மோகன்தாசு கரம்சந்த் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி (GR) File renamed: File:Young Gandhi.jpgFile:Mahatma Gandhi, age 7.jpg this is not Indira Gandhi at any age
வரிசை 26:
=== இளமை ===
மோகன்தாஸ் காந்தி [[2 அக்டோபர்]] 1869 அன்று இந்திய நாட்டின் [[குஜராத்]] மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி [[குஜராத்தி]]. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான [[கஸ்தூரிபாய்|கஸ்தூரிபாயை]] மணந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார்.
[[படிமம்:YoungMahatma Gandhi, age 7.jpg|thumb|225px|right|இளமை வயதில் காந்தியடிகள், வயது 7, 1876]]
 
பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்தி [[இங்கிலாந்து]] சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி [[மும்பாய்|பம்பாயில்]] சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான [[ராஜ்கோட்]]டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில் [[தென்னாப்பிரிக்கா]]வில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் அப்துல்லாஹ் அன் கோ எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே அங்கு பயணமானார்.
"https://ta.wikipedia.org/wiki/மோகன்தாசு_கரம்சந்த்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது