'''கொன்றுண்ணிப் பறவைகள்பறவை''' அல்லது '''ஊனுண்ணிப் பறவைகள்பறவை''' (''birds of prey'' அல்லது ''raptors'') என்பனஎன்பது [[எலி]], [[முயல்]] போன்ற [[பாலூட்டி]] வகை [[விலங்கு]]களையும், [[கோழி]], [[புறா]] போன்ற பிற [[பறவை]]களையும் கொன்று தின்னும் பறவையினம் ஆகும். இப்பறவைகள் தம் வல்லுகிரால் (உகிர்=நகம்) தம் இரையைப் பற்றி, கூரிய நுனியுடைய அலகால் கிழித்து உண்ண வல்லன. இதில் பல்வேறு வகையான [[கழுகு]], [[வல்லூறு]], [[ஆந்தை]] போன்ற பறவைகள் அடங்கும். பெரும்பாலான ஊனுண்ணிப் பறவைகளில், பெண்பறவைகள் ஆண் பறவையிலும் அளவில் பெரியவை. இவற்றின் ஊணுண்ணும் இயல்பினால், இவை அழிந்துபோகாமல் காப்பதில் தனித்துவமான பிரச்சினைகள் காணப்படுகின்றன.