பட்டாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9:
சீனர்கள் மூங்கில்களையும், மரத்துண்டுகளையும், வெடி மருந்தையும் கொண்டு வானில் சீரிப்பாய்ந்து சென்று வெடித்த வாணங்களை உருவாக்கினர். 1279இல் சீனாவில் ஊடுருவிய மங்கோலியர்கள் இந்த தொழிர் நுட்பத்தை கற்றுக் கொண்டனர்.சீனாவுக்கு வந்துசென்ற ஆராய்ச்சியாளர்கள் இதை அறிந்துகொண்டு தங்கள் நாடுகளில் பரப்பினார்கள். 7ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் ராக்கெட்டுகளை சீன அம்புகள் என்றை குறிப்பிட்டுள்ளனர். 1240ஆம் ஆண்டில் அரேபியர்கள் வெடிமருந்துகள் குறித்து அறிய முயன்றுள்ளனர்.ஹசன் அல் ரம்மா என்பவர் சீனர்களிடமிருந்து வெடிமருந்துகள் பற்றிய தொழில் நுட்பத்தை அறிந்துகொண்டு பட்டாசுகள் குறித்து எழுதியுள்ளார். இத்தாலிய பயனி மார்கோகோலோ இந்த தொழில் நுட்பத்தை ஐரோப்பாவுக்கு கொண்டுசென்றார் என்றும், சிலுவைப் போர்களைத் தொடர்ந்து 1300களில் ஐரோப்பாவில் பட்டாசுகள் அறிமுகமாயின என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
==பட்டாசுகளின் வளர்ச்சி==
1400-களில் இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் பட்டாசு உற்பத்தி துவங்கியது.பிரெஞ்சு பொறியியளாளரான அமேதி பிரென்சுவாஃபிரெசியர் எழுதிய டிரீட்ஸ் ஆன் ஃபயர் ஒர்க்ஸ் என்னும் புத்தகம் 1706 இல் வெளியிடப்பட்டது. அதன்பின் பட்டாசு தயாரிப்பவர்கள் இந்த புத்தகத்தை பின்பற்றியே தயாரித்தனர். தற்போது நாம் பயன்படுத்தும் வண்ணமயமான பட்டாசுகள் தயாரிப்பு 1830இல் துவங்கியது. பல வேதிப் பொருட்களை பயன்படுத்தி இத்தாலியர்கள் வண்ணமயமான பட்டாசுகளை தயாரித்தனர். [[ஏப்ரல் 18 ]]ஐ பட்டாசு கண்டுபிடிக்கப்பட்ட நாளாக சீனாவில் கொண்டாடப்படுகிறது.
 
==சிவகாசி பட்டாசுகள==
1922இல் கல்கத்தாவில் சப்பானை சேர்ந்த சிலர் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்தியாவிலேயே கல்கத்தாவில் மட்டுந்தான் தீப்பெட்டி தயாரிப்பு நடைபெற்று வந்தது. அப்போது சிவகாசியிலிருந்து பி. ஐயன்,ஏ. சண்முகம் ஆகியோர் தீப்பெட்டி தொழிலை கற்றுக்கொள்ள கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் இவர்கள் சிவகாசி திரும்பி 1928இல் தீப்பெட்டி தொழிற்சாலையை உருவாக்கினர். அதன் பின்னரே சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது. இந்தியாவில் 90 விழுக்காடு பட்டாசு தயாரிப்பு சிவகாசியில் மேற்கொள்ளப்படுகிறது. <ref>தி இந்து தமிழ்- வெற்றிக்கோடி இணைப்பு20.10.2014</ref>,
"https://ta.wikipedia.org/wiki/பட்டாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது