எர்பெர்ட்டு பேக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki}} தமிழாக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

02:24, 16 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

சர் எர்பெர்ட்டு பேக்கர், KCIE, FRIBA, (Sir Herbert Baker, சூன் 9, 1862 – பெப்ரவரி 4, 1946) இரு பத்தாண்டுகளுக்கு தென்னாப்பிரிக்க கட்டிடவியலில் பெரும் தாக்கமேற்படுத்திய பிரித்தானியக் கட்டடக் கலைஞர் ஆவார். இவர் புது தில்லியின் மிகவும் அறியப்படும் அரசுக் கட்டிடங்களின் முதன்மை வடிவமைப்பாளராகவும் விளங்கினார். இவர் கென்ட் கவுன்ட்டியின் கோப்யாமில் பிறந்து அங்கேயே இறந்தார்.

சர் எர்பெர்ட்டு பேக்கர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1862-06-09)9 சூன் 1862
கோப்யாம், கென்ட், இங்கிலாந்து
இறப்பு4 பெப்ரவரி 1946(1946-02-04) (அகவை 83)
கோப்யாம்
பணி
கட்டிடங்கள்இந்தியா இல்லம், இரண்டன், கிளைன், மில்சு & கோ., தென்னாப்பிரிக்கா இல்லம், மான்டெவியட் இல்லம்,[1][2] யூனியன் பில்டிங்சு, பிரிடோரியா, செயின்ட் ஜான் கல்லூரி, ஜோகானஸ்பேர்க், வையின்பெர்கு ஆண்கள் பள்ளி]]

தென்னாப்பிரிக்காவில் இவர் வடிவமைத்த பல தேவாலயங்கள், பள்ளிகள், இல்லங்களில் பிரிடோரியாவின் யூனியன் பில்டிங்சு, ஜோகானஸ்பேர்க்கின் செயின்ட் ஜான்சு கல்லூரி, வையின்பெர்கு ஆண்கள் பள்ளி, கேப்டவுனின் குரூட் ஷூர் ஆகியன குறிப்பிடத்தக்கன. எட்வின் லூட்டியன்சுடன் இணைந்து புது தில்லியின் ராஷ்டிரபதி பவன், நாடாளுமன்றம் தலைமைச் செயலகத்தின் வடக்கு, தெற்கு வளாகங்கள் போன்றவற்றை வடிவமைத்தார். 1931இல் இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய புதுதில்லி பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் தலைமைநகரமாக அமைந்தது; பின்னர் இதுவே இந்தியாவின் தலைநகரமாயிற்று. மேலும் இவர் கென்யாவின் நைரோபியிலுள்ள பிரின்சு ஆப் வேல்சு பள்ளியின் (தற்போது நைரோபி பள்ளி) நிர்வாகக் கட்டிடங்களை வடிவமைத்துள்ளார். இவரது கல்லறை வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் உள்ளது.

மேற்சான்றுகள்

  1. Dictionary of Scottish Architects
  2. Abramson, Daniel M (May 2009). "Baker, Sir Herbert". Oxford Dictionary of National Biography. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 15 January 2016. வார்ப்புரு:Subscription or membership required
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்பெர்ட்டு_பேக்கர்&oldid=2105902" இலிருந்து மீள்விக்கப்பட்டது