"பஞ்சாப் (இந்தியா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
[[அமிருதசரசு|அமிருதசரசிலுள்ள]] [[பொற்கோயில்]] ஓர் முதன்மையான சுற்றுலா இடமாகும். இந்தியாவிற்கு [[தாஜ் மகால்]] காண வருவோரை விட இங்கு வரவோரின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. லோன்லி பிளானட் 2008ஆம் ஆண்டு பொற்கோயிலை உலகின் மிகச்சிறந்த ஆன்மீக இடங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ளது.<ref>[http://web.archive.org/web/20080202051110/http://www.ptinews.com/pti/ptisite.nsf/0/03d3a18aa4bdceae6525738e00199bff?OpenDocument Lonely Planet tips Mumbai as a must-see destination in 2008]. ptinews.com. 9 November 2007</ref> அமிருதசரசில் பன்னாட்டு தங்குவிடுதிகள் பல விரைவாக கட்டமைக்கப்பட்டு வருகின்றன.
 
மற்றுமொரு ஆன்மீக, வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலா இடமாக [[அனந்த்பூர் சாஹிப்]] உள்ளது; இங்குள்ள [[விரசத்-இ-கால்சா]] (கால்சா பாரம்பரிய நினைவக வளாகம்) காணவும் [[ஓல்லா மொகல்லா|ஹோலா மொகல்லா]] கொண்டாட்டங்களில் பங்கேற்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். [[லூதியானா]] அருகில் ராய்பூர் கோட்டையில் நடைபெறும் [[கிலா ராய்பூர் விளையாட்டுத் திருவிழா]]வும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது.<ref>{{cite news|title=Pictures displayed at media centre attract visitors to 'Kila Raipur' games|url=http://www.hindustantimes.com/ludhiana/pictures-displayed-at-media-centre-attract-visitors-to-kila-raipur-games/article1-1179480.aspx}}</ref><ref>{{cite news|title=Kila Raipur sports festival begins today|url=http://indianexpress.com/article/cities/ludhiana/kila-raipur-sports-festival-begins-today/}}</ref><ref>{{cite news|title=Kila Raipur sports festival concludes|url=http://www.tribuneindia.com/news/punjab/community/kila-raipur-sports-festival-concludes/36826.html}}</ref>[[பட்டான்கோட்]]டில் சாபூர் கண்டி கோட்டை, ரஞ்சித் சாகர் ஏரி, முக்த்சர் கோயில் என்பன சுற்றுலா இடங்களாக உள்ளன. இந்திய - பாகிஸ்தான் எல்லைப்புற பாதுகாப்பு காவல் சாவடியான [[வாகா]]வில் அன்றாடம் நடைபெறும் இருநாட்டு கொடிகளை இராணுவ வீரர்கள் கம்பத்திலிருந்து இறக்கும் காட்சி விழா மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
 
== போக்குவரத்து ==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2096851" இருந்து மீள்விக்கப்பட்டது