"பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,219 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
போராளி என்ற சொல் நீங்க ஏற்றுக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் நடுநிலை சொல் தான். பயங்கரவாதி என்பது சார்பு நிலை சொல். அதே போல் அகிம்சாவாதி என்று சொல்வதும் சார்பு நிலைச்சொல்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 11:06, 11 ஆகத்து 2016 (UTC)
 
தமிழ் விக்கிப்பீடியா திசை மாறி பயணிப்பதாக உணர்கிறேன். விடுதலைப் புலிகளுடன் சம்பந்தமப்பட்ட கட்டுரைகள் அனைத்துமே தவறான கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன. பல பயங்கரவாதிகளை போராளிகள் என்றும், தேசியம் தமழீழம் என்றும், சிங்களப் படை என்றும், இராணுவம் மீட்ட பகுதிகள் என்று வரவேண்டிய சொற்கள் இராணுவம் கைப்பற்றியது என்றும் இவ்வாறு நிறைய தவறுகள் பிழைகள் வேண்டுமென்றே புகுத்தப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் விரைந்து திருத்தப்பட வேண்டியவை. நான் இலங்கையன் என்ற வகையில் இவை அனைத்தையும் தாய் நாட்டிற்கு எதிரான எண்ணத்தை விதைக்கக் கூடியதாக நாட்டிற்கு அவப் பெயரை ஏற்படுத்தக்கூடியதாகவே பார்க்கிறேன். இதனால் பாதிக்ப்பட போவது மற்றொரு சந்ததியினரே. இது விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான வலைத்தளம் அல்ல. இதில் நடுநிலைமை, உண்மைகள் எடுதப்பட வேண்டும். இந்திய சகோதரர்களிடம் கேட்கிறேன். கஷ்மீர் மோதலில் ஈடுபடக் கூடியவர்கள் போராளிகளா? அவர்களை எந்தவொரு இந்தியர்களும் ஏற்றுக் கொள்கிறார்களா? தமிழகத்தின் எந்தவொரு ஊடகத்திலாவது அவர்களை போராளிகள் என்று கூறுகிறார்கள? பயங்கரவாதத்தை யார் மேற்கொண்டாலும் எஅது பயங்கரவாதம் தான். ஆகவே [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]],[[பயனர்:Ravidreams|அ. ரவிசங்கர்]], [[பயனர்:Sundar|சுந்தர்]] உங்களிடம் இது தொடர்பில் விரைந்து நடுநிலையை எதிர்பார்க்கின்றேன்.--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 11:21, 11 ஆகத்து 2016 (UTC)
 
== தொடக்க ஆண்டு? ==
595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2103416" இருந்து மீள்விக்கப்பட்டது