ஓமோ இரெக்டசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஓமோ இரக்டசு''' (Homo erectus) என்பது, ஒமினிட் குடும்பத்தைச் சேர்ந்த அழிந்துவிட்ட ஒர் இனம். பிளீசுட்டோசீன் நிலவியல் காலத்தின் பெரும் பகுதியூடாக இவ்வினம் வாழ்ந்திருந்தது. இதன் மிக முந்திய புதைபடிவச் சான்றுகள் 1.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியவை. மிகப் பிந்திய சான்றுகள் 70,000 ஆண்டுகளுக்கு முந்தியவை. [[ஆப்பிரிக்கா]]வில் தோன்றியதாகக் கருதப்படும் ''ஓமோ இரக்டசு'', [[ஜார்ஜியா]], [[இந்தியா]], [[இலங்கை]], [[சீனா]], [[இந்தோனீசியா]] ஆகியவை உள்ளடங்கலாக யூரேசியப் பகுதி முழுவதும் பரந்து குடியேறின.<ref name="Hazarika">{{cite news|last=Hazarika|first=Manji|title=''Homo erectus/ergaster'' and Out of Africa: Recent Developments in Paleoanthropology and Prehistoric Archaeology|date=16–30 June 2007|url=http://www.himalayanlanguages.org/files/hazarika/Manjil%20Hazarika%20EAA.pdf}}</ref><ref name="Chauhan">Chauhan, Parth R. (2003) [http://www.assemblage.group.shef.ac.uk/issue7/chauhan.html#distribution "Distribution of Acheulian sites in the Siwalik region"] in ''An Overview of the Siwalik Acheulian & Reconsidering Its Chronological Relationship with the Soanian – A Theoretical Perspective''. assemblage.group.shef.ac.uk</ref>
 
இதன் வகைப்பாடு, மூதாதைகள், சந்ததிகள் என்பன குறித்த விவாதங்கள் இன்னும் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக ''[[ஓமோ இகாசுட்டர்]]'' இனத்துக்கும் இதற்கும் இடையிலான தொடர்பு குறித்து இரண்டு நிலைகள் உள்ளன. முதலாவது, ''ஓமோ இரக்டசு'', ''ஓமோ எகாசுட்டர்'' ஆகிய இரண்டும் ஒரே இனத்தையே குறிக்கும் என்றும் அதனால், ''ஓமோ இரக்டசு'' ''[[ஓமோ ஈடில்பேர்கென்சிசு]]'', ''[[ஓமோ நீன்டர்தாலென்சிசு]]'', ''[[ஓமோ சப்பியன்சு]]'' ஆகியவற்றின் நேரடி மூதாதை ஆகும் என்னும் நிலைப்பாடு. இரண்டாவது, ''ஓமோ இரக்டசு'' ஒரு ஆசிய இனம், ஆப்பிரிக்க ''ஓமோ இகாசுட்டர்'' இனத்தில் இருந்து வேறுபட்டது என்ற நிலைப்பாடு.<ref name="Hazarika"/><ref>See overview of theories on [[human evolution]].</ref><ref>Klein, R. (1999). ''The Human Career: Human Biological and Cultural Origins''. Chicago: University of Chicago Press, ISBN 0226439631.</ref>
 
தொல்மானிடவியலாளர்களில் இன்னொரு பிரிவினர் இன்னொரு கருத்தை முன்வைக்கின்றனர். இது முன்னர் குறிப்பிட்ட முதலாவது நிலைப்பாட்டுக்கு மாற்றீடாக உள்ளது. இதன்படி, ''ஓமோ இகாசுட்டர்'' என்பது, ''ஓமோ இரக்டசு''வின் ஆப்பிரிக்க வகை ஆகும். இவர்கள் ஆசிய வகைக்கு ''ஓமோ இரக்டசு சென்சு இசுட்ரிக்டோ'' என்றும் ஆப்பிரிக்க, ஆசிய வகைகளை உள்ளடக்கிய பெரிய வகைக்கு ''ஓமோ இரக்டசு சென்சு லாட்டோ'' என்றும் பெயர் இட்டுள்ளனர்.<!--------><ref>{{cite journal|author=Antón, S. C. |year=2003|title=Natural history of Homo erectus|journal= Am. J. Phys. Anthropol.|volume=122|pages=126–170|doi=10.1002/ajpa.10399}}</ref><ref>{{Cite journal |vauthors=Suwa G, Asfaw B, Haile-Selassie Y, White T, Katoh S, WoldeGabriel G, Hart W, Nakaya H, Beyene Y | doi = 10.1537/ase.061203 | title = Early Pleistocene Homo erectus fossils from Konso, southern Ethiopia | journal = Anthropological Science | volume = 115 | issue = 2 | pages = 133–151 | year = 2007 | pmid = | pmc = }}</ref>
 
[[டிமானிசி]] மண்டையோடுகள் ஆவணப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 2013ல் புதிய விவாதம் ஒன்று தொடங்கியது. டிமானிசி மண்டையோடுகளில் காணப்படும் பெரிய உருவவியல் வேறுபாடுகளைக் கருத்தில் எடுக்கும்போது, முன்னர் வெவ்வேறாக வகைப்படுத்தப்பட்ட மனித மூதாதைகளை, எடுத்துக்காட்டாக ''ஓமோ இகாசுட்டர்'', ''ஓமோ ருடோல்பென்சிசு'', ''ஓமோ அபிலிசு'' போன்றவற்றை, ''ஓமோ இரக்டசு'' இனமாக வகைப்படுத்த வேண்டும் எனச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.<ref name=dmanisiskull5>{{cite journal |title=A Complete Skull from Dmanisi, Georgia, and the Evolutionary Biology of Early Homo |author=David Lordkipanidze, Marcia S. Ponce de Leòn, Ann Margvelashvili, Yoel Rak, G. Philip Rightmire, Abesalom Vekua, Christoph P. E. Zollikofer |journal=Science |date=18 October 2013 |volume= 342 |issue= 6156 |pages= 326–331 |doi= 10.1126/science.1238484 }}</ref><ref name=National_Geographic>{{cite news |last=Switek |first=Brian |date=17 October 2013 |title= Beautiful Skull Spurs Debate on Human History |url=http://news.nationalgeographic.com/news/2013/10/131017-skull-human-origins-dmanisi-georgia-erectus/ |newspaper= National Geographic |accessdate=22 September 2014 }}</ref>
 
 
==மேற்கோள்கள்==
{{Reflist|colwidth=30em}}
 
[[பகுப்பு:ஓமோ இனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓமோ_இரெக்டசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது