ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளம்: கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
Tegel (பேச்சு | பங்களிப்புகள்)
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox President
| name= ஆ. ப. செ. அப்துல் கலாம்
| image=A. P. J. Abdul Kalam in 2008.jpg
| imagesize = 250px
| order=[[இந்தியா]]வின் 11வது [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]]
| term_start=ஜூலை 25, 2002
| term_end= ஜூலை 25, 2007
| vicepresident= [[பைரோன் சிங் செகாவத்]]
| Prime_Minister=[[மன்மோகன் சிங்]]
| predecessor=[[கே. ஆர். நாராயணன்]]
| successor=[[பிரதிபா பாட்டீல்]]
| birth_date= {{birth date|1931|10|15}}<ref>[http://skumar.mitindia.net/success/apj.htm A Brief Biography of Dr. A. P. J. Abdul Kalam]</ref>
| birth_place= [[இராமேஸ்வரம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| party =
| spouse = திருமணம் புரியவில்லை
| Field = விண்வெளிப் பொறியியல்
| Alma Mater = சென்னை தொழினுட்பக் கல்லூரி
| Institutions = [[இஸ்ரோ]] (ISRO) மற்றும் இந்திய அணு ஆராய்ச்சிக் குழு
| religion = [[இசுலாம்]]
| languages spoken= [[தமிழ்]], [[ஆங்கிலம்]]
|death_date = {{death date and age |2015|7|27| 1931|10|15|df=y}}
|death_place = [[சில்லாங்]], [[மேகாலயா]]
| Notable Awards = [[பத்ம பூசன்]] (1981), [[பத்ம விபூசன்]] (1990) [[பாரத் ரத்னா]] (1997)
| signature =
|
|}}
 
'''ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்''' ([[அக்டோபர் 15]], [[1931]] - [[ ஜூலை 27]], [[2015]]) பொதுவாக '''டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்''', என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் [[இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்|11 ஆவது]] [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசு தலைவராக]] பணியாற்றிய இந்திய [[அறிவியல் அறிஞர்|அறிவியலாளரும்]] நிர்வாகியும் ஆவார். கலாம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[இராமேஸ்வரம்]] என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள [[புனித சூசையப்பர் கல்லூரி, திருச்சி|புனித ஜோசப் கல்லூரியில்]] இயற்பியலும் [[சென்னை தொழில்நுட்ப நிறுவனம்|மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில்]] விண்வெளி பொறியியலும் படித்தார்.
 
கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், [[பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு|பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும்]] (DRDO) [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்|இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும்]], (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் ''இந்திய ஏவுகணை நாயகன்'' என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த [[சக்தி நடவடிக்கை|போக்ரான் - II]] அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார். எனினும், சில அறிவியல் வல்லுனர்கள் கலாம் அணு இயற்பியலில் ஆளுமை இல்லாதவர் என்றும், [[ஓமி பாபா|ஹோமி ஜே பாபா]] மற்றும் [[விக்கிரம் சாராபாய்|விக்ரம் சாராபாய்]] அவர்களை பின்பற்றினார் என்றும் கூறினர்.
 
கலாம், இந்தியாவின் முக்கியக் கட்சிகளான [[இந்திய தேசிய காங்கிரசு]] மற்றும் [[பாரதிய ஜனதா கட்சி]]யின் ஆதரவுடன், 2002 ஆம் ஆண்டில் [[இலட்சுமி சாகல்|லட்சுமி சாகலை]] தோற்கடித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் [[பாட்னா]], அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றியதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றினார்.
 
கலாம் தனது [[இந்தியா 2020]] என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். [[தென் கொரியா]]வில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்புப் பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அவர் இந்தியாவின் உயரிய விருதான [[பாரத ரத்னா]] உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்படுகிறார். அவர் 2011 ஆம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக, [[இந்தியாவில் ஊழல்|இந்தியாவில் ஊழலை]] ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு, "நான் என்ன தர முடியும்" என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது, கருணை மனுக்களின் மீது முடிவேதும் எடுக்காமல் இருந்த காரணத்தால், குற்றவாளிகளின் மீதான நடவடிக்கைகள் கால தாமதம் ஆகியதற்காக, விமர்சிக்கப்பட்டுள்ளார்.
 
== ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும் ==
கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில், ஒரு படகுச் சொந்தக்காரரும் [[மரைக்காயர்|மரைக்காயரும்]] ஆன ஜைனுலாப்தீன் அவர்களுக்கும், இல்லத்தரசி ஆஷியம்மா அவர்களுக்கும், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில், மகனாகப் பிறந்தார். அவர் வறுமையான பின்னணியிலிருந்து வந்தவர் ஆனதால், இளம் வயதிலேயே, அவருடைய குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் கிடைப்பதற்காக, வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். அவர் பல மத சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவர் என்றாலும், ஒரு மத வழக்கத்தையே பின்பற்றினார். பள்ளி முடிந்ததும், கலாம் அவரது தந்தையின் வருமானத்திற்குப் பங்களிக்கும் பொருட்டு, செய்தித்தாள்கள் விநியோகத்தில் ஈடுபட்டார். தனது பள்ளிப்பருவத்தில், கலாம் சராசரி மதிப்பெண்களே பெற்றார். என்றாலும், பிரகாசமான மாணவனாகவும், கற்பதில் திடமான ஆர்வமும், படிப்பிற்காக, முக்கியமாக கணக்குப் பாடத்திற்காக, பல மணி நேரங்கள் செலவளிப்பவராகவும், அவர் சித்தரிக்கப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆ._ப._ஜெ._அப்துல்_கலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது