அமதெரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[File:Amaterasu.png|right|thumb|அமதெரசு குகையில் இருந்து வெளிப்படுதல்]]
 
வரி 6 ⟶ 5:
கதிரவக் கடவுளான அமதெரசு புயல் மற்றும் கடல் கடவுள் ''[[சுசானவோ]]'' மற்றும் நிலா கடவுள் ''[[சுக்குயோமி]]'' ஆகியோரின் உடன்பிறந்தவர் ஆவர். இவர்கள் மூவருமே ''[[இசநாகி]]''யின் சுத்தப்படுத்தும் சடங்கின் மூலம் பிறந்தனர். இசநாகி தன் இடது கண்ணைக் கழுவிய போது அமதெரசுவும், வலது கண்ணை கழுவிய போது சுக்குயோமியும் மூக்கைக் கழுவிய போது சுசானவோவும் பிறந்தனர்.
ஆரம்பத்தில் அமதெரசு தன் உடன்பிறந்தவரான சுக்குயோமியுடன் சேரந்து வானத்தை சரிநிகராக ஆண்டு வந்தார். ஒருநாள் அமாதெரசு தன் உயிர்த் தோழியான உணவு கடவுள் ''உகே மோச்சி'' அழைத்த விருந்திற்கு தனக்கு பதிலாக சுக்குயோமியை சென்று வருமாறு அனுப்பினார். அங்கு சென்ற சுக்குயோமிக்கு உகே மோச்சியின் உணவு பரிமாறிய விதம் சற்றும் பிடிக்காத்தால் அவரைக் கொன்றார். இதையறிந்து கோபமுற்ற அமாதெரசு இனி சுக்குயோமியின் முகத்தில் விழிக்கவே மாட்டேன் என்று கூறி அவரை விட்டு நிரந்தமாகப் பிரிந்தார். பிறகு சுக்குயோமி பாதாளத்திற்குச் சென்றதால் அவரது ஒளி குன்றியது. அமதெரசு காலை நேரத்திலும் சுக்குயோமி இரவு நேரத்திலும் வானத்தை ஆட்சி செய்தனர். இதுவே காலையும் மாலையும் தோன்றக் காரணமானது.
இசநாகி சுசானவோவை விண்ணுலகை விட்டு செல்லுமாறு கட்டளையிட்டார். சுசானவோ இறுதியாக அமதெரசுவை சந்தித்து விடைபெற்றுச் செல்ல நினைத்தான். ஆனால் அமதெரசு அவரை நம்பவில்லை. இதனால் சுசானவோ தன்னை நிரூபிக்க்க ஒரு சவால் விடுத்தான். அந்த சவாலின் படி பொருட்களில் இருந்து கடவுள்களை உருவாக்க வேண்டும். சுசானவோவின் வாளின் மூலம் அமதெரசு மூன்று பெண் கடவுள்களை உருவாக்கினார். சுசானவோ அமதெரசுவின் அணிகலன் மூலம் ஐந்து ஆண் கடவுள்களை உருவாக்கினார், பிறகு அமதெரசு ஆண் கடவுள்கள் தன் அணிகலனில் இருந்து பிறந்த்தால் தனக்கே உரிமையானது என்றார். இதனால் இருவருக்கும் சண்டை நடந்தது. முடிவில் அமதெரசு கோபத்துடன் ''அம-னோ-இவாடோ'' என்ற குகையில் மறைந்து கொண்டார். இதனால் உலகம் இருண்டது. இதற்கு தண்டனையாக சுசானவோ விண்ணகத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேற்றப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/அமதெரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது