பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 168:
 
:பசுலி, உங்கள் பயங்கரவாதி என்ற வாதம் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. உங்கள் சிறீலங்காவில் வெளியிடப்படும் அனைத்து தமிழ் ஊடகங்களும் (தென்னிலங்கை ஊடகங்கள், ஏன் அரசுப் பத்திரிகையான தினகரனும்) முன்னாள் போராளிகள் என்றுதான் விளிக்கின்றன. எப்போவாவது புலிகளைப் பயங்கரவாதிகள் என்று விளித்ததில்லை. சிங்கள ஊடகங்கள் மட்டுமே நூற்றுக்கு நூறு பயங்கரவாதிகள் என அழைக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் எழுதும் தமிழர்கள், மற்றும் நடுநிலையாளர்கள் (இசெத் உசைன் உட்பட) Militants என்று தான் எழுதுகின்றனர். ஆங்கில ஊடகங்களில் எழுதும் பெரும்பாலான (துவேசம் பிடித்த) சிங்களவர்கள் பயங்கரவாதிகள் என எழுதுகின்றனர். முசுலிம்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. தேவைக்கேற்ப அவர்களின் நிலைப்பாடு மாறுபடும். முகா தலைவர் போராளிகள் என்று தான் பெரும்பாலான நேரங்களில் விளிக்கிறார். தமிழ் பிபிசியைக் கேட்டிருக்கிறீர்களா? ஆங்கில பிபிசி எவ்வாறு அழைக்கிறது? மேலும், சந்திரிக்கா பண்டாரநாயக்கா அண்மையில் ஒரு கூட்டத்தில் பிரபாகரனை திரு. பிரபாகரன் என அழைத்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அப்படி இலங்கையில் நிலைமை இருக்க நீங்கள் புதிதாக '''தமிழ்''' விக்கிப்பீடியாவில் புலிகளைப் பயங்கரவாதிகள் எனக் கூறவேண்டும் என்கிறீர்கள். இலங்கையில் இவ்வாறு நீங்கள் பரப்புரை செய்வீர்களா? (இலங்கையில் புலிகள் தடை செய்யப்படவில்லை என நீங்கள் அறிவீர்களா?) இந்த மாதிரியான விவாதங்களில் உங்கள் நேரத்தை செலவழிப்பதை விடுத்து தமிழ் விக்கிப்பீடியாவில் ஆக்கபூர்வமாக ஏதாவது பங்களியுங்கள். நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 11:56, 11 ஆகத்து 2016 (UTC)
 
::{{like}}--[[பயனர்:500eMc2|500eMc2]] ([[பயனர் பேச்சு:500eMc2|பேச்சு]]) 12:06, 11 ஆகத்து 2016 (UTC)
 
== தொடக்க ஆண்டு? ==
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:தமிழீழ_விடுதலைப்_புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழீழ விடுதலைப் புலிகள்" page.