அமைதிப் பெருங்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி துப்புரவு
வரிசை 1:
{{unreferenced}}
[[Fileபடிமம்:Pacific Ocean satellite image location map.jpg|thumb]]
'''அமைதிப் பெருங்கடல்''' அல்லது '''பசிபிக் பெருங்கடல்''' (''Pacific Ocean'') உலகின் மிகப் பெரிய நீர்த் தொகுதியாகும். இதற்கு [[போர்த்துக்கல்|போர்த்துகேய]] நிலந்தேடு ஆய்வாளரான [[பெர்டினென்ட் மகலன்]] என்பவரால் "அமைதியான கடல்" என்ற பொருளில் இப்பெயர் வழங்கப்பட்டது. ஏறத்தாழ 18 [[கோடி]] சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ள [[பெருங்கடல்|இப்பெருங்கடல்]] [[உலகப் பரப்பு|உலகப் பரப்பில்]] மூன்றில் ஒரு பகுதியைச் சூழ்ந்து கொண்டுள்ளது. இது பூமியின் அனைத்துக் கண்டங்களின் கூட்டு நிலப்பரப்பை விட மிகப் பெரியதாகும்.
 
[[படிமம்:பசிபிக்Pacific பெருங்கடல்Ocean - en.jpgpng|thumb|அமைதிப் பெருங்கடல்]]
[[ஆர்க்டிக்]] பகுதியின் [[பெருங்கடல்|பெருங் கடலிலிருந்து]], [[அன்டார்டிகா]]வின் [[ராஸ் கடல்]] வரை ஏறத்தாழ 15,500 கி.மீ வட-தெற்காகவும், இந்தோனேசியா முதல் [[கொலம்பியா|கொலம்பியக் கடற்கரை]] மற்றும் [[பெரு]] வரை ஏறத்தாழ 19,800 கி.மீ கிழக்கு-மேற்காகவும் பரந்து கிடக்கும் இம்மாகடல் 5° வடக்கு [[அட்ச ரேகை]]யில் தனது கிழக்கு-மேற்கு உச்சகட்ட தூரத்தை அடைகிறது. [[மலாக்கா நீரிணைவு]] இதன் மேற்கத்திய எல்லையாக கருதப்பாடுகிறது. உலகின் மிக ஆழமான பகுதியான, 10,911 மீ ஆழமுடைய [[மரியானா அகழி]]யை இக்கடற் பகுதி உட்படுத்துகிறது. இக்கடலின் சராசரி ஆழம் 4,300 [[மீட்டர்|மீட்டராகும்]].
 
வரி 17 ⟶ 18:
அமைதிப் பெருங்கடல் நீரின் வெப்பநிலை [[துருவப்பகுதி]]களில் உறைநிலை முதல் [[நில நடுக்கோடு]] பகுதிகளில் 29° [[செல்ஷியஸ்]] வரை, என வெகுவாக வேறுபடுகிறது. நீரின் [[உப்புத்தன்மை]]யும் [[அட்ச ரேகை]] தோறும் வேறுபடுகிறது. நிலநடுக்கோடு பகுதிகளில் வருடம் முழுவது பெருமளவில் ஏற்படும் [[படிவு]]களின் காரணமாக அப்பகுதியின் உப்புத்தன்மை நடு-அட்ச ரேகைப் பகுதிகளின் உப்புத்தன்மையை விட மிகக்குறைவாக இருக்கிறது. துருவப்பகுதியின் குளிரான சூழலில் குறைந்த அளவு நீரே ஆவியாவதால் மிதவெப்ப பகுதி அட்ச ரேகைகளிலிருந்து துருவப்பகுதியை நெருங்குமளவு நீரின் உப்புத்தன்மை குறைந்துகொண்டே போகிறது. பொதுவாக அமைதிப் பெருங்கடல் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலை]] விட வெப்பமானதாக நம்பப்படுகிறது. அமைதிப் பெருங்கடல் நீரின் மேற்பரப்பு சுற்றோட்டம் [[வட அரைக்கோளம்|வட அரைக்கோளத்தில்]] [[கடியாரப்பாதை]]யாகவும் ([[வட அமைதிப் பெருங்கடற்சுற்றோட்டம்]]) [[தென் அரைக்கோளம்|தென் அரைக்கோளத்தில்]] [[எதிர்-கடியாரப்பாதை]]யாகவும் இருக்கிறது. [[தடக் காற்று]]களால் மேற்காக 15° வடக்கு அட்ச ரேகைப் பகுதிக்கு ஓட்டப்படும் வடக்கு [[நிலநடுநீரோட்டம்]], [[பிலிப்பைன்ஸ்]] பகுதியில் வடக்காக திரும்பி வெப்பமான [[குரோசியோ நீரோட்டம்|குரோசியோ நீரோட்டமாக]] மாறுகிறது.
 
பின் ஏறக்குறைய 45° வடக்கு அட்ச ரேகையில் அதன் ஒரு பகுதி கிழக்காகத் திரும்பும் [[குரோசியோ கிளை|குரோசியோ கிளையும்]]யும் மேலும் சில நீரும் வடக்காக [[அலியூட்டியன் நீரோட்டம்]] என பயணிக்கும் வேளையில் மற்ற பகுதி தெற்காக திரும்பி வடக்கு நிலநடுநீரோட்டத்துடன் இணைகிறது. அலியூட்டியன் நீரோட்டம் [[வட அமேரிக்கா]]வை நெருங்கி, அங்கு [[பெரிங் கடல்|பெரிங் கடலில்]] ஏற்படும் ஒரு எதிர்-கடியாரப்பாதை [[சுற்றோட்டம்|சுற்றோட்டத்துக்கு]] அடிப்படையாக அமைகிறது. அதன் தென்னகப் பிரிவு தெற்காக பாயும் குளிர்ந்த மிதவேக, [[கலிபோர்னியா நீரோட்டம்|கலிபோர்னியா நீரோட்டமாக]] மாறுகிறது.
 
[[தெற்கு நிலநடுநீரோட்டம்]] [[நில நடுக்கோடு]] வழியாக மேற்காக பயணித்து [[நியூகினி]]யின் கிழக்குப்பகுதியில் தெற்காகத்திரும்பி, பின் 50° தெற்கு தீர்க்க ரேகைக்கருகில் கிழக்காகத்திரும்பும். பின்னர் உலகைச்சுற்றும் [[அண்டார்டிக் துருவ-சுழற்சி நீரோட்டம்|அண்டார்டிக் துருவ-சுழற்சி நீரோட்டத்தை]] உள்ளடக்கும், தென்னக அமைதிப் பெருங்கடலின் பிரதான மேற்கு சுற்றோட்டத்துடன் இணைகிறது. பின்னர் இது [[சில்லியியன் கடற்கரை]]யை நெருங்கும்போது [[தெற்கு நிலநடுநீரோட்டம்]] இரண்டாக பிரிகிறது; ஒரு பிரிவு [[ஹான் முனை]]யை சுற்றி பாய்கிறது, மற்றொன்று வடக்காகத்திரும்பி [[கம்போல்ட் நீரோட்டம்|கம்போல்ட் நீரோட்டமாகிறது]].
 
== நில ஆராய்ச்சி ==
[[படிமம்:Pacific elevation.jpg|thumb|right|250px|அமைதிப் பெருங்கடலின் விளிம்பில் அமைதி நில ஓடு மோதுவதால் மிக நீளமான [[எரிமலை வளையம்]] கொண்டுள்ளது. பெருங்கடலுள் ஆழமான [[அகழி|அகழிகளையும்]]களையும் உடையதாகும்]]
[[ஆன்டிசைட் கோடு]] பகுதி அமைதிப் பெருங்கடலின் மற்ற நிலப்பகுதிகளிலிருந்து மிகவும் வேறுபட்டதும் மிக முக்கியமான ஒன்றுமாகும். இக்கோடு [[மத்திய அமைதிப் பெருங்கடற்படுக்கை]]யின் ஆழமான காரத்தன்மையுடைய [[எரிப்பாறை]]களை, பகுதி மூழ்கி இருக்கும் அமிலத்தன்மையான எரிப்பாறைகளிடமிருந்து பிரிக்கிறது. இக்கோடு [[கலிபோர்னிய தீவுகள்|கலிபோர்னிய தீவுகளின்]] மேற்கு எல்லைகளைப் பின்பற்றி, [[அலியூட்டியன் வளைவு|அலியூட்டியன் வளைவின்]] தெற்குப்பகுதி, [[கம்சாட்கா தீவக்குறை]]யின் கிழக்கு எல்லை, [[கூரில் தீவுகள்|குரில் தீவுகள்]], [[ஜப்பான்]], [[மரியானா தீவுகள்|மெரியானா தீவுகள்]], [[சாலமன் தீவுகள்]] மற்றும் [[நியுஸிலாந்து]] ஆகியவை வழியாக பயணிக்கிறது. இந்த வேறுபாடு மேலும் தொடர்ந்து வடகிழக்காக பயணித்து [[அல்பாட்ராஸ் கார்டிரேல்லா]]வின் மேற்கு எல்லை, [[தென் அமேரிக்கா]], [[மெக்ஸிகோ]] வழியாக சென்று பின்னர் [[கலிபோர்னியத் தீவு|கலிபோர்னியத் தீவுப்பகுதிக்கு]]ப்பகுதிக்கு திரும்புகிறது. [[ஆசியா]] மற்றும் [[ஆஸ்திரேலியா]]வின் கண்டத்துண்டுகளின் நீட்டல்களான, [[இந்தோனேசியா]], [[பிலிப்பைன்ஸ்]], [[ஜப்பான்]], [[நியூகினியா]], [[நியுஸிலாந்து]] ஆகியன இந்த [[ஆன்டிசைட் கோடு|ஆன்டிசைட் கோட்டின்]] வெளியில் இருக்கின்றன.
 
[[மத்திய அமைதிப் பெருங்கடற்படுக்கை]]யின் சிறப்பியல்புகளாக கருதப்படும் ஆழமான பள்ளங்கள், ஆழ்கடல் [[எரிமலை]]கள், கடலோர எரிமலைத் தீவுகள் ஆகிய அனைத்தும் பெரும்பாலும் இந்த ஆன்டிசைட் கோட்டின் மூடப்பட்ட வட்டத்தினுளேயே காணப்படுகின்றன. இப்பகுதிகளில் எரிமலைகளின் வெடிப்புகளிலிருந்து குழம்புகள் மெதுவாகப் பாய்ந்து பெரிய குடை-வடிவ எரிமலைகளைஉருவாகுகின்றன. இவைகளின் அழிக்கப்பட்ட சிகரப்பகுதிகள் அப்பகுதிகளில் [[வளை தீவுகள்|வளை தீவுகளாகவும்]], கூட்டங்கூட்டமாகவும் காணப்படுகின்றன. இவ்வான்டிசைட் கோட்டுக்கு வெளியே வெடித்து சிதறும் வகை எரிமலைகளே காணப்படுகின்றன. இப்பகுதியில் காணப்படும் [[எரிமலை வளையம்|அமைதிப் பெருங்கடல் எரிமலை வளையமே]] உலகின் வெடிப்பு எரிமலை மண்டலங்களில் மிகப்பெரியது.
வரி 47 ⟶ 48:
[[பதினேழாம் நூற்றாண்டு|பதினேழாம் நூற்றாண்டில்]] [[டச்சு]]க் காரர்கள் [[தெற்கு ஆப்பிரிக்கா|தெற்கு ஆப்பிரிக்கக்]] கடற்பகுதி வழியாக பயணித்து நிலப்பரப்புகளை கண்டுபிடிப்பதிலும் வர்த்தகத்திலும் முன்னணிவகித்தனர்; [[ஏபெல் ஜான்சூன் டாஸ்மான்]] [[டாஸ்மானியா]]வையும் [[நியுஸிலாந்து|நியுஸிலாந்தையும்]] கண்டுபிடித்தார். [[பதினெட்டாம் நூற்றாண்டு|பதினெட்டாம் நூற்றாண்டின்]] அதிக அளவில் நிலப்பரப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. [[அலாஸ்கா]] மற்றும் [[அலியூட்டியன் தீவு]]ப்பகுதிகளில் [[ரஷ்யா|ரஷ்யர்களும்]], [[பாலினேசியா|பாலினேசியப்]] பகுதிகளில் [[பிரெஞ்சு]]க் காரார்களும், [[ஆங்கிலேயர்கள்]], [[ஜேம்ஸ் குக்]]கின் மூன்று கடற்பயணங்கள் ([[தெற்கு அமைதிப் பெருங்கடல்]] மற்றும் [[ஆஸ்திரேலியா]], [[ஹவாய்]], மற்றும் [[வட அமேரிக்கா]] மற்றும் [[அமைதிப் பெருங்கடல் வடமேற்கு]])
 
[[பத்தொன்பதாம் நூற்றாண்டு|பத்தொன்பதாம் நூற்றாண்டின்]] மத்தியில் வேகமாக வளர்ந்த [[ஏகாதிபத்தியக் கொள்கை]]யின் காரணமாக [[ஓசியானியா]]வின் பெரும்பான்மைப் பகுதிகளை [[பிரிட்டன்]], [[பிரான்சு]], மற்றும் [[அமேரிக்க ஐக்கிய நாடுகள்]] ஆட்கொண்டன. [[எச்.எம்.எஸ்.பீகிள்]], (1830களில்) மற்றும் [[சார்ல்ஸ் டார்வின்]]; 1870 களில் [[எச்.எம்.எஸ். சான்சிலர்]]; [[யு.எஸ்.எஸ்.டஸ்கராரோ]] (1873-761873–76); ஜெர்மானிய [[கேசெல்]] (1874-761874–76) ஆகியவர்களால் கடல் ஆராய்ச்சியில் பல முக்கிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. 1898 - ல் [[பிலிப்பைன்ஸ்|பிலிப்பைன்சை]] அமேரிக்கா எடுத்துக்கொண்ட போதும், [[மேற்கத்திய அமைதிப் பெருங்கடல்|மேற்கத்திய அமைதிப் பெருங்கடலை]] 1914இல் [[ஜப்பான்|சப்பான்]] கட்டுப்படுத்தியதோடல்லாமல், இரண்டாம் உலகப்போரில் மேலும் பல [[தீவு]]களை அது கைப்பற்றியது. போருக்குப் பிறகு அமேரிக்காவின் [[அமைதிப் பெருங்கடற்கப்பற்படை]] கடற்பரப்பின் தலைவன் போல் தோன்றியது.
 
தற்போது பதினேழு சுதந்திர [[நாடுகள்]] அமைதிப் பெருங்கடலில் உள்ளன. அவை, [[ஆஸ்திரேலியா]], [[பிஜி]], [[ஜப்பான்]], [[கிரிபாட்டி]], [[மார்ஷல் தீவுகள்]], [[மைக்ரோனேசியா]], [[நௌரு]], [[நியுசிலாந்து]], [[பலாவு]], [[பப்புவா நியூகினியா]], [[பிலிப்பைன்ஸ்]], [[சாமொவா]], [[சாலமன் தீவுகள்]], [[சீனக் குடியரசு]] ([[தைவான்]]) [[டோங்கா]], துவாலு, மற்றும் [[வனுவாட்டு]]. இவைகளில் பதினொரு நாடுகள் [[1960]] முதல் முழு சுதந்திரம் அடைந்தன. [[வடக்கு மெரியானா தீவுகள்]] சுய ஆட்சி பெற்றுள்ள போதிலும் அதன் [[வெளியுறவு]] கட்டுப்பாடு [[அமேரிக்கா]] வசமுள்ளது. [[குக் தீவுகள்]] மற்றும் [[நையு]] ஆகியன இதே வித கட்டுப்பாடில் [[நியுஸிலாந்து]] வசமுள்ளது. மேலும் அமைதிப் பெருங்கடலில் ஒரு அமேரிக்க மாநிலமான [[ஹவாய்]] மேலும் பல தீவுப் பிரதேசங்களும், [[ஆஸ்திரேலியா]], [[சிலி]], [[இக்குவேடர்]], [[பிரான்சு]], [[ஜப்பான்]], [[நியுஸிலாந்து]], [[ஐக்கியப் பேரரசு]] மற்றும் [[அமேரிக்க ஐக்கிய நாடுகள்]] ஆகியவற்றின் கட்டுப்பாட்டு பிரதேசங்களும் உள்ளன.
வரி 74 ⟶ 75:
 
== இவற்றையும் பார்க்கவும் ==
 
* [[பெருங்கடல்]]
* [[புவியியல்]]
 
== ஆதாரம் ==
 
* [[:en:Pacific ocean|ஆங்கில விக்கிபீடியா கட்டுரை]]
 
{{பெருங்கடல்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/அமைதிப்_பெருங்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது