தியாகராஜ பாகவதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
 
அதன்பிறகு பாகவதர் நடிப்பில், [[நவீன சாரங்கதாரா]] (1936), [[சத்தியசீலன்]] (1936 - பாகவதர் இரட்டை வேடமேற்று நடித்தது), [[சிந்தாமணி (திரைப்படம்)|சிந்தாமணி]] (1937), [[அம்பிகாபதி (திரைப்படம்)|அம்பிகாபதி]] (1937), [[திருநீலகண்டர் (திரைப்படம்)|திருநீலகண்டர்]] (1939), [[அசோக் குமார் (திரைப்படம்)|அசோக் குமார்]] (1941), [[சிவகவி]] (1943), [[ஹரிதாஸ்]] (1944) ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக வெளிவந்தன.
 
ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பான "வால்மீகி'' படத்தில், எம்.கே.தியாகராஜ பாகவதரும், யு.ஆர்.ஜீவரத்தினமும் இணைந்து நடித்தனர். படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் சிறை செல்ல நேரிட்டதால், அவருக்கு பதிலாக ஹொன்னப்ப பாகவதர் "வால்மீகி''யாக நடித்தார்.ஜெமினி, ஏவி.எம்., மாடர்ன் தியேட்டர்ஸ் ஆகியவற்றுக்கு இணையாக, தமிழில் பல வெற்றிப்படங்களைத் தயாரித்த நிறுவனம் "ஜுபிடர் பிக்சர்ஸ்.'' 1941-ம் ஆண்டு ஜுலை முதல் தேதி இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. எம்.சோமசுந்தரம், எஸ்.கே.மொகிதீன் ஆகிய இருவரும் இதன் பங்குதாரர்கள்.இவர்கள் 1926-ம் ஆண்டில் இருந்தே இணைபிரியாத நண்பர்கள். திருப்பூரில், தானிய வியாபாரம், ரைஸ் மில், இயந்திர சாமான்கள் விற்பனை, தேயிலை கம்பெனி என்று பல வியாபாரங்களில் ஈடுபட்டார்கள். திறமையாலும், கடும் உழைப்பாலும் முன்னேறினார்கள்.
இருவருக்குமே சினிமா தொழிலில் நாட்டம் உண்டு. 1935-ல் "ஸ்ரீசண்முகானந்தா டாக்கீஸ்'' என்ற படக்கம்பெனியை மற்றும் சிலருடன் சேர்ந்து தொடங்கி, "மேனகா'' என்ற படத்தை தயாரித்தனர்.இந்தப் படத்தில் டி.கே.எஸ். சகோதரர்கள், எம்.எஸ்.விஜயாள், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் நடித்தனர். ராஜா சாண்டோ டைரக்ட் செய்தார்.இந்தப்படத்தில் இன்ஸ்பெக்டராக சோமுவும், டாக்டராக மொகைதீனும் நடித்தனர்."மேனகா'' வெற்றிப்படமாக அமைந்தது. எனினும், பங்குதாரர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டதால், சோமுவும், மொகிதீனும் விலகி வேறு சிலருடன் சேர்ந்து "ஜுபிடர் பிக்சர்ஸ் லிமிடெட்'' என்ற கம்பெனியைத் தொடங்கினார்கள். "சந்திரகாந்தா'', "அனாதைப் பெண்'' என்ற படங்களைத் தயாரித்தார்கள்.
"சந்திரகாந்தா'' வெற்றிப் படம். இதில் காளி என்.ரத்தினம் போலிச் சாமியாராக பிரதான வேடத்தில் நடித்தார். பி.யு.சின்னப்பா சிறு வேடத்தில் நடித்தார்.
இதன்பின், பங்குதாரர்களுக்குள் தகராறு ஏற்படவே, சோமுவும், மொகிதீனும் விலகினார்கள். கொஞ்ச காலம் படத்தொழிலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார்கள். தானிய வியாபாரத்தை மொகிதீன் கவனித்தார்.
 
சேலம் சண்முகா பிலிம்ஸ் கூட்டுறவுடன் "பூலோக ரம்பை'' என்ற படத்தை சோமு தயாரித்தார். இந்தப்படம் வெற்றி பெற்றது.
நண்பர்கள் இருவரும், மீண்டும் படத்தொழிலில் முழு மூச்சுடன் இறங்க முடிவு செய்தனர். 1941-ல் `ஜுபிடர் பிக்சர்ஸ்' நிறுவனத்தை தொடங்கினர். முதல் படமாக "கண்ணகி''யைத் தயாரிக்க முடிவு செய்தனர்.
 
இப்படத்தில் கண்ணகியாக கண்ணாம்பாவும், கோவலனாக பி.யு.சின்னப்பாவும் நடித்தனர். என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ.மதுரமும் நகைச்சுவை விருந்தளித்தனர். இளங்கோவன் அற்புதமாக வசனம் எழுதினார். `ஜ×பிடர்' சோமுவும் ஆர்.எஸ்.மணியும் டைரக்ட் செய்தனர்."கண்ணகி'' படம் மகத்தான வெற்றி பெற்றது.பின்னர் "குபேரகுசேலா'', "மஹாமாயா'' ஆகிய படங்களை ஜுபிடர் எடுத்து, வெற்றிப்பயணத்தைத் தொடர்ந்தது.1944-ம் ஆண்டில் ராயல் டாக்கீஸ் தயாரிப்பில் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "ஹரிதாஸ்'' படம் வெளிவந்து, இமாலய வெற்றி பெற்றது.("ஹரிதாஸ்'', 1944 தீபாவளிக்கு வெளிவந்தது. சென்னை பிராட்வே தியேட்டரில் மொத்தம் 110 வாரங்கள் - அதாவது 768 நாட்கள் ஓடியது. 3 தீபாவளிகளைக் கண்ட படம்.)
 
"ஹரிதாஸ்'' படம் வெளிவருகிற வரை, ஒரு சமயத்தில் ஒரே படத்தில் நடிப்பது என்ற வழக்கத்தைக் கொண்டிருந்தார், பாகவதர். "ஹரிதாஸ்'' படத்தின் மகத்தான வெற்றியினால், பாகவதரை ஒப்பந்தம் செய்ய ஏராளமான பட அதிபர்கள் படையெடுத்தனர்.சினிமா தொழில் நுட்பத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்ததால், ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருந்தது. எனவே, 10 படங்களில் நடிக்க பாகவதர் ஒப்பந்தமானார்.ஒரு நடிகர், 10 படங்களில் நடிக்க ஒரே சமயத்தில் ஒப்பந்தமானது, அக்காலக்கட்டத்தில் அகில இந்தியாவிலும் நடந்திராத அதிசயமாகும்.பாகவதர் ஒப்பந்தமான படங்களில் ஜுபிடரின் "வால்மீகி''யும் ஒன்று.கொள்ளைக்காரனாக இருந்து, பிறகு முனிவரானவர் வால்மீகி.பாகவதருக்கு ஜோடியாக நடிக்க, நடிகை யு.ஆர்.ஜீவரத்தினம் ஒப்பந்தமானார். சொந்தமாக பாடி நடித்த ஒருசில நடிகைகளில் ஜீவரத்தினமும் ஒருவர். அவர் முதன் முதலாக பாகவதருடன் இணைந்து நடித்ததால், ரசிகர்களிடம் "வால்மீகி'' பெரிய எதிர்பார்ப்பைஏற்படுத்தியது.டி.ஆர்.ராஜகுமாரி, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரும் இப்படத்திற்கு ஒப்பந்தம் ஆயினர்."வால்மீகி'' படப்பிடிப்பு தொடங்கியது. பாகவதரும், ஜீவரத்தினமும் நடித்த சில காட்சிகள் படமாக்கப்பட்டன.
 
இந்த நிலையில் "இந்து நேசன்'' என்ற மஞ்சள் பத்திரிகையின் ஆசிரியரான லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாகவதர் 1944 டிசம்பர் 28-ந்தேதி கைது செய்யப்பட்டார். மறுநாள் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் கைதானார். இரு பெரும் கலைஞர்கள் கைதானது கண்டு தமிழகமே அதிர்ச்சி அடைந்தது.
பாகவதரும், கிருஷ்ணனும் விரைவில் விடுதலை ஆகி விடுவார்கள் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.
பாகவதர் வந்து விடுவார் என்று கருதி, "வால்மீகி'' படப்பிடிப்பை சிறிது காலம் ஜுபிடர் நிறுவனம் நிறுத்தி வைத்தது. ஆனால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால், வேறு வழியின்றி வால்மீகியாக ஹொன்னப்ப பாகவதரை நடிக்க வைத்து, படத்தை முடிக்க சோமுவும், மொகிதீனும் முடிவு செய்தனர்.
ஹொன்னப்ப பாகவதர், கன்னடத்தில் பிரபல நடிகர். சில தமிழ்ப்படங்களிலும் நடித்திருந்தார். தியாகராஜ பாகவதர் நடித்த "அம்பிகாவதி''யில் அரசவையில் பாடகராக கச்சேரி செய்வார்.
 
சொந்தக் குரலில் பாடி நடிப்பவர் என்ற முறையில், அவர் தேர்வு செய்யப்பட்டார். அவர் நடித்த "வால்மீகி'' 13-4-1946-ல் வெளிவந்து, ஓரளவு வெற்றிகரமாகவே ஓடியது.
 
==லட்சுமிகாந்தன் கொலை==
"https://ta.wikipedia.org/wiki/தியாகராஜ_பாகவதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது