கொல்லி மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Disambiguated 10 links
வரிசை 11:
 
==வரலாற்றுக் குறிப்புகள்==
பழந்தமிழ் நூல்களான ''[[சிலப்பதிகாரம்]]'', ''[[மணிமேகலை (காப்பியம்)|மணிமேகலை]]'', ''[[புறநானூறு]]'', ''[[ஐங்குறுநூறு]]'' முதலியவற்றில் கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் [[200|கிபி 200] இல், இந்தப் பகுதியை [[கடையெழு வள்ளல்கள்|கடையெழு வள்ளல்]]களில் ஒருவனான [[ஓரி|வல்வில் ஓரி]] ஆண்டு வந்தார். ஒரே அம்பில் [[சிங்கம்]], [[கரடி]], [[மான்]] மற்றும் [[காட்டுப் பன்றி]]யைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து [[வன்பரணர்]] என்னும் புலவர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது. வல்வில் ஓரியைப் பற்றி அவர் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். [[கழைதின் யானையார்]] என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்றும் புறநானூற்றில் உள்ளது.
 
[[இராமாயணம்|இராமாயணத்தில்]] [[சுக்ரீவன்]] ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.
 
===சங்ககாலத்தில் கொல்லிமலை===
[[அரிசில் கிழார்]], [[இளங்கீரனார்]], [[ஔவையார் (சங்ககாலப் புலவர்)|ஔவையார்]], [[கல்லாடனார் (சங்க காலம்)|கல்லாடனார்]], [[குறுங்கோழியூர் கிழார்]], [[தாயங்கண்ணனார்]], [[பரணர், சங்ககாலம்|பரணர்]], [[பெருங்குன்றூர் கிழார், சங்கப்புலவர்|பெருங்குன்றூர் கிழார்]], [[பெருஞ்சித்திரனார்]], [[மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்]] ஆகிய புலவர்கள் கொல்லிமலையைப் பற்றிப் பாடியுள்ளனர்.
 
====கொல்லிமலைப் பகுதியை ஆண்ட அரசர்கள்====
வரிசை 59:
::- கல்லாடனார் – அகம் 209
* [[கொல்லிப்பாவை]] பார்க்க.
* ஒப்புநோக்குக [[ஆய் நாடு|ஆய்]] [[பொதிய மலை|பொதியமலை]]ச் [[சூர்மகள்]] – பரணர் அகம் 198
 
====கொல்லிமலையின் அழகும் ஒப்புமையும்====
வரிசை 88:
{{துப்புரவு}}
===ஆகாய கங்கை அருவி===
கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் [[ஆகாயகங்கை அருவி|ஆகாய கங்கை]] அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 [[அடி (அளவை)|அடி]] உயரமுடைய இந்த அருவியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது.
[[படிமம்:Agayagangai.jpg|thumb|right|250px|ஆகாயகங்கை அருவி]]
 
வரிசை 101:
 
===முருகன் கோவில்===
[[அருணகிரிநாதர்|அருணகிரிநாதரின்]] [[திருப்புகழ் (அருணகிரிநாதர்)|திருப்புகழ்]] பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேட்டுவர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். [[சிவன்]], [[பார்வதி]], [[விஷ்ணு]], [[இடும்பன்]] மற்றும் [[விநாயகர்|விநாயகருக்கும்]] இங்கு ஆலயங்கள் உள்ளன.
 
====படகு சவாரி====
வரிசை 111:
 
===வல்வில் ஓரி பண்டிகை===
வருடம் தோறும் [[ஆடி (மாதம்)|ஆடி]] மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரியின் நினைவாக ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது.
 
==போக்குவரத்து==
[[File:Kolli Hills Waterfalls.JPG|210px|right]]
நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. கொல்லிமலைக்கு [[நாமக்கல்]], [[சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம்|சேந்தமங்கலம்]], [[இராசிபுரம்]] மற்றும் [[சேலம்]] நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும். சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர். கார் & வேன்களில் சுற்றுலா செல்வோரும் மலைப்பாதையில் கவனமாக செல்வது நன்று.
 
2 அல்லது 3 கொண்டை ஊசி வளைவுகளுடன் அபாயமற்ற மாற்று மலைப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கொல்லி_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது