ஈத்திரோசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,657 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(*உரை திருத்தம்*)
No edit summary
இயற்கையான இயக்குநீரைப் போன்று விளைவுகளை ஏற்படுத்துகின்ற, இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ உள்ள எந்தவொரு பொருளையும் ஈத்திரோசன் என்றே குறிப்பிடலாம்<ref>{{cite web | title = estrogen (CHEBI:50114) | url = http://www.ebi.ac.uk/chebi/searchId.do?chebiId=50114 | website = ChEBI | accessdate = 13 August 2016}}</ref>. 17-பீட்டா ஈஸ்திரடையோல் ஒரு மிகுந்த ஆற்றல்மிக்க, பரவலாக இருக்கக்கூடிய உள்ளார்ந்த ஈத்திரோசன் என்றாலும், பல்வேறு ஈத்திரோசன் ஆக்கச்சிதைமாற்றப் பொருள்கள் ஈத்திரோசனைப் போன்று இயக்குநீர் செயற்பாடுகளைக் கொண்டிருக்கும். செயற்கையாக உருவாக்கப்படும் ஈத்திரோசன்கள் சில கருத்தடைக் குளிகைகளில், வயது முதிர்ந்த பெண்களுக்கு (மாதவிடாய் நிறுத்தத்திற்குப்பின்) அளிக்கப்படும் ஈத்திரோசன் மாற்றீடு சிகிச்சைகளில், மூன்றாம் பாலினப் பெண்களுக்கு அளிக்கப்படும் ஈத்திரோசன் மாற்றீடு சிகிச்சைகளின் ஒரு பகுதியாக உபயோகப்படுத்தப்படுகின்றன.
 
ஈத்திரோசன் அனைத்து [[முதுகெலும்பி]]களிலும்<ref name="pmid7083198">{{cite journal | author = Ryan KJ | title = Biochemistry of aromatase: significance to female reproductive physiology | journal = Cancer Res. | volume = 42 | issue = 8 Suppl | pages = 3342s–3344s |date=August 1982 | pmid = 7083198 | url = }}</ref> சில [[பூச்சி]]களிலும் இணைத்துருவாக்கப்படுகின்றது.<ref name="Mechoulam_2005">{{cite journal | author = Mechoulam R, Brueggemeier RW, Denlinger DL | title = Estrogens in insects | journal = Cellular and Molecular Life Sciences |date=September 2025 | volume = 40 | issue = 9 | pages = 942–944|doi=10.1007/BF01946450 | url=http://www.springerlink.com/content/tr77034552r222m1/fulltext.pdf}}</ref> இவை இரண்டிலும் ஈத்திரோசன் இருப்பதைக் காண்கையில் ஈத்திரோசன் பாலின இயக்குநீர்கள் கூர்ப்பின் தொன்மையான காலந்தொட்டே இருந்துள்ளதை அறிய முடிகின்றது.
 
பெண்களில் இயற்கையாகக் காணப்படும் மூன்று முதன்மையான ஈத்திரோசன்களின் வடிவங்கள் பின்வருமாறு: ஈஸ்திரோன் (E1), ஈஸ்திரடையோல் (E2), ஈஸ்திரியோல் (E3). இன்னொரு வகையான ஈத்திரோசன் வடிவமான ஈஸ்ததிரோல் (E4) மகப்பேறுகாலங்களில் மட்டும் உருவாகிறது. ஒப்பீட்டளவில், ஆண், பெண் இருபாலரிலும் ஆண்மை இயக்குநீர்களைக் காட்டிலும் ஈத்திரோசன்கள் குறைந்த அளவே இரத்தத்தில் காணப்படுகிறன<ref name="Burger2002">{{cite journal | vauthors = Burger HG | title = Androgen production in women | journal = Fertility and Sterility | volume = 77 Suppl 4 | issue = | pages = S3–5 | year = 2002 | pmid = 12007895 | doi = 10.1016/S0015-0282(02)02985-0 }}</ref>. பெண்களைக் காட்டிலும் ஆண்களில் குறிப்பிடத்தக்க அளவில் குறைவான ஈத்திரோசன்கள் இருந்தாலும், இவை ஆண்களின் உடலியக்கத் தொழிற்பாடுகளில் இன்றியமையாத பங்களிப்பினை அளிக்கின்றன<ref name="pmid11403894">{{cite journal | vauthors = Lombardi G, Zarrilli S, Colao A, Paesano L, Di Somma C, Rossi F, De Rosa M | title = Estrogens and health in males | journal = Molecular and Cellular Endocrinology | volume = 178 | issue = 1-2 | pages = 51–5 | year = 2001 | pmid = 11403894 | doi = 10.1016/S0303-7207(01)00420-8 }}</ref>.
 
பிற இசுடீராய்டுகளைப் போலவே, ஈத்திரோசனும் [[உயிரணு மென்சவ்வு|உயிரணு மென்சவ்வின்]] ஊடாக தடையின்றி பரவக்கூடியது. உயிரணுக்களின் உள்ளே, ஈத்திரோசன் அதன் ஏற்பிகளுடன் (estrogen receptors; ERs) இணைந்து அவற்றைத் தூண்டுகின்றன. இதனால், பல [[மரபணு|மரபணுக்களில்]] அவற்றின் வெளிப்பாடு நெறிமுறைப்படுத்தப்படுகிறது<ref name="isbn1-85996-252-1">{{cite book | vauthors = Whitehead SA, Nussey S | editor = | others = | title = Endocrinology: an integrated approach | edition = | publisher = BIOS: Taylor & Francis | location = Oxford | year = 2001 | origyear = | quote = | isbn = 1-85996-252-1 | oclc = | url = http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?call=bv.View..ShowTOC&rid=endocrin.TOC&depth=10 }}</ref>. இதைத்தவிர உயிரணு மென்சவ்வில் உள்ள, துரித சமிக்ஞைகளைத் தரக்கூடிய, ஜி-புரதம் பிணைந்த சமிக்ஞை ஏற்பிகளைப் (GPR30) போன்ற<ref name="pmid17222505">{{cite journal | vauthors = Prossnitz ER, Arterburn JB, Sklar LA | title = GPR30: A G protein-coupled receptor for estrogen | journal = Mol. Cell. Endocrinol. | volume = 265–266 | pages = 138–42 | year = 2007 | pmid = 17222505 | doi = 10.1016/j.mce.2006.12.010 | pmc = 1847610 }}</ref> மென்சவ்வு ஈத்திரோசன் ஏற்பிகளுடன் (membrane estrogen receptors; mERs) ஈத்திரோசன்கள் இணைந்து அவற்றை விரைவாகத் தூண்டுகின்றன<ref name="pmid23756388">{{cite journal | vauthors = Soltysik K, Czekaj P | title = Membrane estrogen receptors - is it an alternative way of estrogen action? | journal = J. Physiol. Pharmacol. | volume = 64 | issue = 2 | pages = 129–42 | date=April 2013 | pmid = 23756388 | doi = | url = }}</ref><ref name="pmid22538318">{{cite journal | vauthors = Micevych PE, Kelly MJ | title = Membrane estrogen receptor regulation of hypothalamic function |journal = Neuroendocrinology | volume = 96 | issue = 2 | pages = 103–10 | year = 2012 | pmid = 22538318 | pmc = 3496782 | doi = 10.1159/000338400| url = }}</ref>.
 
ஈத்திரோசன், புரோஜெஸ்ட்டிரோன் இயக்குநீர்களுக்கிடையேயுள்ள சமநிலையைப் பொருத்து [[தன்னெதிர்ப்பு நோய்|தன்னெதிர்ப்பு நோய்களின்]] தாக்கம் அல்லது வெளிப்பாடு இருக்கலாம் என்று கருதப்படுகிறது<ref>{{cite journal | url=http://www.nature.com/nrrheum/journal/vaop/ncurrent/full/nrrheum.2014.144.html?WT.mc_id=FBK_NatureReviews | title=Modulation of autoimmune rheumatic diseases by oestrogen and progesterone | author=Hughes GC and Choubey D | journal=Nature Reviews Rheumatology | year=2014 | month=26, ஆகத்து| doi=10.1038/nrrheum.2014.144}}</ref>.
21,634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2104909" இருந்து மீள்விக்கப்பட்டது