"பேச்சு:வட இலங்கை முசுலிம்களின் கட்டாய வெளியேற்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

::முழு வடமாகாணத்திலும் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டால் என்பது சரியாகத் தெரியவில்லை ஏனெனில் வவுனியா பட்டாணிச்சூர் மற்றும் செட்டிக்குளம் பகுதியில் உள்ளவர்கள் வெளியேறியமாதிரித்தெரியவில்லையே ஆயினும் வவுனியா [[மன்னார்]] வீதியில் இருந்த முஸ்லீம்கள் வெளியேறி அனுராதபுரம் மாவட்டத்தில் குடியேறியுள்ளனர். யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளியேறியவர்கள் பெரும்பாலும் [[புத்தளம்|புத்தளத்திற்கும்]] [[வவுனியா]]வில் இருந்து வெளியேறியவர்கள் [[அனுராதபுரம்|அனுராதபுரத்திலும்]] அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர் என்பதுதான் சரியானது. தலைப்பை மாற்றவேண்டும். --[[பயனர்:உமாபதி|Umapathy]] 15:37, 11 ஜூன் 2007 (UTC)
 
//யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் "முசுலிம்கள் துரோகிகள் என்றும், காட்டிக்கொடுப்பவர்கள் என்றும் தமிழ் மக்களிடையே ஒரு தேய்வழக்கு வழங்கி வந்தது" என எழுதியுள்ளது.// இந்த வசனம் இந்தக் கட்டுரைக்கு தேவையற்றது. இது முஸ்லிம்கள் தொடர்பாக தவறான எண்ணத்தை தோற்றுவிக்க கூடியது. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு என்பது முழுமையாக விடுதலைப் புலிகள் சார்பானதாகவே இயங்கியது. இங்கு முஸ்லிம்கள் காட்டிக் கொடுப்பவர்கள் என்ற வசனத்துக்குப் பதிலாக // முஸ்லிம்கள், பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபடும் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களாக இருந்ததனால் விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை துரோகிகளாக பார்த்தார்கள்// என்பதுதான் உண்மை. அதேநேரம் பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளை, போராளிகள் என்று வேறு கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆகவே ஒரு இனத்தை குற்றமின்றி தாக்கும் இவ்வாறான சொற்பிரயோகங்கள் தவிர்க்கப்பட வேண்டும். கட்டுரையகள் நடுநிலை பேணப்பட வேண்டும். --[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 10:35, 9 ஆகத்து 2016 (UTC)
 
:பசுலி, நீங்கள் முதலில் ஈழப்போராட்ட வரலாற்றை முழுமையாகப் படித்து விட்டு எழுதுங்கள். தென்னிலங்கையில் இருந்து வரும் அரசசார்பு, லங்காபுவத் செய்திகளை மட்டும் படித்து விட்டு எழுத வேண்டாம். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு பற்றி உங்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான். பெயரில் யாழ்ப்பாணம் என்று இருந்தவுடன் அதற்கு புலிகள் முத்திரை குத்துவது தென்னிலங்கையில் வழக்கம். போர் முடிந்து ஏழு ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. இன்னும் புலிப் பேச்சுப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 10:58, 9 ஆகத்து 2016 (UTC)
 
:உங்கள் விருப்பம் என்னவென்றால் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என விக்கிக் கட்டுரைகளில் எழுத வேண்டும். அவர்கள் போராளிகள் என எழுதக் கூடாது. அப்படித்தானே? இதுதானே நீங்கள் விரும்பும் நடுநிலை?--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 11:34, 9 ஆகத்து 2016 (UTC)
 
பயங்கரவாதிகளை பயங்கரவாதிகள் என்று கூறுவதில் என்ன தவறு?
595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2102701" இருந்து மீள்விக்கப்பட்டது