-national-hockey-championship/article1-1343137.aspx}}</ref>ஊரக ஒலிம்பிக்சு என பரவலாக அறியப்படும் [[கிலா ராய்பூர் விளையாட்டுத் திருவிழா]] [[லூதியானா]] அருகிலுள்ள ராய்பூர் கோட்டையில் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது. முதன்மையான பஞ்சாபி ஊரக விளையாட்டுக்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன; வண்டிப் பந்தயங்கள், கயிறு இழுத்தல் போன்றவை இதில் இடம் பெறுகின்றன. [[இந்திய பஞ்சாப் அரசு|பஞ்சாப் மாநில அரசு]] உலக கபடி கூட்டிணைவை நடத்துகின்றது.<ref>{{cite news|title=World Kabaddi League announces team franchise names and logos|url=http://www.firstpost.com/sports/world-kabaddi-league-announces-team-franchise-names-logos-1634393.html}}</ref><ref>{{cite news|title=the World Kabaddi League (WKL) was launched with the promoters — Punjab Deputy Chief Minister Sukhbir Singh Badal is the president of the league while former India hockey captain Pargat Singh is the league commissioner — unveiling the eight teams, their owners and marquee players.|url=http://www.thehindu.com/sport/other-sports/world-kabaddi-league-launched/article6246251.ece}}</ref> தவிரவும் பஞ்சாப் விளையாட்டுக்கள், வட்டப்பாணி கபடிக்கான உலகக்கோப்பை போன்றவற்றையும் மாநில அரசு நடத்துகின்றது. 2014ம் ஆண்டு கபடிக் கோப்பை போட்டிகளில் [[அர்கெந்தீனா]], [[கனடா]], [[டென்மார்க்]], [[இங்கிலாந்து]], [[இந்தியா]], [[ஈரான்]], [[கென்யா]], [[பாக்கித்தான்]], [[இசுக்கொட்லாந்து]], [[சியேரா லியோனி]], [[எசுப்பானியா]], [[அமெரிக்க ஐக்கிய நாடு]] நாடுகளிலிருந்து அணிகள் பங்கேற்றன.
 
பஞ்சாபில் பல சிறப்பான விளையாட்டரங்கங்கள் கட்டப்பட்டுள்ளன. [[பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம்]], குரு கோவிந்த்சிங் விளையாட்டரங்கம், குரு நானக் விளையாட்டரங்கம், பன்னாட்டு வளைத்தடிப் பந்தாட்ட அரங்கம், காந்தி விளையாட்டு வளாக திடல், சுர்சித்து வளைதடிப் பந்தாட்ட அரங்கம் அவற்றில் சிலவாம்.
53,226

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2096642" இருந்து மீள்விக்கப்பட்டது