நறுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம், https://en.wikipedia.org/wiki/Shear_mapping-தமிழாக்கம்
 
No edit summary
வரிசை 5:
 
[[காட்டீசியன் ஆள்கூற்று முறைமை|ஆள்கூற்றுகள்]] <math>(x,y)</math> கொண்ட ஒரு புள்ளியை <math>(x + 2y,y)</math> புள்ளிக்கு மாற்றும் கோப்பு ஒரு நறுக்கமாகும். இதில் நகர்வு கிடைமட்டமாக உள்ளது. <math>x</math>-அச்சு நிலைக்கோடு; புள்ளியின் <math>y</math> ஆள்கூறு குறியிடப்பட்டத் தூரம். நிலைக்கோட்டிற்கு இருபுறமும் அமையும் புள்ளிகள், கோட்டின் மாற்றுப்புறத்திற்கு நகர்த்தப்படுகின்றன.
 
நறுக்கத்தைச் [[சுழற்சி (கணிதம்)|சுழற்சியாகத்]] தவறாகக் கருதிவிடக் கூடாது. ஒரு நறுக்கத்தின் கீழ் ஒரு தளத்தின் புள்ளிகளின் ஒரு தொகுதியில், அப்புள்ளிகளுக்கிடையேயுள்ள [[கோணம்|கோணங்கள்]] அனைத்தும் மாறுபடும்; நகர்வின் திசைக்கு இணையாக இல்லாத அப்புள்ளிகளின் [[கோட்டுத்துண்டு]]களின் நீளங்களும் மாறுபடும். இதனால் நறுக்கத்தினால் வடிவவியல் வடிவங்கள் மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, [[சதுரம்|சதுரங்கள்]] இணைகரங்களாகவும் [[வட்டம்|வட்டங்கள்]] [[நீள்வட்டம்|நீள்வட்டங்களாகவும்]] உருமாறும். எனினும் நறுக்கத்தால் வடிவவியல் வடிவங்களின் [[பரப்பளவு]] மாறுவதில்லை; ஒருகோட்டுப்புள்ளிகளுக்கு இடைப்பட்ட சார் தூரங்களும் மாறுவதில்லை.
 
[[File:Laminar_shear.svg|thumb|200px|right|[[பாய்ம இயக்கவியல்]] சார் நகர்வில் இரு இணையான தகடுகளுக்கு இடையேயான பாய்மப் பாய்வினை நறுக்கம் விவரிக்கிறது.]]
 
முப்பரிமாண வடிவவியலிலும் நறுக்கம் இதேமுறையில் வரையறுக்கப்படுகிறது. இடைப்பட்ட தூரம் நிலைக்கோட்டிற்குப் பதில் நிலையான தளத்திலிருந்து அளவிடப்படுகிறது. முப்பரிமாண நறுக்கத்தில் திட வடிவங்களின் கனவளவு பாதுகாக்கப்படுகிறது; ஆனால் நகர்விற்கு இணையான தளவடிவங்கள் தவிர்த்த பிற தளவடிவங்களின் பரப்பளவு மாற்றமடைகிறது.
 
ஒன்றுக்கொன்று இணையாகவும், ஒன்றின் மேற்பக்கமாக மற்றது உள்ளதாகவுமான இரு தகடுகளுக்கு இடைப்பட்ட ஒரு பாய்மத்தின் [[வரிச்சீர் ஓட்டம்|வரிச்சீர் ஓட்டத்தை]] விளக்க நறுக்கம் பயன்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நறுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது