தனிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி image added
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Periodic table.svg|450px|thumbnail|right|இயற்கையில் காணப்படும் தனிமங்களையும் செயற்கையாக உருவாக்கிய தனிமங்களையும் சீரான ஒரு முறைப்படி அடுக்கப்பட்ட [[தனிம அட்டவணை]] ]]
[[வேதியியல்|வேதியியலில்]] '''தனிமம்''' (இலங்கை வழக்கு: '''மூலகம்''') என்பது அடிப்படையான தனிப்பட்ட ஒருவகை அணு ஆகும். ஒவ்வொரு தனிமத்திற்கும் ஓர் அணு எண் உண்டு. இந்த அணுவெண் அணுக்கருவில் உள்ள [[நேர்மின்னி]]களின் (புரோட்டான்கள்) எண்ணிக்கை ஆகும். இது ஓவ்வொருஒவ்வொரு தனிமத்திற்கும் ஒரு தனிச்சிறப்பான எண். பரவலாக அறியப்படும் [[ஹைட்ரஜன்]] (இலங்கைத் தமிழ்: ஐதரசன்), [[ஆக்ஸிஜன்]] (இலங்கைத் தமிழ்: ஒட்சிசன்), [[நைட்ரஜன்]] (இலங்கைத் தமிழ்: நைதரசன்), [[தங்கம்]], [[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]], [[இரும்பு]] போன்றவை வெவ்வேறு தனிமங்கள் ஆகும்.
 
நீர் என்பது இரு தனிமங்கள் சேர்ந்த ஒரு [[மூலக்கூறு]] ஆகும். நீரானது இரு ஹைட்ரஜன் அணுக்களும், ஓர் ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்த ஒரு மூலக்கூறு. உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பானது சோடியம் என்னும் தனிமமும், [[குளோரின்]] என்னும் தனிமமும் சேர்ந்த [[சோடியம் குளோரைடு]] என்னும் ஒரு மூலக்கூறு. நம் உடல் உட்பட, நாம் அறியும் எல்லாப் பொருட்களும் தனிமங்களாலும், தனிமங்கள் சேர்ந்த மூலக்கூறுகளாலும் ஆனவையே.
 
தனிமங்கள் என்பது புவிக்கோளில் மட்டும் அல்லாது சூரியன் நிலவு , நட்சத்திரங்கள் ஆகிய அனைத்திலும் இருப்பவை ஆகும்.
 
2006 ஆம் ஆண்டு இறுதி வரையிலும் மொத்தம் 117 தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றுள் அணுவெண் 1 கொண்ட ஹைட்ரஜன் முதலாக அணுவெண் 94 கொண்ட [[புளுட்டோனியம்]] வரை உள்ள 94 தனிமங்களும் இயற்கையில் கிடைப்பன. எஞ்சியுள்ளன செயற்கையாக ஆய்வகங்களில் மிக மிகச் சிறிதளவு செய்து ஆய்வு செய்யப்படுவன. அணுவெண் 83 கொண்ட [[பிஸ்மத்]] என்னும் தனிமமும் அதற்கு அதிகமான அணுவெண் கொண்ட தனிமங்களும் நிலையற்ற வடிவம் கொள்வன. இயற்கையாகவே [[அணுச்சிதைவு]] உற்று, பிற தனிமங்களாக காலப்போக்கில் மாறுவன.
"https://ta.wikipedia.org/wiki/தனிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது